Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கப்ஜா (பட விமர்சனம்)

படம்: கப்ஜா

நடிப்பு: உபேந்திரா, கிச்சா சுதீப், சிவராஜ்குமார், ஸ்ரேயா

தயாரிப்பு:ஆர்.சந்த்ரு, ஆனந்த் பண்டிட்

இசை ரவி பஸ்ருர்

ஒளிப்பதிவு:கணேஷ் ஆச்சார்யா, சேகர், சுந்தரம்

இயக்கம்: ஆர்.சந்த்ரு

ரிலீஸ்: லைகா

பி ஆர் ஓ: சதீஷ், சதீஷ்குமார், சிவா

கப்ஜா சுதந்திரத்துக்கு முந்தைய கால கட்டத்தில் தொடங்கி 80கள் வரை கர்நாடக மாநிலம் அமரா புரம் பகுதியில் நடக்கும் மன்னர் பரம்பரை கேங்ஸ்டர் காலித்பாய் மற்றும் சாமான்ய குடும்பத் தை சேர்ந்த ஆர்க்கேஷ் வருக்கும் (உபேந்திரா); நடக்கும் மோதல். ராஜவம் சத்தை வீழ்த்தி மக்களை அடிமையாக நடத்தும் காலித்பாய் ஆர்க்கேஷ் வரனின் அண்ணனை கொலை செய்கிறான். அதற்கு பழிவாங்க புறப் படும் ஆர்க்கேஷ்வரன் காலித் பாயை கொன்று தானே கேங்ஸ்டராக ஊருவெடுக்கிறான். அவனை யாரும் அசைக்க முடியாது என்ற நிலையில் டெல்லி அரசே ஆர்க்கேஷ் வரை கொல்ல ஒரு போலீஸ் அதிகாரியை அனுப்புகிறது. அடுத்து நடப்பது என்ன என்பது கிளைமாக்ஸ்.

கே ஜி எப் படm வெளியான பிறகு அதுபோல் ஒரு கேங்ஸ்டர் கதையை தர வேண்டும் என்ற முனைப்பே கப்ஜா படத்தின் உருவாக்கம்.

ஆர்க்கேஷ்வர் கதாபாத் திரத்தில் கன்னட நடிகர் உபேந்திரா நடித்திருக்கி றார். அவருக்கும் ராஜா பரம்பரையே சேர்ந்த ராஜகுமாரி ஸ்ரேயாவுக் கும் மலரும் காதல்தான் படத்தின் மோதலாக மாறப்போகிறது என்று எண்ணும் நிலையில் திசை திரும்பி கேங்ஸ்டர் மோதலாக மாறுவது விறுவிறுப்பு.

உபேந்திரா முழுக்க ஆக்ஷன் அவதாரமாக உருவெடுத்து சண்டை காட்சிகளில் அதிர விடுகிறார். காலித் பாயுடன் நேருக்கு நேர் மோதி அவனது தலையை பொது இடத்தில் வைத்து வெட்டி துண்டாக்குவது திகில் பரவச் செய்கிறது.

காலித்பாய் ஆட்டம் முடிந்தது என்று நினைத் தால் அவனைத் தொடர்ந்து வரும் அடுத் தடுத்த கேங்ஸ்டர் லீடர் களின் கொட்டம் ஆக்ஷ்ன் அதிரடியை தொடர் கதையாக்குகிறது.

படம் முழுக்க உபேந்திரா வின் ஆக்கிரமிப்பு கொடிகட்டி பறக்கிறது. கிச்சா சுதீப் என்ட்ரி, சிவராஜ் குமார் என்ட்ரி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி. ஆனால் இவர் களின் ஆட்டமெல்லாம் கப்ஜா இரண்டாம் பாகத்தில்தான் பார்க்க முடியும்.

ராஜகுமாரியாக ஸ்ரேயா வருகிறார் பரதம் ஆடி கவர்ந்தாலும் இளமை முகத்தை அவர் இழந்தி ருப்பது மைனஸ். உபேந்திரா என்னதான் ஆக்ஷன் செய்தாலும் அவரது முதிர்ச்சியும் களோசப் காட்சிகள் காட்டிக்கொடுக்கின்றன. படத்தின் 2ம் பாகம் வெளி வரும்போது இன்னொரு இளம் ஜோடி கதை இருந்  தால்தான் எடுபடும். இதை இயக்குனர் கவனத்தில் கொள்வது நல்லது.

படத்தின் பிரமாண்டம், இசை இரண்டும் காட்சி களை தாங்கிப் பிடிக்கி றது.

ஆர்.சந்த்ரு, ஆனந்த் பண்டிட் கோடிகள் கொட்டி தயாரித்திருக்கின்றனர்.

ரவி பஸ்ருர் இசை பிரமாண்டத்தை கூட்டிக் காட்டுகிறது

கணேஷ் ஆச்சார்யா, சேகர், சுந்தரம் இருள்சூழ் ஒளிப்பதிவு ஆக்ஷன் மூடை தக்க வைக்கிறது.

இயக்குனர் ஆர்.சந்த்ரு பிரமாண்டம், ஆக்ஷனை பெர்பெக்டாக கொடுத்தி ருந்தாலும் ஏகப்பட்ட கதாபாத்திரங்களில் கதையை புரிய வைப் பதில் குழப்பம் ஏற்படு கிறது.

பான் இந்திய படமாக உருவாக்கும்போது பிற மொழி முக்கிய நடிகர்கள் ஓரிருவரையாவது படத்தில் இணைப்பது அவசியம் என்பதை இயக்குனர் எப்படி மறந்தார்.

கப்ஜா ஆக்ஷன் பிரியர்களுக்கு

 

Related posts

கரகாட்டக்காரன் கூட்டணி இளையராஜா- ராமராஜன் இணையும் சாமானியன்

Jai Chandran

பேரறிவாளன் விடுதலை: ச ம க தலைவர் ரா.சரத்குமார் வரவேற்பு

Jai Chandran

Iஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 2000 நெருங்குகிறது

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend