Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பார்க்கிங் (பட விமர்சனம்)

படம்: பார்க்கிங்

நடிப்பு: ஹரிஸ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா, ரமா, பிராதனா, இளங்கோ

தயாரிப்பு: சுதன் சுந்தரம், கே.எஸ்.சினிஸ்

இசை: சாம்.சி.எஸ்.

ஒளிப்பதிவு: ஜிஜூ சன்னி

இயக்கம்: ராம்குமார் பாலகிருஷ்ணன்

ஐடியில் வேலை செய்யும் ஈஸ்வர் ,( ஹரிஸ் கல்யாண்) கர்ப்பிணி மனைவியுடன் புது வீட்டுக்கு வாடகைக்கு வருகிறார். கீழ் தளத்தில்  அரசு அலுவலர் இளம்பரிதி (எம்.எஸ்.பாஸ்கர்) மனைவி, மகளுடன் குடியிருக் கிறார் . புது கார் வாங்கும் ஹரிஸ் வீட்டுக்கு கார் கொண்டு வந்து நிறுத்துகிறார்.  அந்த பார்க்கிங்கில் ஒரு கார்தான் விடமுடியும்  என்ற நிலையில் இளம்பரிதி தனது டூ வீலர் எடுக்க முடியாமல் சிரமப்படுகிறார். இதில் இருவருக்கும் பிரச்னை ஏற்படு கிறது. இந்நிலையில் இளம்பரிதி யும்  கார் வாங்குகிறார் .இதனால் வீட்டு பார்க்கிங்கில் யார் காரை விடுவது என்பதில் மோதல் ஏற்படு கிறது.  இந்த மோதலால் ஒருவரை. யொருவர் பழிவாங்கும் நிலைக்கு செல்கின்றனர். உச்சபட்சமாக கொலை  செய்யும் அளவுக்கு இந்த மோதல் முற்றுகிறது. இதன் முடிவு என்ன ஆகிறது என்பது கிளை மாக்ஸ்.

ஏதோ பொழுது போக்குக்காக ஒரு படம் பார்த்தோமா ஜாலியாக சிரித்துவிட்டு வந்தோமா என்றில் லாமல் இட நெருக்கடி  மிகுந்த  நகரத்தில் கார் நிறுத்துவதற்கு கூட இடம்  இல்லாமல்  தினம் தினம் நடக்கும் அக்கப்போர் அதனால் நடக்கும் பிரச்னை என்று பார்க்கிங் படம் ஒரு பாடத்தை  கற்றுக் கொடுக்கும் படமாக உருவாகி இருக்கிறது.

60 வயதை தொடும் நிலையில் இருக்கும் எம் எஸ் பாஸ்கர், 28 வயதே ஆகும் ஹரிஸ் என  இருவரின் குடும்பமும் முதல் சந்திப்பில்  பகிர்ந்து கொள்ளும் அன்பும் பாசமும் படிப்படியாக எப்படி பகையாக மாறுகிறது என்பதை  சீன் பை சீன் இயக்குனர் நகர்த்தி செல்லும்  நகர்வுகள் அரங்கை  மெல்ல மெல்ல சூடாக்குகிறது.

ஹரிசுக்கு போட்டியாக எம் எஸ். பாஸ்கர் கார் வாங்கியதும் நிலைமை விபரீதமாகிறது. ஒரு கட்டத்தில் எம்.எஸ்.பாஸ்கருடன்  நடு ரோட்டில் ஹரிஸ் சண்டை போடுவதும் அவரை ஹரிஸ்  கன்னத்தில் அறைவதும் அரங்கை அமைதியாக்குகிறது. அடுத்தடுத்து   ஹரிஸ், எம்.எஸ். பாஸ்கர் இருவருமே ஒருவருக் கொருவர் வில்லாதி வில்லனாகி விடுகிறார்கள்.

லஞ்சம் வாங்காத எம்.எஸ்.பாஸ் கரை லஞ்ச ஒழிப்பு அதிகாரி களிடம் ஹரிஸ் மாட்டி விடுவதும்  அதற்கு  பழிவாங்க   ஹரிசின் கார் டயர் போல்ட் நட்டை கழற்றி விட்டு காரை பாஸ்கர் விபத்திற்குள் ளாக்கச் செய்வதும் அதிலிருந்து தப்பிய ஹரிஸ் கோபமாக வந்து  பாஸ்கரின் காரை சுக்கல் சுக்கலாக  நொறுக்குவது என இருவரின்  ஈகோ மோதல்  எகிறும் போது இது  எங்குபோய் முடியுமோ என்று  பயம் வந்து விடுகிறது.

லவர் பாயாக இதுவரை வலம் வந்துக் கொண்டிருந்த ஹரிசுக்கு நடிப்பை வெளிப்படுத்தியே ஆக வேண்டும் என்ற பாத்திரம் இந்த பரிசோதனையில் வெற்றி பெற்றிருக்கிறார் ஹரிஸ் கல்யாண்.

வயதான எம் எஸ் பாஸ்கர் என்ற மூத்த. நடிகர் முன்பு  நடிக்கிறோம் என்ற  தயக்கம் தடுக்காமல்  .முற்றிலுமாக ஈஸ்வர் என்ற ஈகோ பிடித்த இளைஞனாக  கதா  பாத்திரத்துக்கு முற்றிலுமாக உருமாறியிருக்கிறார் ஹரிஸ்.

எம்.எஸ்.பாஸ்கரும் எந்த  எக்ஸ்ட்ரீமுக்கும்  செல்வேன் என்பதுபோல்  முரண்டு பிடித்து நடித்திருக்கிறார். இந்துஜா, ரமா இருவரும்  வீட்டுப் பெண்கள் மனநிலையில்  மாறி கணவர், குடும்பம் என்று பதறி இருக்கின் றனர்.

சுதன் சுந்தரம், கே.எஸ்.சினிஸ் தயாரித்திருக்கின்றனர்.

சாம்.சி.எஸ். இசை படத்துக்கு உரம் சேர்த்திருக்கிறது.

ஜிஜூ சன்னி ஒளிப்பதிவு தெளி வாக காட்சிகளை பதிவு செய்தி ருக்கிறது.

இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன்  இந்த கதையை நிஜ அனுபவத்திலிருந்து படமாக்கி இருக்கிறார் என்றே தோன்று கிறது. . பார்க்கிங் பிரச்னைக்கு உச்ச பட்சமாக காட்சிகளை அமைத்திருப்பது சிலருக்கு மன மாற்றத்தை கொடுக்கும், இன்னும் சிலருக்கு ஈகோவை தூண்டிவிட்டு  வில்லங்கத்தையும்..இழுத்து விடலாம்.  எனவே செயலில் இறங்குவதற்கு  முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து முடிவெடுக்க வேண்டும்.

பார்க்கிங் – வெடிக்கும் ஈகோ 

 

 

 

 

Related posts

டைட்டில் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட முதல்வர்

Jai Chandran

சுந்தர்.சியின் தலைநகரம்2 டிரெய்லர் ரிலீஸ் விழா

Jai Chandran

மக்கள் பிரச்சினையைப் பேசும் படம் பாய்: பேரரசு பேச்சு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend