Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

நிறங்கள் மூன்று (பட விமர்சனம்)

படம்: நிறங்கள் மூன்று

நடிப்பு: அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான், அம்மு அபிராமி , துஷ்யந்த்,  சந்தான பாரதி, ஜான்விஜய்

தயாரிப்பு: ஐங்கரன் இன்டர்நேஷனல் கருணாமூர்த்தி

இசை: ஜாக்ஸ்.பிஜாய்

ஒளிப்பதிவு: டிஜோ டாமி

இயக்கம்: கார்த்திக் நரேன்

பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா, நாசர்

மனிதர்களில் மூன்று நிறங்கள் கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்பதை சொல்லும் படம். இங்கு நிறங்கள் என்பது அவர்களின் குணங்களாக  உணர்த்தப்படுகிறது.

அதர்வா சினிமா  இயக்குனர் ஆகும் ஆசையில் பட நிறுவனங்களின  படிகள் ஏறி இறங்குகிறார், பள்ளி ஆசிரியர் ரகுமான் தன் மகள் அம்மு அபிராமியை காணவில்லை என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் சரத்குமாரிடம் புகார் தருகிறார். அம்மு அபிராமியை காதலிக்கும் துஷ்யந்த் காணாமல் போன அபிராமியை தேடி அலைகிறார்..  இந்த மூன்று சம்பவங்களும் வெவ்வேறு பாதைகளில் பயணித்தாலும் இறுதியில் ஒரு நேர்கோட்டில் வந்து இணைகிறது. அதுதான் படத்தின் கிளைமேக்ஸ்.

திரில்லர் கதையாக உருவாகியிருக்கும் இப்படத்தில் எல்லா பாத்திரங்களும் வாழ்க்கையின் எதார்த்தத்தின் அடிப்படையில் புனையப்பட்டுள்ளது  அதர்வா, சரத்குமார், ரகுமான், தங்களது இமேஜை கவனத்தில் கொள்ளாமல் நடித்திருக்கிறார்கள்.

ஹீரோ அதர்வா, இரண்டாவது ஹீரோ துஷ்யந்த், அம்மு அபிராமி  கதாபாத்திரங்கள் எப்படி  திசை மாறி போகப்போகிறது என்பதை கணிக்க முடியவில்லை. சமீபகாலமாக ஹீரோக்கள் போதை புகைப்பது, போதை மருந்து எடுத்துக்கொள்வது என்ற காட்சிகளை பயன்படுத்தி இளைஞர்ளை போதை மருந்து. பயன்படுத்த ஊக்குவிப்பதை சென்சார்  எப்படி அனுமதிக்கிறது என்று தெரியவில்லை. கூடவே ‘சீக்கிரமே போதை மருந்து பயன்படுத்துவது சட்டபூர்வமாக ஆகும்” என்ற வசனம் ஆபத்தானது.

ஐங்கரன் இண்டர்நேஷனல் சார்பில் கருணா மூர்த்தி இப்படத்தை தயாரித்திருக்கிறார்

இயக்குனர்  கார்த்திக் நரேனின் மற்றொரு மாறுபட்ட  படம்

ஜாக்ஸ் பிஜய் கேமிரா வித்தியாசமான கோணங்கள் புதுசு.

ஜாக்ஸ் பிஜய் இசை ஒ கே ரகம்..

நிறங்கள் மூன்று- திரில்

 

 

 

 

Related posts

சிரஞ்சீவிக்கு வில்லன் நடிகர் நன்றி வீடியோ

Jai Chandran

Hollywood movie ‘The Marksman’ in English, Tamil, Hindi and Telugu .. Tel Ganesan’s Kyba Films to release

Jai Chandran

மாயோனையும் பக்ரீத்தையும் இணைக்கும் நிலா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend