Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கா (பட விமர்சனம்)

படம்: கா

நடிப்பு: ஆண்ட்ரியா, சலீம் கவுஸ், பிர்லா போஸ்

தயாரிப்பு: ஜான் மேக்ஸ்

இசை: சுந்தர் சி பாபு

ஒளிப்பதிவு: அறிவழகன்

இயக்கம்: நாஞ்சில்

காட்டுக்குள் நுழையும் சலீம் கவுசின் ரவுடி கூட்டம் பெண் பத்திரிக்கையாளர் ஒருவரை சுட்டுக் கொள்கிறது. அதை நேரில் பார்க்கும் இரண்டு இளைஞர்களை ரவுடி கூட்டம் துரத்துகிறது. ஒரு இளைஞனை சுட்டு வீழ்த்தும் சலீம் கவுஸ் மற்றொரு இளைஞனை தேடுகிறார். அவன் காட்டுப் பகுதியில் புகைப்படம் எடுக்கும் போட்டோகிராபர் ஆண்ட்ரியாவிடம் அடைக்கலம் ஆகிறான். அந்த ரவுடி கூட்டம் ஆண்ட்ரியாவையும் இளைஞனையும் என்ன செய் கிறது ஆண்ட்ரியாவுக்கும், சலீமுக்கும் என்ன தொடர்பு என்ப தற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக் கிறது.

படத்தின் கதையை எடிட்டிங்கில் கண்ணா பின்னா என்று வெட்டித் தள்ளி இருக்கிறார்கள். தலையும் புரியாமல் காலும் புரியாமல் காட்சிகளை இப்படியும் அப்படியு மாக எடுத்து ஒரே குழப்பு குழப்பி இருக்கிறார்கள். திரைக்கதையை சரியாக அமைத்திருந்தால் கதையும் சரியாக வந்திருக்கும்.

படத்தின் தொடக்கம் ஒரு முரட்டு  காதல் கதையாக தொடங்கி அது பின்னர் காட்டுப்பகுதிக்குள் நுழைந்து கொலை கதையாக மாறி ரவுடி கூட்டம்,  அரசியல், போலீஸ் என்று எங்கெங்கோ பயணிக்கிறது.

ஆண்ட்ரியா விலங்குகளை புகைப்படம் எடுக்கும் புகைப் படக்காரராக வருகிறார். திடீரென்று காணாமல் போய் விடுகிறார். பின்னர் திடீரென்று வருகிறார். ஒரு கட்டத்தில் ரவுடி களுடன் சண்டை போடுகிறார். கன்ஃபைட் காஞ்சனா ரேஞ்சுக்கு அவர் ஆக்ஷன் காட்சியில் அதிரடி காட்டி இருக்கிறார்.

வில்லனாக வரும் சலீம் கவுஸ் சொன்ன வசனத்தையே மீண்டும் மீண்டும் சொல்லி கடுப்பேற்று கிறார்.

கிளைமாக்ஸ்சில் ஆன்ட்ரியா வுக்கும் சலீம்கவுசுக்கும் நேரடி மோதல் நடக்கும் என்று பார்த்தால் அந்த கதையை கொண்டு போய் இளம் வயது காதல் செண்டி மெண்.ட்டாக இயக்குனர் முடித்திருப்பது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டதுபோல் இருக் கிறது.

ஒளிப்பதிவாளர் அறிவழகன் வளைத்து வளைத்து காட்டுப் பகுதியை படம்பிடித்து இருக்கி றார். நீண்ட நாட்களுக்கு பிறகு இசையமைப்பாளர் சுந்தர் சி பாபு தனது வேலையை கச்சிதமாக செய்து இருந்தாலும் அது விழலுக்கு இறைத்த நீராக ஆகி விடுகிறது.

ஜான் மேக்ஸ் படத்தை தயாரித்தி ருக்கிறார்.

காட்டுப்பகுதியில் ஒரு அதிரடி ஆக்சன் கதையை சொல்லிவிட வேண்டும் என்ற எண்ணம் இயக்குனர் நாஞ்சிலுக்கு இருந்திருக்கிறது ஆனால் அந்த எண்ணத்தை  கோர்வையான காட்சிகளாக வடிவமைக்க சரியான திரைக் கதையை உருவாக்காமல் இயக்கி இருப்பதும் , சரியான எடிட்டர் அமையாமல்போனதும் பெருங் குறை.

போதுமான டிஸ்கஷன் நடத்தாமல் ஸ்பாட்டில் நினைத்ததை எடுத்தது போன்ற படப்பிடிப்பு படத்தை மைனஸ் முகாமுக்கு தள்ளி விடுகிறது.

கா-  முழுமை இல்லை.

Two And A Half Star Rating Illustration Vector

Related posts

சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் நடிக்கும் ஸ்ரீகாந்த் – சிரிஷ்டி டாங்கே

Jai Chandran

பிளஸ் 2 தேர்வில் மாற்றுத் திறனாளி மாணவி சாதனை !

Jai Chandran

Single From FriendshipMovie

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend