Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

லப்பர் பந்து (பட விமர்சனம்)

படம்: லப்பர் பந்து

நடிப்பு: தினேஷ், ஹரிஷ் கல்யாண், சுவாசிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், பாலா சரவணன், கீதா கைலாசம், தேவதர்ஷினி, ஜென்சன்  திவாகர்,  டி எஸ் கே

தயாரிப்பு: எஸ் லட்சுமணன் குமார்

இசை: ஷான் ரோல்டன்

ஒளிப்பதிவு: தினேஷ் புருஷோத்தமன்

இயக்கம்: தமிழரசன் பச்சமுத்து

பிஆர்ஓ: ஏ. ஜான்

 

லோக்கல் கிரிக்கெட் பின்னணியில் உருவாகியிருக்கும் ஒரு குடும்ப காதல் கதை லப்பர். பந்து

தினேஷ் பெயிண்டர் ஆக இருந்தாலும் லோக்கல் கிரிக்கெட்டில் சச்சின் போல்  சிக்ஸர் அடித்து ஆடக் கூடியவர். சிறு வயதிலேயே அவரது ஆட்டத்தை பார்த்து ஹரிஷ் கல்யாண் வியக்கிறார். அவரிடம் உள்ள குறை கண்டுபிடித்து ஒரே ஓவரில் அவரை அவுட் ஆகிவிடலாம் என்று கூறுகிறார். கதை வாலிப, முதிய  பருவத்துக்கு நகர்கிறது. தினேஷ் நரை முடியுடன்  கிரிக்கெட் ஆடுகிறார். அவர் கிரிக்கெட் ஆடுவது அவரது மனைவிக்கு பிடிக்கவில்லை. இவர்களது மகள் சஞ்சனா  ஹரிஷ் கல்யாணை காதலிக்கிறார். இதற்கிடையில் தினேஷுக்கும் ஹரிஷுக்கும் மோதல் ஏற்படுகிறது. ஹரிஷுக்கு தங்கள் பெண்ணைத் தர தினேஷும் அவரது மனைவியும் மறுக்கின்றனர். ஆனால் மகள் சஞ்சனா ஹரிஷைத்தான் மணப்பெண் என்று பிடிவாதம் பிடிக்கிறார். இந்த இடியாப்ப சிக்கலுக்கு உருக்கமாக பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.

நீண்ட நாட்களுக்கு பிறகு தினேஷின் தலையை இப்படத்தில் காண முடிகிறது. வழக்கம்போல் அவர் தனது நடிப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் முறைத்துப் பார்க்கிறார் , வெறுமையாக  பார்க்கிறார்  உருக்கமாக பார்க்கிறார். ஆனால் அந்த நநடிப்பே அந்த கதாபாத்திரத்திற்கு போதுமான நடிப்பாக இருக்கிறது.

தினேஷும் ஹரிஷும் கிரிக்கெட் கிரவுண்டில் சட்டை பிடித்துக் கொண்டு தரையில் உருண்டு புரண்டு சண்டையிடுவது மாமனும் மருமகனும் இப்படியா அடித்துக் கொள்வது என்று ஒரு கேள்வி இருந்தாலும் அந்த காட்சிதான் கிளைமாக்ஸ் வரை இருவருக்குமான மோதலை சமரசம் இல்லாமல் கொண்டு செல்கிறது.

ஹரிஷ் கல்யாண் ஏற்கனவே பார்க்கிங் என்ற படத்தில் தாத்தா எம் எஸ் பாஸ்கர் உடன் சண்டை போட்டு நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட அதே போல் ஒரு சண்டையைத் தான் லப்பர் பந்து படத்தில் தினேஷ் உடன் ஹரிஷ் ஹரிஷ் போட்டிருக்கிறார். தினேஷும் சரி, ஹரிசும் சரி தங்களது ஈகோவை எப்படி விட்டு தருவது என்ற தயக்கத்தில் ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் அது மோதலாக மாறுவது படத்துக்கு க்ரிப் ஏற்றுகிறது.

தினேஷின் மனைவியாக வரும் சுவாசிகா முதல் காட்சியில் டிராக்டரில் வந்து  கோபமாக கிரிக்கெட் கிரவுண்டை ஏர் உழுவதுபோல் உழுதுவிட்டு செல்வது பரபரப்பு

வீட்டை கவனிக்காமல். எந்நேரமும் கிரிக்கெட்டில் கவனமாக இருக்கும் தினேஷை வெறுத்து அவரை பிரிந்து செல்லும் சுவாசிகா  பின்னர் தினேஷ் தன் ஞாபகத்தில் தனிமையாக வாடுவதை எண்ணி கண்ணீர் சிந்துவதும், அதேபோல் சுவாசிகா பிரிவை தாங்காமல் தினேஷ் அவரது சேலையை விரித்து போட்டு அதில் படுத்து தூங்குவது  தொண்டை அடைக்கும் உருக்கமான காட்சிகள்.

ஹரிஷ் மீது கொண்ட காதல் உடும்பு பிடி போன்றது என்பதை “அவனைத் தவிர எவனையும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன்” என்று தன் அம்மாவிடம் கபமாக கூறும் போது தனது அசத்தல் நடிப்பை உறுதி செய்கிறார் சஞ்சனா.

பால சரவணன் காமெடிக்கு பயன்பட்டிருக்கிறார.

கிரிக்கெட்டை வைத்து நிறைய படங்கள் வந்திருந்தாலும் அந்த படங்களிலிருந்து சற்று மாறுபட்ட படமாக இப்படத்தை உருவாக்கிய இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து அப்ளாஸ் பெறுகிறார்.

ஷான் ரோல்டன் இசை,  தினேஷ்  புருஷோத்தமன் ஒளிப்பதிவு பக்க பலம்.

லப்பர் பந்து – மனதில் ஒட்டிக் கொள்ளும்.

 

Related posts

மோகன்லால் – பிருத்வி கலக்கிய “எல் 2 எம்புரான்” பட விழா

Jai Chandran

“I’ve been a huge Karthik Subbaraj fan” : Joju George on working in Jagame Thandhiram

Jai Chandran

ரஜினியை அரசியலுக்கு வரச்சொல்லி லாரன்சிடம் ரசிகர்கள் முறையீடு..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend