படம்: லாக் டவுண் டைரி
நடிப்பு : விஹான் ஜாலி, சஹானா, நேஹா சக்சேனா, முகேஷ் ரிஷி, எம்.எஸ்.பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன், ஜாலி பாஸ்டியன், பிரவினா, முன்னா, முத்துக்காளை, விஷ்ணு குமார், திரிஷியா, கல்லூரி pவினோத்
தயாரிப்பு: அங்கிதா.புரடக்ஷன்
இசை ஜாசி கிஃப்ட் , ஏ.எஸ்.முரளி
ஒளிப்பதிவு: பி கே எச்.தாஸ்
இயக்கம்: ஜாலி பாஸ்டியன்
பி.ஆர் ஒ : டைமண்ட் பாபு
டாக்சி டிரைவர் விஹான் ஜாலி பணக்கார வீட்டு பெண் சஹானாவை காதலிக்கிறார். இதற்கு சஹானா தந்தை எதிர்ப்பு தெரிவிக்கிறார். தந்தையின் எதிர்ப்பை மீறி விஹானை மணக்கிறார் சஹானா. சந்தோஷ மாக வாழும் அவர்கள் லாக்டவுன் காலத்தில் வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர் . விஹான் கடன் வாங்கிய நிலையில் கடன் கொடுத்தவர்கள் அவரை தொல்லை செய்கின்றனர். அந்த நேரத்தில் விஹானுக்கு மற்றொரு பணக்கார.பெண்ணின் நட்பு கிடைக்கிறது அவர் விஹான் கடனை அடைக்கிறார். அவனுடன் இணைந்து ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள அந்த பெண் எண்ணுகிறாள். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைய விஹான் மனைவிக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்கிறார். இறுதியில் நடந்தது என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் விறுவிறுப்புடன் பதில் அளிக்கிறது.
இப்படத்தின் இயக்குநர் ஜாலி பாஸ்டியன் 900 படங்களுக்கு மேல் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றிய வர். இவர் இயக்கியிருக்கும் படம் லாக் டவுன் டைரி. இவரது மகன் விஹான் ஜாலி ஹீரோவாக தமிழுக்கு அறிமுகமாகி இருக்கி றார். இவரும் ஒரு ஸ்டன்ட் வீரர் பிற மொழிகளில் பணியாற்றி யிருக்கும் இவர் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகிறார்l.
நடிப்பு அனுபவம் ஏற்கனவே இருப்பதால் பதட்டம் எதுவுமில் லாமல் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் விஹான். சஹானா ஏழை வீட்டுப் பெண் என்று எண்ணி அவர் பின்னால் சென்று அவருக்கு காதல் வலை வீசுவதும் பணக்கார வீட்டு பெண் என்றதும் அவரை விட்டு விலக தயாராக இருந்தாலும் ஆனால் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்பது காதலியை கவர காட்டும் புது டெக்னிக்
காதலியின் தந்தையின் எதிர்ப்பை மீறி சஹானாவை மணக்கும் விஹான் அவரை கஷ்டப்படாமல் பார்த்துக் கொள்ள கார் ஓட்டி சம்பாதிப்பதும் தனது மொத்த கடனையும் அடைக்கும் பணக்கார பெண் விஹானிடன் இணைந்து குழந்தை பெற்றுக்கொள்ள கேட்டும் மனைவிக்கு நேர்மையாக இருக்க எண்ணும் விஹான் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் கோபப்படுவதும் வேடத்தில் மீதான நல்லெண்ணத்தை அதிகரிக்கிறது.
சண்டை காட்சியில் வேகம் காட்டும் விஹான் வசன காட்சியில் கவனம் செலுத்த வேண்டும் எல்லா காட்சியிலும் ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒரே டைப்பில் வசனம் பேசுவது எடுபடவில்லை.
ஹீரோயின் சஹானா அழகு பதுமை மட்டுமல்ல நடிப்பிலும் தேர்ச்சி காட்டுகிறார். விஹானிடம் பிள்ளை கேட்டு தொல்லை செய்யும் நேஹா சக்சேனா இளசுகளை கிக் ஏற்றுகிரார். வில்லித்தனமான வேடமென் றாலும் அதில் வில்லித்னத்தை கலக்காமல் நாசுக்காக நடித்து கவர்கிறார்.
எம் எஸ் பாஸ்கர், முத்துக்களை, மொட்டை ராஜேந்திரன் சிரிக்க வைப்பதுடன் உருக்கமாகவும் நடிக்கின்றனர். சஹானா தந்தையாக ஜாலி பாஸ்டியன் கண்டிப்பான நடிப்பும் ஒ கே
அங்கிதா நிறுவனம் தயாரித்தி ருக்கிறது. ஸ்டன்ட் மாஸ்டராக இருந்தாலும் குடும்ப பின்னணியி ல் படத்தை இயக்கியிருக்கும் ஜாலி பாஸ்டியன் அனுபவம் பேசியிருக்கிறது.
ஒளிப்பதிவும் இசையும் சோடை இல்லை.
லாக் டவுண் டைரி – காதலின் நேர்மை

