Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

அரண்மனை 4 (பட விமர்சனம்)

படம்: அரண்மனை 4

நடிப்பு: சுந்தர் சி, தமன்னா, ராசி கண்ணா, சந்தோஷ் பிரதாப், யோகி பாபு,  வி டிவி கணேஷ், கோவை சரளா, டெல்லி கணேஷ், கருடா ராம், சேசு மற்றும் பலர்

தயாரிப்பு: குஷ்பூ சுந்தர், ஏ சி எஸ். அருண்குமார்

இசை: ஹிப் ஹாப் ஆதி

ஒளிப்பதிவு: ஈ கிருஷ்ணமூர்த்தி

இயக்கம்: சுந்தர் சி

பி ஆர் ஒ: சதீஷ்( AIM)

சரவணன் ( சுந்தர் சி) தங்கை செல்வி (தமன்னா) என்ஜினியர் வாலிபரை காதலிக்கிறார்.  தந்தை எதிர்ப்பு தெரிவிப்பதால் தான் காதலிக்கும் வாலிபனுடன்  வீட்டை விட்டு சென்று விடுகிறார்.  ஆனாலும் தங்கை மீது சரவணன் பாசமாகவே இருக்கிறார். ஒரு சமயம் செல்வியின் கணவர் மர்மமான முறையில் இறக்கிறார். அதேபோல் செல்வியும் மர்மமான முறையில் தூக்கில் சாகிறார் . அவர்களது குழந்தைகள் அனாதை ஆகின்றன. அந்த குழந்தைகளை சுந்தர் சி எடுத்து வளர்க்க முன்வருவதுடன் தன் தங்கைக்கும் அவரது கணவருக்கும் மரணம் எப்படி சம்பவித்தது என்று அப்பகுதியில் உள்ளவர்கள் மூலம் அறிகிறார். பாக் என்ற ஒரு பேய் தான் இவர்களையெல்லாம் கொன்றிருக்கிறது என்ற  விவரம் தெரிய வருகிறது. இந்நிலையில் தமன்னாவின் மகளையும் கொல்ல் பாக் பேய் துடியாய் துடிக்கிறது.  அதனிடமிருந்து குழந்தையை சுந்தர் சி எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கிளைமாக்ஸ்.

உள்ளூர் பேய்களில் சுற்றி சுற்றி அரண்மனை முதல் பாகம் முதல் மூன்றாம் பாகம் வரை பயணித்த சுந்தர் சி தற்போது பாக் என்ற வடநாட்டு பேயை நான்காம் பாகத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

படம் தொடங்கிய முதல் 10 நிமிட காட்சிகளை கண்டிப்பாக பார்த்தாக வேண்டும் இல்லாவிட்டால் கதையின் போக்கை அவ்வளவு ஈசியாக புரிந்து கொள்ள முடியாது.

சுந்தர் சி படம் என்றாலே அது பேய் படம் என்றாலும் அதில் வயிறு குலுங்க வைக்கும் சிரிப்பு காட்சிகள் கண்டிப்பாக இருக்கும் அந்த காட்சிகளுக்கு அரண்மனை 4 படத்திலும் பஞ்சம் கிடையாது. யோகி பாபு, வி டிவி கணேஷ் சேசு, கோவை சரளா  நான்கு பேரும் சேர்ந்து அடிக்கும் கொட்டம் அரங்கை  சிரிப்பு அலையில் குலுங்க வைக்கிறது.

சுந்தர் சி வக்கீலாக வருகிறார் அறிமுக காட்சியிலேயே ஆக்சன் அதிரடி காட்டுகிறார். தங்கை தமன்னா அவரது கணவர் சந்தோஷ் பிரதாப் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்து அவர்களது ஊருக்கு செல்லும் சுந்தர் சி அங்கு நடக்கும் அமானுஷ்ய செயல்களை கண்டு அதிர்ச்சி அடைவதும் அதேசமயம் தங்கையையும் அவரது கணவரையும் கொன்றது யார் என்பதை போலீசில் புகார் செய்தும் அவர்கள் கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்ளாதபோது சுந்தர் சி  களத்தில் இறங்கி கொலையாளியை கண்டுபிடிக்க முயல்வதும் அப்போது பூசாரி ஒருவரின் நடவடிக்கைகளை கண்டு அவரை பின்தொடர்ந்து தாக்குவதுமாக பரபரப்பை திரையில் பற்ற வைக்கிறார் சுந்தர் சி.

கிளைமாக்ஸ் காட்சியில் வானுயர்ந்த அம்மன் சிலையும் அதே உயரத்துக்கு அரக்கன் சிலையும் அமைத்து சம்ஹாரம் செய்யும் காட்சி பிரம்மாண்டமாக பணமாக்கப்பட்டுள்ளது.

சாமியாராக உருமாறி இருக்கும் பேயுடன் அரக்கன் உடல் செட்டுக்குள்  சுந்தர் சி மோதும் காட்சி பயங்கரம். கூடவே சிறுமியும் இக்காட்சியில் பங்கேற்கும் போது அவருக்கு என்ன நேரமோ என்ற பதற்றம்  அரங்கை டென்ஷன் ஆகிறது.

தமன்னா இரண்டு குழந்தை களுக்கு தாயாக நடித்திருக்கிறார். தன் குழந்தைகளை ஆவியாக வந்து அவர்களை பாகு பேயிடமிருந்து  காப்பாற்றுவதும் செண்டிமெண்ட் உச்சங்கள்.

ராசி கண்ணாக்கு பெரிய வேலை இல்லை என்றாலும் அவ்வப்போது கண்ணுக்கு குளிர்ச்சியாக கவர்ச்சி உடைகளில் தோன்றி விருந்து  படைக்கிறார்.

கிளைமாக்ஸ் காட்சி முடிந்தவுடன் தமன்னாவும் ராசி கண்ணாவும் இணைந்து ஆடும் அந்த போட்டி கவர்ச்சி ஆட்டம் இருக்கையில் இருந்து எழுந்தவர்களையும் மீண்டும் இருக்கையில் அமர வைத்து விடுகிறது.

கிளைமாக்சில்   எதிர்பார்க்காத விருந்தாக சிம்ரன் குஷ்பூ ஆடும் சாமி ஆட்டம் ஒரே அமர்க்களம்.

கதை, திரைக்கதை எழுதி இயக்கி ஹீரோவாகவும் நடித்திருக்கிறார் சுந்தர் சி . ஏற்கனவே இயக்கிய அரண்மனை படத்தின் மூன்று பாகங்களில் இருந்து நான்காம் பாகம் சற்று வித்தியாசமாகவும் பிரமாண்டமாகவும் பாடமாக்கப் பட்டு இருப்பது பிளஸ்.

குஷ்பு சுந்தர் (Avni Cinemax P Ltd), ஏ.சி.எஸ் அருண்குமார் (Benzz Media Pvt Ltd) இணைந்து தயாரித்திருக் கின்றனர்

ஹிப் ஹாப் தமிழா இசை மெலடி ஆகவும் அதிரடியாகவும் ஒலிக்கிறது.

ஈ கிருஷ்ணமூர்த்தி கேமரா ரசிகர் களின் கண்களை கலர்ஃபுல்லாக்குகிறது.

அரண்மனை 4 – பேயாட்டம் பிளஸ் நகைச்சுவை ஆட்டம்.

 

 

 

 

Related posts

தயாரிப்பாளர்களுக்கு உதவ சங்கம் தயார்

Jai Chandran

லஞ்சத்தை தடுக்க மய்யம் முன்வைக்கும் 3 தீர்வுகள்!

Jai Chandran

777Charlie’s official teaser in 6days

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend