Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கண்ணை நம்பாதே (பட விமர்சனம்)

படம்: கண்ணை நம்பாதே

நடிப்பு: உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா, பிரசன்னா, ஶ்ரீகாந்த்,  வசுந்தரா, பூமிகா, சதீஷ், சென்றாயன்,  ஞான சம்பந்தம், சுபிக்ஷா, பழ கருப்பையா

தயாரிப்பு: வி. என். ரஞ்சித்குமார்

இசை: சித்துகுமார்

ஒளிப்பதிவு:ஜலந்தர் வாசன்

இயக்கம்: மு. மாறன்

ரிலீஸ்: ரெடி ஜெயன்ட்

பி ஆர் ஓ: சுரேஷ் சந்திரா

ஐ டி அலுவலகத்தில் பணி யாற்றும்  அருண்  ( உதயநிதி) தான் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டுக்காரரின்  மகள் திவ்யாவை (ஆத்மிகா) காதலிக்கிறார்.  விஷயம் தெரிந்ததும் அருணை  வீட்டிலி ருந்து வெளியேற்றுகிறார் திவ்யாவின் தந்தை. அவசரத்துக்கு சோமு  (பிரசன்னா) தங்கியிருக் கும் வீட்டில்  தங்குகிறார் அருண். இந்நிலையில் காரை ஓட்ட முடியாமல் மனகுழப்பத்தில் தவிக்கும் பெண் ஒருவருக்கு அருண் உதவுகிறார். திடீரென்று அப்பெண் சாகிறார்.  விஷயம் போலீசுக்கு தெரியாமல் மறைக்க அருண் , சோமு இருவரும் திட்டமிடுகின்றனர். அந்த பெண் எப்படி இறந்தார். இந்த சிக்கலில் இருந்து  அருண் மீண்டாரா என்பதற்கு எதிர்பாராத திருப்பங்களுடன் கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

கடைசி வரை கொலைகாரர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் பரபரப்பை ஏற்படுத்தும்  ஜேம்ஸ் பாண்ட் பாணி கதைதான் கண்ணை நம்பாதே.

உதயநிதி இதுவரை ஏற்காத பாத்திரம். ஓவர் ஆக்டிங் செய்துவிடாமல் எந்த இடத்தில் எவ்வளவு கோபப்பட வேண்டுமோ அவ்வளவு கோபப்பட்டு, எவ்வளவு பதற்றமாக வேண்டுமோ அவ்வளவு பதற்றமாகி மிக அருமையாக நடித்திருக்கிறார்.

பூமிகாவின் பிணத்தை மறைக்கவும், விபத்தில் இறந்தவரின் பிணத்தை மறக்கவும் அதை விபத்து   போல் மாற்றுவதற்கு உதயநிதியும், பிரசன்னா வும் செய்யும் வேலைகள் படத்தை விறுவிறுப்பாக்குகிறது.

தன்னை சுடுவதற்கு ஶ்ரீகாந்த் துப்பாக்கியை நீட்டி மிரட்டும்போது ரஜினிபாணியில் துப்பாக்கியை உதயநிதி மின்னல் வேகத்தில் பறித்து ஶ்ரீகாந்த்தை திணறடிக்கும்போது அரங்கில் விசில் பறக்கும்.

பிரசன்னா, ஶ்ரீகாந்த்  இருவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு சொல்லும்படியான ஆக்ஷன் பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். பூமிகா, வசுந்த்ரா எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்.  சென்றாயன் துருப்பு சீட்டாகிறார்.

ஆத்மிகா அழகில் பூரித்து நிற்கிறார். மாரிமுத்து டிவிஸ்ட்டுக்கு பயன்பட்டிருக்கிறார்.

படத்தின் காட்சிகளை இதற்கு மேல் ஓபன் செய்தாலும் கிளை மாக்ஸை யாரும் யூகிக்க முடியாது.

கார் சேசிங், அண்டர் கரன்ட் ஆக்ஷன் எல்லாமே ஹாலிவுட் தரம்.

வி. என். ரஞ்சித்குமார் தயாரித்திருக்கிறார்.

சித்துகுமார் இசை த்ரில்லை இரட்டிப்பாக் குகிறது.

ஒளிப்பதிவாளர் ஜலந்தர் வாசன்  கொட்டும் மழை, இரவு காட்சிகள் என நடிகர்களுடன் சேர்ந்து கடின உழைப்பு தந்திருக்கிறார்.

மு. மாறன் இப்படியொரு த்ரில் சஸ்பென்ஸ் கதைக்காக எவ்வளவு யோசித்திருப்பார் என்பது கதையின் ஒவ்வொரு டிவிஸ்டுமே சாட்சி கூறுகிறது.  நான்கு வருடம் கேப் விட்டு, கேப் விட்டு காட்சிகளை எடுத்திருந் தாலும் தொடர்ச்சி மிஸ்ஸாகவில்லை இதில் எடிட்டரின்  கைவண்ணமும் கைகோர்த்திருக்கிறது.

கண்ணை நம்பாதே –  சூப்பர் த்ரில் அனுபவம்.

Related posts

SilaNerangalilSilaManidhargal 2nd single Tomorrow

Jai Chandran

Hostel Teaser hit 1 MILLION

Jai Chandran

தாதா பவானி ஆனார் விஜய்சேதுபதி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend