Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

இந்தியன் 2 (பட விமர்சனம்)

படம்: இந்தியன் 2

நடிப்பு: கமல்ஹாசன், சித்தார்த், எஸ் ஜே சூர்யா, சமுத்திரகனி, ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், விவேக், மனோ பாலா, மாரிமுத்து, நெடுமுடி வேணு, பாபி சிம்ஹா  ரேணுகா, தம்பி ராமையா, ஜெகன்,  காளிதாஸ் ஜெயராம், டெல்லி கணேஷ், ஜாகீர் உசேன் மற்றும் பலர்

தயாரிப்பு: லைகா ப்ரொடக்ஷன்ஸ் சுபாஷ் கரன் ,

தயாரிப்பு மேலாண்மை:  ஜி கே எம்.தமிழ் குமரன்

இசை: அனிருத்

ஒளிப்பதிவு: ரவி வர்மன்

இயக்கம்: ஷங்கர்

பி ஆர் ஓ: சதீஷ் (AIM)

ரிலீஸ் : ரெட் ஜெயன்ட் மூவிஸ்

பார்க்கிங் டாக்ஸ் என்ற யூ ட்யூப் சேனல் நடத்தும் சித்தார்த் தனது சக நண்பர், தோழியுடன் சேர்ந்து ஆங்காங்கே நடக்கும் சட்ட விரோத மான லஞ்ச லாவண்யம் பற்றி அம்பலப்படுத்துகின்றனர். ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் அவர்களுக்கு எதிராக திரும்பு கிறது. போலீஸ் அவர்களையே கைது செய்து சிறையில் அடைக் கிறது. மனம் நொந்து போகும் சித்தார்த் லஞ்சத்தையும் அக்கிரமத்தையும் ஒடுக்க மீண்டும் சேனாபதி இந்தியன் தாத்தா திரும்ப வரவேண்டும் என்று சோசியல் மீடியாவில் பதிவிடு கிறார் அது இந்தியா முழுவதும் டிரெண்ட் ஆகிறது. ஒரு கட்டத்தில் இது இந்தியன் தாத்தா காதுக்கு  சென்றடைகிறது. அவரும் இந்த அழைப்பை ஏற்று மீண்டும் இந்தியா திரும்புகிறார். நாட்டில் நடக்கும் லஞ்ச லாவண்ய அக்கிரமத்தை தட்டி கேட்பதுடன் இளைஞர்களையும் அந்தப் பணியில் ஈடுபட வைக்கிறார். அதன் மூலம் நடக்கும் எதிர்பாரா சம்பவங்கள் என்ன என்பது இந்தியன் 2 படத்தின் அதிரடி காட்சிகளாக விரிகிறது.

தொடக்கத்தில் சித்தார்த் ப்ரியா பவானி, ஜெகன் மூவரும் தங்களது யூடியூப் சேனலுக்கு லஞ்சம் பெறுபவர்களின் வீடியோக்களை சூசகமாக அப்லோட் செய்து அதிரடி கிளப்புவதும்  ஒரு கட்டத்தில் அது அவர்களுக்கு எதிராக திரும்பி போலீஸ் தாக்குதல் சிறைவாசம் என்று சொல்வதெல்லாம் இந்தியன் தாத்தா சேனாபதியை மீண்டும் வரவழைப்பதற்கான . அஸ்திவாரங்கள்.

எப்போது இந்தியன் தாத்தா சேனாபதி கமல்ஹாசனை திரையில் காட்டுவார்கள் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்க எதிர்பாராத தோற்றத்தில் அவர் கண்முன் நின்றதும் அரங்கில் விசில் பறக்கிறது.

கமல் என்ட்ரிக்கு பிறகு காட்சி களில் சூடு பிடிக்கிறது.  எங்கோ இருக்கும் தைபே  (taipei)நாட்டில் இருக்கும்  கமல்  தொடக்க காட்சியிலேயே மக்களை ஏமாற்றி விட்டு வெளிநாட்டில் உல்லாச வாழ்க்கை வாழும் கோடீஸ்வரனை வர்ம முறைப்படி தாக்கி கொல்வது பரபரப்பு. இது வேறு யாரையோ அல்ல விஜய் மல்லையாவை குறி  வைத்திருக்கும் துணிச்சல் காட்சி.  முன்னதாக உலக அழகி டெமி லீக் டெபு காலண்டர் பாடல் காட்சி கண்ணாடி போல் பளபளக்கிறது அத்துடன் அவரது கவர்ச்சியும் கண்ணை கிரங்கடிக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவில் குஜராத் கொல்கத்தா, பீகார் என்று பல்வேறு மாநிலங்களில் நடக்கும் அக்கிரமங்களையும் இந்தியன் தாத்தா கமலஹாசன் அதிர்ச்சி தரும் வகையில் அக்கிரமக்காரர் களே தீர்த்து கட்டுவது ஒருவித பதட்டத்தை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக குஜராத்தில் தங்க மாளிகையில் தங்கத்திலேயே கழிவறை கட்டி வைத்து தங்கத்திலேயே மிதக்கும் கோடீஸ்வரனை கமலஹாசன் தங்க மாளிகையில் வைத்து வர்ம முத்திரை பயன்படுத்தி அவரை குதிரை போல் ஓட வைத்து சாகடிக்கும் காட்சி புதுசு.

இந்தியன் முதல் பாகத்தில் வந்த சேனாபதி தோற்றத்தை விட  இந்தியன் 2 படத்தில் வரும் சேனாபதி கதாபாத்திரத்தில் கமலின் வயது கொஞ்சம் குறைந்தது போல தான் தெரிகிறது. அப்போது எழுவது வயது இப்போது அவருக்கு நூறுக்கும் மேல் வயதாகி விட்டதே என்று ரசிகர்கள் மனதில் எழும். கேள்விக்கு ஒரே பதில் தான், இந்த இந்தியன் தாத்தா ஒரு சூப்பர் மேன் தாத்தா அதனால் அவருக்கு வயதுவரம்பு கிடையாது. இந்தியன் மூன்று,  இந்தியன் நான்கு என்று அவரது பயணம் தொடரும் என்று தெரிகிறது.

சித்தார்த் யூ ட்யூப் சேனல் நடத்துபவராக வருகிறார். தன் தந்தை சமுத்திரகனியை அவர் லஞ்ச குற்றத்திற்காக மாட்டி விடுவதும் அதேபோல் ப்ரியா பவானி ஜெகனும் தனது உறவுகளை லஞ்ச குற்றத்திற்காக மாட்டிவிடும் காட்சிகள் நிஜத்தில் நடக்குமா என்ற சந்தேகம் இருந்தாலும் இப்படித்தான் நடக்க வேண்டும் அப்போதுதான் இந்தியா சுத்தமாகும் என்ற இந்தியன் தாத்தா கமலின் குரல் காதில் ஒலிக்கிறது.

விவேக், மனோபாலா, மாரிமுத்து நெடுமுடி வேணு என 4 முத்தான நடிகர்கள் நடிப்பை இப்படத்தில் கடைசியாக காண முடிகிறது. படத்தில் நடித்தவர்கள் படம் வெளியாகும் போது இந்த உலகை விட்டு பிரிந்து விட்டது வருத்தமான விஷயம்.

கழுத்து நிறைய தங்க நகை போட்டுக்கொண்டு தொழில் அதிபராக வரும் எஸ் ஜே சூர்யா தனது நடிப்பு அரக்கத்தனத்தை காட்டுவார் என்று பார்த்தால் அவரது அட்டகாசத்தை கொசுறு போல் காட்டிவிட்டு மூன்றாம் பாகத்திற்கு கொண்டு சென்று விட்டார் இயக்குனர் ஷங்கர்.

படம் முடிந்துவிட்டது என்று எண்ணி எழுந்தால் அதன் பிறகும் காட்சிகள் திரையில் ஓடுவது ரசிகர்களை எழுந்த இடத்திலேயே நிற்க வைக்கிறது.

ஒரு ஸ்பெஷல் காட்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பஞ்ச்சும் அரங்கை அதிரவிடுகிறது.

பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் போன்ற மற்ற பாத்திரங்கள் எல்லாமே துணைப் பாத்திரங் களாக வந்து செல்கின்றன.

லைக்கா சுபாஸ்கரன் இந்தியன் 2 படத்தை பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரித்திருக்கிறார்.

லஞ்சத்தையும் தாண்டி படத்தில். வேறு என்ன இருக்கிறது என்று கேட்டால் கமலின் ஆக்ஷன் கலக்கல் அரங்கையே  அமர்க்களத்தில் ஆழ்த்துகிறது ஒற்றைச்சக்கர வாகனத்தில் சென்றபடி கமல் செய்யும் ஸ்டண்ட் சாகசம்  மெய்சிலிர்ப்பு.

பிரதான கதாபாத்திரங்களில் இன்னும் கூட பெரிய நடிகர்களை நடிக்க வைத்திருந்தால் காட்சிக்கு வலு கூடி இருக்கும்.

என்னதான் அனிருத் இசை அமைத்திருந்தாலும் ஏ ஆர் ரகுமான் இல்லாத குறை நிறையவே தெரிகிறது

.ரவிவர்மன் காட்சிகளை ஓவியமாக தீட்டி இருக்கிறார்..

இந்தியன் 2 – இந்திய அதிர்வலை.

 

 

 

 

 

Related posts

சீயான் விக்ரம் – பா. ரஞ்சித் இணையும் ‘தங்கலான்’

Jai Chandran

வெற்றிமாறன் – சிலம்பராசன் இணையும் “அரசன்” ஷூட்டிங் தொடங்கியது..

Jai Chandran

‘அரவிந்த்’ மூலம் புதிய அத்தியாயம் தொடங்கும் அனிருத்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend