Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

7 G (பட விமர்சனம்)

படம்  7 G

நடிப்பு:  சோனியா அகர்வால்,  ஸ்மிருதி வெங்கட்  சித்தார்த் விபின்,  சினேகா குப்தா,  சுப்ரமணியம் சிவா, , கே எஸ் கே செல்வா

தயாரிப்பு: ஹாரூண்,

இசை: சித்தார்த் விபின்

ஒளிப்பதிவு: கண்ணா

இயக்கம்: ஹாரூண்

பிஆர்ஓ: சதீஷ் ( AIM)

 

ஸ்மிருதி திருமணம் ஆகி கணவருடன் புதிய வீட்டுக்கு குடி புகுகிறார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான்.. வீட்டில் அவ்வப் போது அமானுஷ்ய சக்திகள் தென்படுவதை ஸ்மிருதி உணர்கிறார். அது பற்றி தன் தோழியிடம் சொல்லி அவரை வீட்டில் துணைக்கு வந்து படுக்க அழைக்கிறார்  அவரோ அமானுஷ்ய சக்திகாட்டும்காட்டில்  பயந்து ஓடி விடுகிறார். ஒரு கட்டத்தில் ஸ்மிருதியை நேரடியாகவே அமானுஷ்ய சக்தி தாக்க முயல்கிறது. அப்போதுதான் அந்த வீட்டில் ஏற்கனவே குடி இருந்த சோனியா அவரது மகனுடன் எரித்து கொல்லப்பட்ட தகவல் தெரியவருகிறது . “இது என் வீடு இந்த வீட்டிலிருந்து வெளியே போய்விடு ” என்று சோனியா பேய் ஸ்மிருதியை. மிரட்டுகிறது. அதனுடன் சவாலுக்கு நிற்கிறார் ஸ்மிருதி. சோனியா பேய்க்கும் ஸ்மிருதிக்கும் சண்டை உச்சமாகிறது. அதன் பிறகு நடப்பது என்ன என்பதுதான் 7ஜி படத்தின் கிளைமாக்ஸ்.

நிறைய பயமுறுத்தும் பேய் கதைகள் வந்திருக்கின்றன ஆனால் இது கொஞ்சம் வித்தியாசம். பேய்க்கும் பெண்ணுக்கும் நடக்கும் சண்டையாக இந்த கதை உருவாகியுள்ளது.

சோனியா அகர்வால் பேயாக வருகிறார் அவருடன் மோதும் பெண்ணாக ஸ்மிருதி நடித்திருக்கிறார். வீட்டில் அவ்வப் போது அமானுஷ்யம் தென்படும் போது ஸ்மிருதி மிரண்டு விடுவார் என்று பார்த்தால் அவர் அதற்கெல் லாம் சற்றும் கலங்காமல் அது பற்றி கணவனிடமும் சொல்லாமல் என்னதான் நடக்கிறது என்பதை பார்க்க துணிச்சலாக எதிர்த்து நிற்பது கொஞ்சம் புதுசு.

சோனியா அகர்வால் பேயாக வருகிறார்.  ஆனால் அவர் மேக்கப் போட்டுக் கொண்டு சுடிதார் அணிந்துகொண்டு மற்றொரு கதாபாத்ததிரமாகவே நடித்திருப்ப தால் எந்த பேய் பயமும் வரவில்லை.

உனக்கு நான் உதவுகிறேன் எனக்கு நீ உதவு என்று சோனியாவும் ஸ்மிருதியும் ஒப்பந்தம் போட்டு கொண்டு சோனியா பேய்க்கு ஸ்மிருதி எதிரிகளை காட்டிக் கொடுக்கும் காட்சிகள் கொஞ்சம் ரசிக்க வைக்கிறது.

இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இப்படத்தில் சோனியாவின் அண்ணனாக நெகட்டிவ் ஷேடில் நடித்து படத்தை விறுவிறுப்பாக்க முயற்சித்திருக் கிறார்.பருமனான  தோற்றம் என்றாலும்  அவரது உருட்டல் மிரட்டல்கள் பெரிதாக எடுபடவில்லை.

சோனியா வீட்டு பக்கத்து வீட்டுக் காரராக வருகிறார் சுப்பிரமணியம் சிவா.  இதுபோன்ற சாதாரண வேடங்களில் ஏன் நடிக்கிறாரோ தெரியவில்லை. இவர் கூப்பிட்டால் சோனியா பேய் வருகிறது அதனை அமைதியாக இருக்கச் சொல்லி சமாதானம் பேசுகிறார். இப்படி ஒரு பேய் எங்கு இருக்கிறது என்று தான் தெரியவில்லை.

வில்லியாக வரும் சினேகா குப்தா கவர்ச்சி உடைகளில்  விருந்து படைத்து இளசுகளை உசுப்புகிறார்.

பேய்க்கதை என்று சொல்லி பயமுறுத்தல் இல்லாமல் இயக்கி இருக்கிறார் ஹாரூன்.

சித்தார்த் விபின் இசை, கண்ணா ஒளிப்பதிவு ஓகே ரகம்.

7G – பேய்க்கும் பெண்ணுக்கும் சண்டை.

 

 

 

 

 

Related posts

சமுத்திரக்கனியின் பப்ளிக்’  ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Jai Chandran

தனியார் மருத்துவமனை கட்டணம் முதல்வருக்கு கமல்ஹாசன் கோரிக்கை..

Jai Chandran

பயணிகள் கவனிக்கவும்” கவனிக்க வைத்திருக்கும் கருணாகரன்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend