Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கங்கனாச்சாரி ( மலையாள பட விமர்சனம்)

படம்: கங்கனாச்சாரி

நடிப்பு:  கணேஷ் குமார்,  அஜ்ஜு வர்கீஸ், கோகுல் சுரேஷ்,  அனார்கலி மரிக்கார மற்றும் சிலர்

தயாரிப்பு: அஜித் விநாயகா பிலிம்ஸ்

இசை சங்கர் சர்மா:

ஒளிப்பதிவு: சுர்ஜித்

இயக்கம்: அருண் சந்துரு

பி ஆர் ஓ: சதீஷ் (AIM)

 

2040 காலகட்டத்தில் பூமியை வேற்றுக்கிரக ஏலியன்கள் தாக்கும் நிலையில் அதனை மக்கள் எதிர்கொள்ளும் விதம் ராணுவம் அதனை எப்படி கட்டுப்படுத்து கிறது என்பதை காமெடியுடன் விவரிக்கும் விஞ்ஞான கற்பனை கதையாக உருவாகி இருக்கிறது கங்கனாச்சாரி மலையாள படம்.இதுதான்  இப்படத்தின் ஒருவரி கதை. இதை இரண்டு மணி நேரத்துக்குள் ஒரு  காமெடி டாக்குமெண்டரி படம் போல் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் அருண் சந்துரு.

பீகாரில்  வெள்ளம் என்று பிளாக் அண்ட் வொயிட் காலகட்டங்களில் திரைப்படம் திரையிடுவதற்கு முன்பாக நியூஸ் ரீல்கள் திரையில் ஓடும் அதுபோல்தான் கங்கனாச்சாரி படத்தில் சில மணித்துளிகள் காட்சிகள் நகர்கிறது.

காட்டுப்பகுதியில்  முன்னாள் ராணுவ வீரர் கணேஷ் குமார் பாழடைந்த வீட்டில் ராகவன் என்ற ஒரு ஆட்டோமேட்டிக் ரோபோவை வைத்து தங்கி கொண்டிருக்கிறார். அவருடன் இரண்டு பேர்  இருக்கிறார்கள். மூவரும் காமெடியாக ஏதோ பேசிக் கொண்டு டாக்குமென்டரி எடுப்பது பற்றி விவாதிக்கிறார்கள் திடீரென்று அந்த இடத்திற்கு ஒரு பெண் வருகிறார் அவர் வேறு யாருமில்லை வேற்று கிரகத்திலிருந்து வந்த ஒரு ஏலியன். இந்த கதாபாத்திரத்தில் அனார்கலி மரிக்கார் நடித்திருக்கிறார்.

கணேஷ் குமாருடன் தங்கி இருக்கும் இரண்டு பேர்களாக அஜ்ஜு வர்கீஸ், கோகுல் சுரேஷ்,  நடித்திருக்கிறார்கள். இவர்கள் மூவரும் பேசும் பேச்சுக்களில் காமெடி இழையோடுவதுதான் படத்தின் ஹைலைட்.

இதற்கிடையில் கோகுல் சுரேஷ்க்ஷுகும் ஏலியன் அனார்கலிக்கும் காதல் மலர்கிறது. ஆனால் இது எந்த அளவுக்கு பொருத்தமாக இருக்கும் என்பது இன்னொரு விவாதமாகி அதுவும் காமெடி களமாக மாறுகிறது.

அனார்கலி பூனைக்கு வைக்கும் உணவை எடுத்து சாப்பிடுகிறார் பாக்கெட் பாக்கெட்டாக காலி செய்கிறார். கடைசியில் பார்த்தால் அவர் பூனை கிரகத்திலிருந்து வந்த ஒரு ஏலியன் என்ற விவரம் வெளிப்படுகிறது.

மலையாள நடிகர் சுரேஷ கோபியின் மகன் கோகுல் சுரேஷ் இப்படத்தில் நடித்திருக்கிறார். ஹீரோ மகன் என்பதால் எந்த ஹீரோயிச காட்சிகளும் இவருக்கு இயக்குனர் தரவில்லை இன்னொரு சக கதாபாத்திர மாகவே அவரை கையாண்டு இருக்கிறார் இதுதான் மலையாளத்திற்கும் தமிழுக்கும் உள்ள வித்தியாசம். இங்கு ஹீரோ மகன் அறிமுகம் ஆகிறார் என்றால் ஒரே அடியில் 50 பேர் அந்தரத்தில் பறக்கும் ஆக்சன் ஹீரோவாக காட வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

படத்தில் 90% வசனமே நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு சில vfx காட்சிகள் வேற்று கிரகத்தை கண்முன் நிறுத்துகிறது. கேரளாவில் இந்த படம் வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறதாம்   தமிழகத்திலும் தற்போது வெளியாகி இருக்கிறது.  இங்குள்ள ரசிகர்கள் எப்படி ரசிப்பார்கள் என்பது போகப்போகத்தான் தெரியும்.

கங்கனாச்சாரி – காமெடி கலந்த விவாதாச்சாரி.

 

 

Related posts

கர்ணன், கட்டில் படங்களுக்கு சிறந்த பட விருது

Jai Chandran

என் டி ஆர்31 படத்தின் போஸ்டர் வெளியானது !

Jai Chandran

வில் (உயில்) பட விமர்சனம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend