Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

படக் குழுவினருக்கு அசைவம் செய்து தந்து அசத்திய நயன்தாரா: இயக்குனர் தகவல்

நயன்தாரா.இதுவரை ஆக்ஷன், லவர், அம்மன், கலெக்டர் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். முதன்முறை யாக  நட்சத்திர ஓட்டல் ஷெப் ஆக நடிக்கும் படம் அன்னபூரணி.

இப்படத்தை ரஜினி நடித்த 2.0,  கமல்  நடிக்கும் இந்தியன்2 ஆகிய படங்களில் . ஷங்கரிடம்  உதவியா ளராக பணியாற்றிய நிலேஷ்  கிருஷ்ணா இயக்குகிறார்.

ஜி ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரெய்டன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் ஜெய், சத்யராஜ் கே.எஸ்.ரவிகுமார், அச்யுத் குமார், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர். தமன் இசை அமைக்கிறார். சத்யன்  சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படம் பற்றி இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா கூறியதாவது:

சமையல் கலை மையமாக வைத்து சில படங்கள் வந்திருந்தாலும் அதிலிருந்து இது முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்துடன் உருவாகி இருக்கிறது. நானும் எனது நண்பனும் ஓட்டல்.ஒன்றில் சாப்பிடச் சென்றபோது  அவர்கள்.கொடுத்த  உணவு சரியில்லாததால் சர்வருடன்  சண்டை ஏற்பட்டது. அன்றுதான் இந்தப்படத்தின் கதைக் கரு உருவானது அன்னம்  தருபவர்கள் இறைவனுக்கு சமம் என்பார்கள். அதனால் அன்னம் தருபவர்கள் அன்னபூரணி  என்கிறார்கள். இப்படத்தின் கதையை  தொலை பேசியில்.  நயன்தாராவிடம் சொன்னேன். கதை அவருக்கு பிடித்திருக்கவே நடிக்க சம்மதம்  தெரிவித்தார்.ஏற்கனவே ஆக்ஷன் காதல் படங்களில் நடித்திருந்த அவருக்கு இப்படி யொரு  மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதனாலும் இதில் நடிக்க சம்மதம் தெரிவித்தார்.

ஶ்ரீ ரங்கத்தில் பிராமின் குடும்பத்தில் பிறந்த நயன்தாரா ஸ்டார் ஓட்டலில் ஷெப் ஆக வேண்டும் என்று சிறு வயது முதலே ஆசைப்படுகிறார். ஆனால் இவர் வெஜிடேரியன். ஷெப் ஆக வேண்டுமென்றால்  சிக்கன், மட்டன்    ஃபிஷ் சமைக்க வேண்டும். இவரது தந்தை கோயில் பிரசாதம்  தயாரிக்கும் ஆசாரம்மிக்கவர்.  இந்நிலையில் நயன்தாரா ஷெப் ஆகிறாரா என்பதுதான் கதை.

ராஜா ராணி படத்துக்கு பிறகு இப்படத்தில் நயன்தாராவுடன் ஜெய் இணைந்து நடித்திருக் கிறார்.

சத்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா போன்றவர்கள் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இதுவொரு ரசிக்கத் தகுந்த மாறுபட்ட  குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருக்கும். டிசம்பர் 1ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது.

படத்தில்  வெஜிடேரியனாக நயன்தாரா நடித்தாலும். அவருக்கு நிஜத்தில்  அசைவம் நன்கு சமைக்கத் தெரியும்,  கேக்கும் நன்கு செய்வார். எல்லோருக்கும்  ஷூட்டிங்கில் அசைவம் செய்து கொடுத்து அசத்தினார். அவ்வளவு ருசியாக இருந்தது.

 

இவ்வாறு இயக்குனர் நிலேஸ் கிருஷ்ணா கூறினார்.

 

Related posts

100வது படத்துக்கு இசை அமைக்கும் ஜி.வி.பிரகாஷ் மகிழ்ச்சி

Jai Chandran

37 ஆண்டுகள் ஊக்கம் தந்த நாசர்: கார்த்தி வாழ்த்து

Jai Chandran

ஹபீபி (பட விமர்சனம் )

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend