தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சென்ற 15 நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் உடனடியாக அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது . ஒரு வாரம் சிகிச்சைக்கு பிறகு விஜயகாந்த் வீடு திரும்பினார் . இந்நிலையில் நேற்று விஜயகாந்துக்கு மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது . அவருக்கு மூச்சு திணறல் இருந்த காரணத்தால் உடனடியாக செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. அவருக்கு சளி இருமல் தொந்தரவு இருந்ததால் உடனடியாக கொரோனா பரிசோதனையை டாக்டர்கள் அவருக்கு மேற்கொண்டனர். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவருக்கு மூச்சு விடுவதில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி காலமானார். அவர் மரன் அடைந்த தகவலை மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
இதையடுத்து விஜயகாந்த் உடல் ஆம்புலன்ஸ் வேனில் வைத்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு ஆயிர கணக்கில் தொண்டர்கள் திரண்டு வந்த நிலையில் விஜயகாந்த் உடலை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள், தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்க எடுத்துச் செல்லப்பட்டது. கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருக்கும் நிலையில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் ரசிகர்களும் வரிசையில் நின்று அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து பொதுமக்கள் அஞ்சலிக்காக விஜய்காந்த் உடல் செமன்னை தீவுத்திடலில் கொண்டு சென்று வைக்கப்பட்டது. அங்கு காலை முதலே ரசிகர்களும் பொதுமக்களும் வரிசையில் நின்று விஜய்காந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இன்று மதியம் 1 மணிக்கு விஜயகாந்த் உடல் தீவு திடலில் இருந்து ஊர்வலமாக கோயம் பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. மாலை 4 மணிக்கு அரசு.மரியாதையுடன் விஜயகாந்த் உடல் கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
.
