Trending Cinemas Now
Uncategorized சினிமா செய்திகள் விமர்சனம்

கிளாஸ்மேட் (பட விமர்சனம்)

படம்: கிளாஸ்மேட்

நடிப்பு: அங்கயற்கண்ணன், பிரணா , குட்டி புலி ஷரவண  சக்தி மயில்சாமி, டி எம் கார்த்திக், சாம்ஸ், எம். பி. முத்துப்பாண்டி, அபி நட்சத்திரா, அருள்தாஸ். மீனாள், எஸ் ஆர் ஜாங்கிட் ஐ பி எஸ்

தயாரிப்பு: ஜே. அங்கயற் கண்ணன்,

இசை: பிருத்வி

ஒளிப்பதிவு: அருண்குமார் செல்வராஜ்

இயக்கம்: குட்டி புலி ஷரவண சக்தி

பி ஆர் ஒ: சதீஷ் (AIM)

அங்கயற்கண்ணன்,  குட்டி புலி ஷரவண சக்தி இருவரும் சிறுவயது முதல் நண்பர்கள். சிறு வயதிலேயே குடிக்கு  அடிமையா கிறார்கள். திருமணம் ஆன பிறகும் இருவரும் டாஸ்மாக் சென்று தினமும் குடித்து தள்ளாடுகி றார்கள். இதில் இவர்களது குடும்பமும் தள்ளாடுகிறது. அங்கயற்கண்ணன்,  ஷரவண சக்தி இருவருமே தங்கள் மனைவியர் மீது சந்தேகப்பட்டு ஆத்திரம் கொள்கின்றனர். இதில் ஷரவண சக்தி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாலும் அங்கயற்கண்ணன் தன் மனைவியை பாட்டிலால் தலையில் அடித்து சாய்கிறான். ஆனாலும்  கணவனை போலீஸில் இருந்து தப்ப வைக்கிறாள் மனைவி. 10 வருடமாக குடியை நிறுத்தியிருந்த மயில்சாமி,  அங்கயற்கண்ணன், ஷரவண சக்தியால் மீண்டும் குடிகாரன் ஆகிறார். இவர்கள் அனைவரும் ஒன்றாக செல்லும் கார் விபத்தில் சிக்குகிறது  இதில் மயில்சாமி உயிரிழந்து அவரது குடும்பம் நடுத்தெருவுக்கு வருகிறது.அதைக் கண்டு ஷரவண சக்தி அங்கயற்கண்ணன், அதிர்ச்சி அடைகின்றனர்.  அடுத்து அவர்கள் எடுக்கும் முடிவு என்ன,? தெருவுக்கு வந்த மயில்சாமி குடும்பம் என்ன கதி ஆகிறது என்பதற்கு கிளாஸ்மேட் படம் பதில் அளிக் கிறது.

பள்ளி வகுப்பில் படிக்கும் சக மாணவனை கிளாஸ்மேட் ( classmate) என்பார்கள் அதுவே குடிபாரில் சேர்ந்து குடிப்பவர்கள் கிளாஸ்மேட் (Glass mate) என்று புதிய தத்துவத்தை படக் குழு படத்தின் டைட்டில் மூலம் சொல்லி இருக்கிறது.

படத்தின் தொடக்கத்தில் குடிகாரர்கள் அந்த குடிப்பழக் கத்திலிருந்து விடுபட மருத்துவ சிகிச்சை அளிப்பதுபோல் காட்டி அதில் சிலர் குணமாவதையும் விளக்கும்போது இது மருத்துவ விழிப்புணர்வு கதையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே சிகிச்சைக்கு வரும் அங்கயற்கண்ணன், ஷரவண சக்தி இருவரும் அங்குள்ள டாக்டரிடம் பேசி  குழப்பி ஒரு கட்டத்தில் டாக்டரை மொடா குடிகாரனாக மாற்றுவது தொடக்கம் முதல் இறுதி வரை தொடரும் நகைச்சுவை காட்சி. அதேசமயம் குடியை திருத்தும் ஒரு டாக்டரே இப்படி குடிக்கு அடிமை ஆவாரா என்ற சந்தேகம் எழத்தான் செய்கிறது. டாக்டர்கள் இந்த காட்சியை பார்த்து கடுப்பாகி போராட்டத்தில் ஈடுபட்டால் அது படத்திற்கு எதிர் விளைவுகளை தந்துவிடும்.

அங்கயற்கண்ணன், ஷரவண சக்தி சீனுக்கு சீன் குடி குடி என்று குடித்து வன்குடிகாரர்களாக ஆவது ஒரு கட்டத்தில் இது காட்சி தானே என்பதையும் மீறி கோபமும் கடுப்பும் வரச் செய்கிறது. இது அவர்களது நடிப்புக்கு கிடைத்த பாராட்டா அல்லது நெருக்கடியா என்பது புரியவில்லை.

குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த பிறகு அங்கே  அங்கயற்கண்ணன் தன் மனைவிக்கு சோறு ஊட்டி விட்டு அன்பு பாராட்டுவதெல்லாம் ரசிக்க வைக்கின்றன. அதேபோல் மூக்கு முட்ட குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் ஷரவண சக்தி வீட்டில் படுத்தி. ருக்கும்போது பெட்டிலேயே சிறுநீர் கழிப்பது, இரவில் பீரோவை திறந்து அதில் சிறுநீர் கழிப்பது என்று சிறுபிள்ளைத்தனமாக காமெடி செய்து காட்சியை நாறடித்து விடுகிறார்.

மயில்சாமி இறப்பதற்கு முன்பு நடித்த கடைசி படம் இது. எல்லா படங்களிலும் ஃபுல்மப்போடு   வரும் மயில்சாமி இந்த படத்தில் அறிமுக காட்சியில் பக்தி பரவசமாக  வருவதும்  பின்னர் குடிக்கு அடிமையாகி விபத்தில் சிக்குவதும் சோகத்தை ஏற்படுத் துகிறது.

மயில்சாமி மகளாக வரும் அபி நட்சத்திர எப்படியாவது படித்து ஐஏஎஸ் ஆகி விடுவார் என்று பார்த்தால் அவர் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு பெரிய இடியை தலையில் இறக்குவது எதிர்பார்க். காத ஷாக்.

துபாய் சென்று வேலை செய்து தன் குடும்பத்தை காப்பாற்றும் சாம்ஸ் ஒரு நல்ல இளைஞராக நடித்திருக்கிறார். தனக்கு பெண் பார்க்கச் சென்று பின்னர் அங்கயற்கண்ணன், ஷரவண சக்தி உடன் சேர்ந்து குடிக்கு ஆளாகி தன்னை திருமணம் செய்ய சம்மதம் சொன்ன பெண்ணே வெறுக்கும்படி நடந்து கொள்வது இளவட்டங்களுக்கு ஒரு படிப்பினை.

அருள்தாஸ், பிரணா,  மீனாள், சேசு உள்ளிட்ட பலர்  நடித்திருக் கின்றனர்.

அங்கயற் கண்ணன் படத்தை தயாரித்திருக்கிறார்.
குட்டி புலி ஷரவண சக்தி படத்தை இயக்கியிருக்கிறார் குடிகாரர்களால் என்ன தீமை ஏற்படும் என்பதை சொல்வதற்காக ஹீரோவையும் மற்ற எல்லோரை யுமே படத்தில் குடிகாரனாக மாற்றி அரங்கில் இருப்பவர்களே போதைக்கு ஆளாகும் அளவுக்கு காட்சிகளை அமைத்திருப்பது கொஞ்சம் ஓவர் டோஸ்தான்.

குடி போதைக்கு ஆளான அங்கயற்கண்ணன், ஷரவண சக்தி திருந்தி மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் நபர்களாக மாறுவதும் அதே நேரத்தில் குடிகாரர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் பெருங் குடிகாரனாக மாறி அவர்கள் முன் வந்து நிற்கும் கிளைமாக்ஸ் காட்சியும் முரண்பாடு.

அருண்குமார் செல்வராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் ப்ரித்வி இசையமைத்திருக்கிறார்.

கிளாஸ்மேட் – போதைக்கு பாதையும்,  தீர்வும்.

 

Related posts

நடிகர் விஜய்க்கு முழு உருவ சிலை

Jai Chandran

இளையராஜா இசையமைப்பில் ” மதுரை மணிக்குறவர்” ரெடி

Jai Chandran

Uriyadi Vijay Kumar New Mocvie Started Today

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend