Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

காதர்பாஷா என்ற முத்துராமலிங்கம் (பட விமர்சனம்)

படம்: காதர்பாஷா என்ற.முத்துராமலிங்கம்

நடிப்பு: ஆர்யா, சித்தி இத்னானி, பிரபு,  நரேன், சிங்கம் புலி, தமிழ், ஆர்.கே.விஜய் முருகன்,  அர்.ஜி.விக்னேஷ்காந்த், மொசக்குட்டி, விஜி சந்திரசேகர், ரேணுகா, மீனாள், இந்துமதி, ஶ்ரீ லேகா, அத்வைதா ஹேமா, மோனிகா, பேபி ஆஃபியா,பேபி சன்மதி, மாஸ்டர் மகேந்திரன், மதுசூதனராவ், கே ஜி எப் அவினாஷ், ராஜேஷ், நந்தா சரவணன்,  பாலா ஹாசன்,  ஶ்ரீஜித் ரவி,  அர்ஜை, விஜய் முத்தையா, திலீபன் சரவணன், ரிஷி, பி எல் தேனப்பன், அர்ஜுன் தேவ்

தயாரிப்பு: வெடிக்காரன்பட்டி எஸ். சக்தி வேல்

இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு:: ஆர்.வேல்ராஜ்

இயக்கம் : முத்தையா

பி  ஆர் ஒ : சதீஷ்குமார்

நடுவப்பட்டியில் வேட்டையன், வேங்கையன் குடும்பம் அடாவடி செய்து ஊரையே அச்சுறுத்தி வைத்திருக்கிறது. உறவுப்பென் தமிழ்செல்வியை (சித்தி இத்னானி) பெண் பார்க்க வரும் மாப்பிள்ளைகளை அடித்து. துரத்துகின்றனர். தங்கள் வீட்டு பிள்ளையைத்தான் தமிழ் செல்வி மணக்க வேண்டும் என்று அடாவடி காட்டுகின்றனர் அதற்கு காரணம் தமிழ் செல்வியின் சொத்தை அபகரிக்க வேண்டும் என்ற எண்ணம்தான். ஆனால் தன் அண்ணன் சாவுக்கு காரணமாக இருந்த குடும்பத்தை  சேர்ந்த யாரையும் மணக்க மாட்டேன் என்று பிடிவாதம் காட்டுகிறார் தமிழ் செல்வி. இவரைத் தேடி காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் (ஆர்யா) வருகிறார். அவரை கொல்ல வேட்டை, வேங்கையன் குடும்பம் வரிந்து கட்டுகிறது. அவர்களை துவம்சம் செய்கிறார் காதர்.  காதர்பாஷா யார், தமிழ் செல்விக்கு என்ன உறவு என்பதெல்லாம் ராமாயணம் போல் நீளும் கதையின் கிளைமாக்ஸ் வரை செல்கிறது.

படத்தில் யார் யார் யாருக்கெல் லாம் என்னென்ன உறவு என்பதெல்லாம் படத்தை   பத்து முறை பார்த்தால்கூட நினைவில் வைத்துக்கொள்வது கடினம் அது இயக்குனர் முத்தையாவுக்கு மட்டுமே தெரிந்த விஷயம்.

ஹீரோ ஆர்யா இதுவரை இப்படி யொரு கதைக்களத்தில் நடித்த தில்லை என்பதால் இயக்குனர் என்ன சொன்னாரோ அதை மட்டும் அதாவது கோபமாக அடி என்றால் அடிக்கிறார், வெட்டு என்றால் அரிவாளால் வெட்டுகிரார், அழு என்றால் லேசாக கலங்கி நடித்திருக்கிறார்.

உறவுகள் நினைவில் நிற்கிறதோ இல்லையோ  ஆர்யாவின் அரிவாள் வெட்டும் அதிரடி ஆக்ஷனும் படத்தின் ஹைலை ட்டாக நினைவில் நிற்கிறது. எதற்கெடுத்தாலும் அடிதான் ஆர்யாவின் டயலாக்காவே உள்ளது. முழுக்க முழுக்க ஒரு ஆக்ரோஷமான வாலிபனாக கண்ணுக்குள் பதிகிறார்.

கருப்பு சட்டை, கருப்பு வேட்டிதான் ஆர்யாவின் 90 சதவீத காஸ்ட்யூம் அதற்கு காரணம் எதுவும் இல்லை. நடன காட்சிகளில் காட்டு ஆட்டம் ஆடுகிறார்.

பிரபு இஸ்லாமியராக அன்பை மட்டுமே பேசுபவராக வருகிறார் அவரே கிளைமாக்சில் ஒருத்த னையும் உயிரோடு விடாதே என்று கோபப்படுவது கிளைமாக்சுக்கு வேகம் சேர்க்கிறது.

மத நல்லிணக்கத்தை சொல்ல முயன்றிருக்கும் இயக்குனர் முத்தையா அதை ஓரளவுக்கே சொல்லியிருக்கிறார். பிரபுவை நரேன் செருப்பால் அடிப்பது போல் காட்டி சொல்ல வந்த நல்லிணக் கத்தை அவரே   உடைத்தும் விடுகிறார்.

ஹீரோயின் சித்தி இத்னானி நடிப்பு கவனத்தை கவர்கிறது. முரட்டு உறவு கூட்டத்தை தனி ஆளாக எதிர்த்து நிற்கும் துணிச்சலை நிமிர்ந்த நடிப்புடன்  வெளிப்படுத்துகிறார்

படத்தில் வில்லன் கூட்டம்தான் அதிகம்,  வடிவேலு  பாணியில்  சொன்னால் எல்லோரும் பல்க்காக இருக்கிறார்கள்.  ஆண்கள் செய்யும் ரவுடித்தனத்துக்கு பின்னால் சூத்திரதாரிகளாக அந்தந்த குடும்ப பெண்களே இருக்கிறார்ககள்  என்பதை துணிச்சலாக சொல்லியிருக் கிறார் இயக்குனர்.

படம் முழுவதும் வன்முறை ஆக்ஷன் தாண்டவம் ஆடினாலும் போலீஸ் ஃபோர்செல்லாம் டம்மியாகவே இருக்கிறது. காமெடி பஞ்சம் இருப்பதால் கலகலப்புக்கு இடமில்லை.

வெடிக்காரன்பட்டி எஸ். சக்திவேல் தயாரித்திருக்கிறார்

ஜி.வி.பிரகாஷ்குமார் அதிரடி இசையும்  ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம் சேர்க்கிறது.

காதர்பாஷா என்ற.முத்துராம லிங்கம்   – குடும்ப பகையின் கோராதாண்டவம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related posts

செம திமிரு (பட விமர்சனம்)

Jai Chandran

இயக்குநர் ஷிவ் மாதவ்வின் புதிய சினிமா பயணம்…

Jai Chandran

பராரி (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend