Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

வீரன் ( பட விமர்சனம்)

படம்: வீரன்

நடிப்பு: ஹிப் ஹாப் ஆதி,  ஆதிரா ராஜ், வினய் காளி வெங்கட், முனிஸ்காந்த், சசி செல்வராஜ், போஸ் வெங்கட், சின்னி ஜெயந்த்,

தயாரிப்பு: செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன்

இசை: ஹிப் ஹாப் தமிழா

ஒளிப்பதிவு:: தீபக் டி மேனன்

இயக்கம்: ஏ4 ஆர் கே. சரவண்

பி ஆர் ஓ: சுரேஷ் சந்திரா

ஆதி, சசி, ஆதிரா மூவரும் பள்ளிக்கு செல்லும்போது ஆதி மீது இடி தாக்குகிறது. இதில் உயிர் பிழக்கும் அவருக்கு  மேக்னட்டிக்  எலக்ட்ரிக் பவர் கிடைக்கிறது. ஆனாலுமm உடல் பாதிப்பு ஏற்படுவதால் அக்காவுடன் சென்று வெளிநாட்டில் சிகிச்சை பெறுகி றார் பல வருடங்களுக்கு பிறகு  சொந்த ஊர் திரும்புகிறார். அந்த ஊரில் மின் கேபிள் பூமிக்கு அடியில் புதைத்து ஆபத்தான  திட்டமொன்றை விஞ்ஞானி வினய் நடத்துகிறார். அதற்கு   இடையூறாக  வீரன் கோயில் இருக்கிறது. அதை  அகற்ற வினய் திட்டமிடுகிறார். ஆனால் கோயிலை  அகற்ற பூசாரி எதிர்ப்பு தெரிவிக்கிறார். முதலில் கோயில் மீது ஆர்வம் காட்டாத மக்களை ஆதி தனது பிரத்யேக சக்தி மூலம் அதிசயங்கள் நிகழ்த்தி நம்பிக்கை வரவழைக்கிறார்.. கோயில் இடிக்கப்பட்டதா, இல்லையா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

மின்னல் தாக்கி அதிசய சக்தி பெறுகிறார் ஆதி  என்பதே நம்ப முடியாத விஷயமாக இருக்கிறது ஆனால் இது சின்ன பிள்ளை களுக்கு பரவசததை தரும் கான்செப்ட்.  ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் சின்னி ஜெயந்த் பாத்திரத்தில் கையெழுத்து போட முயல உடனே அவரது மூளையை ஆதி கட்டுப்படுத்தி சாம்பார் செய்ய வெங்காய டிப்ஸ் கொடுக்க வைப்பது  கைகொட்டி சிரிக்க வைக்கிறது. அதேபோல் கோயிலை இடிக்க வரும் வினயின் தம்பியை ஆதி  கட்டுப்படுத்தி சாமி ஆட்டம் ஆட வைப்பதும் கலகலப்பின் தொடர்ச்சி.

ஆதிராவை பெண் பார்க்க வரும் வெளிநாட்டு மாப்பிள்ளை ஆதியிடன் காதலுக்கு நடுவில் சிக்கி சிதறு  தேங்காயாவதும்,  வீரன் யார் என்பதை தெரிந்து கொள்ள முனிஸ்காந்த், காளி வெங்கட் துரத்தி சென்று செய்யும் அலப்பறையும் வயிற்றை பதம் பார்க்கிறது.

வசனங்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்  வீரன் கோயில் ஓலைச்சுவடியை தேடுவ  தாக  கூறும் பூசாரி பின்னர் ஒரு நோட்டை கொடுத்து இதில் வீரன  கோயில்  வரலாறு இருப்பதாக கூறுவது கவணக் குறைவையும் , வசனபிழையையும்  உணர்த்து கிறது. மூர்மார்க்கெட் சென்றிருந் தால் கூட ஒலை சுவடியை  வாங்கியிருக்கலாம்.

ஹீரோயின் ஆதிராவுக்கு பெரிதாக வாய்ப்பில்லை நடன காட்சிகளில் சினேகாவை ஞாபகப் படுதத்துகிறார்  ஆதியின் நண்பராக கடைசி வரை கரிவேப் பிலை போல் ஒட்டிக் கொண்டி ருக்கிறார் சசி.

செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரித்திருக்கி றார்கள்.

ஹிப் ஹாப் தமிழா இசை போதுமானதாக இல்லை.

தீபக் டி மேனன் ஒளிப்பதிவு ஒ கே.

இயக்குநர் ஏ ஆர் கே. சரவண் சிறுவர்களுக்கான படத்தை இயக்கியிருக்கிறார். சொல்ல வந்த விஷயம் சைன்ஸ் பிக்சன் என்றாலும் அதை  சாமி பெயர் சொல்லி குழப்பி சாமி இருக்கா, இல்லையா என்பதை சொல்லாமல் நழுவி  ஹீரோ பேசும் வசனத்தில் அவர் சாமி கும்பிட மறுப்பதாக சொல்வதும் ஆனால்  சாமி பெயரில் வித்தைகள் செய்வதும் என்று அவரும் குழம்பி  படம் பார்ப்பவர்களையும் .குழப்பியிருப் பதை தவிர்த்திருக்கலாம்.

வீரன் – சிறுவர்களுக்கான  பொழுது போக்கு படம்.

 

 

 

 

 

 

 

 

Related posts

முதல்வருடன் நடிகர் விவேக் கோரிக்கை மனு

Jai Chandran

உளவுத்துறை ஐ.ஜி யாக பதவியேற்கும் ஆசியம்மாளுக்கு மக்கள் நீதி மய்யத்தின் வாழ்த்து

Jai Chandran

“பைசன்” வெற்றி விழாவில் பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆவேச பேச்சு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend