Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

டீன்ஸ் ( பட விமர்சனம்)

படம்:டீன்ஸ்

நடிப்பு: பார்த்திபன் ராதாகிருஷ்ணன், யோகி பாபு, விஷ்ருதா, டி அம்ருதா, டி டான் பாஸ்கோ, பிராங்கின்ஸ்டன் அஸ்மிதா, வி கிருத்திகா ஐயர், கே எஸ் தீபன், செல்வன் ஸ்டென்,  உதய் பிரியன், ப்ரசிஸ்தா,  ரோஷன், அஸ்மிதா மகாதேவன்

தயாரிப்பு: அகிரா ப்ரொடக்சன், பயாஸ்கோப் ட்ரீம்ஸ்

இசை: டி இமான்

ஒளிப்பதிவு:  கேவ்மிக் யு அர்வி

இயக்கம்: பார்த்திபன் ராதாகிருஷ்ணன்

பி ஆர் ஓ: நிகில் முருகன்

அடுக்குமாடி குடியிருப்பு நண்பர்களாக இருக்கும் பள்ளி சிறுவர் சிறுமிகள் 13 பேர் வகுப்பை கட்டடித்துவிட்டு பேய் இருக்கும் இடத்தை தேடி செல்கின்றனர். அவர்கள் போகும் வழியில் பல்வேறு அமானுஷ்ய குறுக்கீடுகள் ஏற்படுகிறது. சிலர் திடீர் திடீரென்று வெட்ட வெளி மைதானத்திலேயே காணாமல் சென்று விடுகின்றனர். இதனால் பயந்து நடுங்கும் மற்ற சிறுவர்கள் தங்களை யாரும் காப்பாற்ற வரமாட்டார்களா என்று எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் அங்கு வருகிறார் விஞ்ஞான ஆராய்ச்சியாளர் பார்த்திபன். அவரிடம் நடந்தவற்றை கூறுகிறார்கள். 150 வருடமாக இதைத்தான் நான் தேடிக் கொண்டிருந்தேன் இப்போது கிடைத்துவிட்டது என்று அவர் பரவசம் அடைகிறார். அவர் பரவசம் அடைய காரணம் என்ன? காணாமல் போன சிறுவர்கள் கிடைத்தார்களா? பேய் தான் அமானுஷ்ய சக்திகளை உருவாக்கியதா என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு டீன்ஸ் படம் ஆச்சரியமூட்டும் பதிலளிக்கிறது.

புதியபாதை பார்த்திபன் இன்றைக்கு நவீன உலக ஹாலிவுட் இயக்குனர்களுக்கு சமமான ஒரு படைப்பாளியாக டீன்ஸ் படம் மூலம் உயர்ந்தி ருக்கிறார்.

வழக்கமான பார்த்திபன் படம் தான் டீன்சும் என்று எண்ணிக்கொண்டு தியேட்டரில் அமர்ந்தால் நம்மை வேறு உலகத்துக்கு கொண்டு சென்று விடுகிறார்.

அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர்களாக பழகும் 13 சிறுவர், சிறுமிகள்  தங்கள் பெற்றோர்கள் வகுப்பு ஆசிரியர்களை நக்கலும் நய்யாண்டியுமாக பேசி கிண்டலடித்து நாமெல்லாம் வளர்ந்து விட்டோம் என்பதை அவர்களுக்கு நிரூபிக்க வேண்டும் என்று காலரை தூக்கிவிட்டு பேசிக்கொள்ளும் உரையாடல்கள் அடுக்குமாடி குடியிருப்பு நட்பு வட்டாரங்களில் காண முடிகிறது. எங்கேயோ கண்ணில்  பட்ட விஷயத்தை அப்படியே கதையாக மாற்றி விட்டார் இயக்குனர் பார்த்திபன்.

 

13 சிறுவர் சிறுமிகளும் பேயைத தேடி சொல்வதும் அப்போது அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பதும், திடீரென்று சிலர் மாயமாக மறைந்து விடுவதும் இது என்ன விட்டலாச்சாரியா படத்தை எடுத்து விட்டாரா பார்த்திபன் என்று எண்ணவைக்கிறது ஆனால் நான் அதுக்கும் மேலே என்பது போல் இரண்டாம் பாதியில் பதிலடி கொடுத்து இருக்கிறார்.

வான்வெளி விஞ்ஞான ஆராய்ச்சியாளராக பார்த்திபன் 150 ஆண்டு காலம் வாழ்வதாக கூறும்போது இது என்ன பெரிய புருடாவாக இருக்கிறதே என்று எண்ணும்போது 150 வருட வாழ்க்கையின் அர்த்தத்தை அவர் சொல்லும்போது புருடாவையும் அர்த்தம் உள்ளதாக மாற்றி விடுகிறார்.

வித்தியாசம் என்றால் பார்த்திபன்,  பார்த்திபன் என்றால் வித்தியாசம் என்று கூறுவார்கள். இந்த படத்தை பொருத்தவரை பார்த்திபன் அதை கண்முன் நிரூபித்திருக்கிறார்.  மாணவர்கள் ஏன் மாயமானவர்கள் அமானுஷ்ய சக்திகள் எங்கிருந்து வருகின்றன என்பதற்கெல்லாம் இரண்டாம் பாதியில் பார்த்திபன் கொடுக்கும் பதில்கள் கண்களை அகலவிரிக்க செய்கிறது அப்படி என்ன அவர் புதிதாக சொல்லிவிட்டார் என்று கேட்டால் அதை எல்லாம் இப்போது வெளியே சொல்லி விடாதீர்கள் படம் பார்த்து தெரிந்து கொள்ளட்டும் என்று பார்த்திபன் வைத்த கோரிக்கை ஞாபகம் வருவதால் அந்த இரண்டாம் பாதி  சஸ்பென்சை இங்கு சஸ்பென்சாகவே விட்டு விடுகிறோம்..

யோகி பாபு ஏதோ வருகிறார் ஏதோ செய்கிறார். காமெடியின் ஒருத்தர் கூட இல்லாமல் போய்விட்டார்களே என்று விமர்சித்து விடுவார்களோ என்பதற்காகவே யோகி பாபுவை பார்த்திபன் நடிக்க வைத்திருக் கிறார் என்று தோன்றுகிறது. அவரை சிரிப்புக்கு சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறியி ருக்கிறார்.

ஆனால் 13 சிறுவர் சிறுமிகளை புதிதாக இப்படத்தில் பார்த்திபன் அறிமுகப்படுத்தி இருப்பது பிற்காலத்தில் இதில் எத்தனை பேர் பெரிய நட்சத்திரங்களாக வருவார்களோ என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதத்தில் அவர்களை நடிக்க வைத்திருக்கிறார்

13 சிறுவர் சிறுமிகளும் வயதுக்கு மீறியும், வயதுக்கு உள்ளும் ஒன்றி நடித்திருக்கிறார்கள்.

படத்துக்கு டி இமான் இசையமைத் திருக்கிறார் பாடல்கள் திரையில் கேட்கும் வண்ணம் ஒலிக்கிறது. கிளைமாற்றில் வரும் பிப்பிலி பிலி  பிலி  பாடல் ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்ததுகி றது.

பேய் பிசாசு என்று வழக்கமான பார்முளாக்குள் சென்று விடாமல் புதிய பாதைக்கு மீண்டும் சென்றிருக்கும் பார்த்திபனுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தலாம்.

டீன்ஸ்- பார்த்திபன்  கலக்கல் ரிட்டர்ன்ஸ்.

 

 

 

Related posts

Actress Hansika Motwani married Mumbai-based tycoon

Jai Chandran

BlackMail:You won’t blink – Bindu Madhavi

Jai Chandran

ஐயப்பன் குருவாயூரப்பன்்கோவிலில் நம்பூதிரிக்கு நிவாரண பொருள்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend