Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சந்திரசேகருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் சார்பில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்கு திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது!

எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் சார்பில் திரைப்பட. இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்கு திரைத் துறை வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப் பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் ‘விஸ்காம்’ எனப்படும் காட்சித் தொடர்பியல் துறையின் ஆண்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் திரையுலகில் தன் தனித்துவமான படங்களைத் தன் பாணியில் இயக்கி, தனக்கென முத்திரை பதித்து சாதனை படைத்த புரட்சிஇயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு
எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் வேந்தர்  ஏ.சி.சண்முகம் ‘திரைத் துறை வாழ்நாள் சாதனையாளர் ‘விருதினை வழங்கினார். விருது வழங்கும் முன் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் திரையுலகச் சாதனைகள் குறிப்பிடப்பட்டு விருது வழங்கப்பட்டது.
விருது வழங்கும் விழாவில் எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் அருண்குமாரும் உடன் இருந்தார்.


இவ்விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவி  ஷோபா சந்திரசேகரும் கலந்து கொண்டார்.

Related posts

வலிமை நாயகி ஆகும் காலா நடிகை

Jai Chandran

சீனு ராமசாமிக்கு இன்ப அதிர்ச்சி தந்த முதல்வர்

Jai Chandran

Riya Suman plays the bonding girl of Agent Kannayiram

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend