Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்

பழம்பெரும் திரைப்பட நடிகையும்  அந்த கால கவர்ச்சி நடிகையுமான சிஐடி சகுந்தலா பெங்களூரில் நகாலமானார். அவருக்கு வயது 84.

ஜெய்சங்கர் நடித்த சிஐடி சங்கர் படத்தில்  சகுந்தலா நடித்தார். அந்த படத்துக்கு.பிறகு அவரது பெயருடன் பட டைட்டிலான சி ஐடி  சேர்ந்துக் கொண்டது. ,

முன்னதாக சென்னையில் லலிதா- பத்மினி- ராகினி சகோதரிகளுடன் இணைந்து நடனக் குழுவில் நாட்டியமாடி வந்தார்.

பிறகு திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் தொடங்கி, கவர்ச்சி மற்றும் வில்லை குணச்சித்திரம் என மாறுபட்ட வேடங்களில் நடித்து வந்தார்.  படிக்காத மேதை, கை கொடுத்த தெய்வம், திருடன், தவப்புதல்வன்,  நீதி, பாரத விலாஸ், ராஜராஜ சோழன், பொன்னூஞ்சல், என் அண்ணன், இதயவீணை  உள்ளிட்ட சுமார் 7 00 படங்களில் நடித்தார். தமிழ் தவிர தெலுங்கு உள்ளிட்ட பிறோழி படங்கிலும் நடித்திருக்கிறார். . நடிகர் திலகம் சிவாஜியுடன் வசந்த மாளிகை படத்தில் குடி மகனே பெருங் குடிமகனே பாடலுக்கு  ஆடியது பெரும் வரவேற்பை பெற்றது. சினிமாவிலிருந்து  விலகியபிறகு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தவர்,

பெங்களூரில் உள்ள மகள் வீட்டில் சகுந்தலா வசித்துவந்தார். இந்நிலையில் நேற்று பிற்பகல் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சென்ற சிறிது நேரத்திலேயே சகுந்தலாவின் உயிர் பிரிந்தது என்று அவரின் மகள் செல்வி ஊடகத்தினரிடம் தெரிவித்தார்.

சி ஐ டி சகுந்தலா  மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்திரருக்கின்றனர்.

Related posts

பிரபல நடிகர் ஹம்சவிர்தனின் மனைவி காலமானார்

Jai Chandran

Producer Dr. N.S.Mohan Passed Away Today

Jai Chandran

மர் மர் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend