Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ரோமியோ (பட விமர்சனம்)

படம்: ரோமியோ

நடிப்பு: விஜய் ஆண்டனி,,  மிருணாளினி ரவி,  யோகி பாபு, விடிவி கணேஷ்,  தலைவாசல் விஜய், சுதா,  ஶ்ரீஜா ரவி,

தயாரிப்பு: மீரா விஜய் ஆண்டனி

இசை: பரத் தனசேகர்

ஒளிப்பதிவு: பரூக் ஜெ பாஷா

இயக்கம்: விநாயக் வைத்தியநாதன்

பி ஆர் ஓ: ரேகா

விஜய் ஆண்டனி மலேசியாவில் இருந்து சொந்த ஊரான தென்காசி திரும்புகிறார். அவருக்கு குடும்பத்தினர்  மிருணாளினியை மணப்பெண் ணாக முடிவு செய்கின்றனர். சினிமா நடிகை ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் மிருணாளினி விஜய் ஆண்டனி சென்னையில். குடியேறினால் திருமணம் செய்து கொண்டு அப்படியே சினிமா நடிகை ஆகிவிடலாம் என்று எண்ணி அவரை மணந்து  கொள்கிறார். மனைவி மிருணாளினியுடன் விஜய் ஆண்டனி சென்னை  வந்து தங்குகிறார்.ஆனால் விஜய் ஆண்டனிடம் முகம் கொடுத்து கூட மிருணாளி பேச மறுக்கிறார. எப்படியும் மனைவியின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விஜய் ஆண்டனி  மிருணாளியுடன் வேறு பெயரில் தொடர்பு கொண்டு ஒரு ரசிகராக செல்போனில் பேசி பழகுகிறார். அவரிடம் மிருணாளி தனது எண்ணங்களை பகிர்ந்து கொள் கிறார். மனைவியின் நடிகை ஆசையை நிறைவேற்ற விஜய் ஆண்டனி. படம் தயாரிக்க முடிவு செய்கிறார். அது காதல் படம் என்பதால் தானே  ஹீரோவாக நடிப்பேன் என்று விஜய் ஆண்டனி கூறுகிறார் வேண்டா வெறுப்பாக மிருணாளி. ஒப்புக்கொள்கிறார். மிருணாளி மனதில் விஜய் ஆண்டனியால்  ஒரு கணவனாக இடம் பிடிக்க முடிந்ததா என்பதற்கு ரோமியோ பட கிளைமாக்ஸ் நெகிழ்ச்சியான பதில் அளிக்கிறது.

விஜய் ஆண்டனி இதுவரை நடித்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் மற்றும் மாறுபட்ட கதாபாத்திரம் என்று தன்னை முற்றிலுமாக உருமாற்றிக் கொண்டிருக்கிறார்.

மிருணாளியை திருமணம் செய்து கொள்ளும் விஜய் ஆண்டனி அவர் தன்னிடம் காட்டும் வெறுப்பை கண்டு அதிர்ச்சி அடையாமல் மேலும் மேலும் மிருணாளி மீது பாசத்தை பொழிந்து அவரது அன்பை பெறுவதற்காக மிருணாளினிக்கு பிடித்தது போன்ற செயல்களை செய்ய தொடங்கியதும் காட்சிகள் படிப்படியாக சூடு பிடிக்க தொடங்குகிறது.

தன்னை வெறுக்கும் ஒரு மனைவிக்கு ஒரு கணவன் அவர் மனதை வெல்வதற்காக இப்படியெல்லாம் தியாகத்தை செய்ய முடியுமா என்ற பட்டிமன்றமே நடத்தும் அளவுக்கு விஜய் ஆண்டனி நாணல் போல வளைந்து மிருணாளினிக்காக தன் உயிரை கூட பணயம் வைக்க முன் வரும்போது இப்படி ஒரு கணவன் தனக்கு கிடைக்க மாட்டானா என்று பெண்களை ஏக்க பெருமூச்சு விட வைக்கிறார்.

மிருணாளினி பல படங்களில் நடித்திருந்தாலும் இப்படம் அவருக்கு ஒரு மைல் கல்லாக அமையும்.. விஜய் ஆண்டனியை கண்டாலே அவர் மீது வெறுப்பை உமிழும் மிருணாளியுடன் தொலைபேசியில் குரலை மாற்றி நண்பர் போல் பேசும் விஜய் ஆண்டனிடம் தனது ஆசை களையும் எண்ணங்களையும் பரிமாறிக்கொள்ளும்போது கொஞ்சம் கடுப்பேற்றினாலும் விஜய் ஆண்டனி உடன் தானே தனது எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறார் என்ற ஆறுதல் ஒரு பக்கம் அமைதிப்படுத்துகிறது.

விஜய் ஆண்டனியும் மிருணாளியும் இணைவார்கள் என்ற முடிவு தெரிந்திருந்தாலும் அந்த கிளைமாக்ஸ் கண்களில் கண்ணீர் பனிக்க இயக்குனர் சொல்லி இருக்கும் விதம் அதற்கு ஏற்ப விஜய் ஆண்டனியும் மிருணாளியும் பாத்திரத்தில் ஒன்றி நடித்திருப்பது அப்ளாஸ் பெரும்..

யோகி பாபு வி டிவி கணேஷ்  காமெடி ஊறுகாயாக பயன்பட்டி. ருக்கின்றனர்.

மீரா விஜய் ஆண்டனி படத்தை தயாரித்திருக்கிறார்.

டைட்டிலை கமர்சியலாக ரோமியோ என்று வைத்திருக்கும் இயக்குனர் விநாயக் வைத்திய நாதன் மனம் ஒன்றிப் போகாத தம்பதியின் மனதை ஒன்றி ணைக்கும் ஒரு அழகான குடும்ப கதையை படைத்திருப்பது அருமை.

பரத் தனசேகரன் இசை தனித்துவம் இல்லை

பரூக் ஜெ பாஷா ஒளிப்பதிவு காட்சிகளுக்கு துணை நிற்கிறது.

ரோமியோ – ஒரு தலை காதலின் வெற்றி.

 

 

 

 

Related posts

ராஜ பீமா (பட விமர்சனம்)

Jai Chandran

Annaatthe Censored UA

Jai Chandran

கொச்சியிலும் தொடர்ந்த ‘கோப்ரா’வின் கொண்டாட்டம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend