Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பியூட்டி (பட விமர்சனம்)

படம்: பியூட்டி

நடிப்பு: ரிஷி, கரீனா ஷா, காயா கபூர், சிங்கமுத்து, ஆதேஷ் பாலா, மனநல மருத்துவர் ஆனந்தன்

தயாரிப்பு: ஆர்.தீபக் குமார்

இசை: இலக்கியன்

ஒளிப்பதிவு: ஆர்.தீபக் குமார்

இயக்கம்: கோ ஆனந்த் சிவா

பி ஆர் ஓ : கிளாமர் சத்யா

அழகு என்பது முகத்தில் அல்ல அகத்தில் காட்டும் அன்பில்தான் உள்ளது என்ற கருவை வைத்து உருவாகியிருக்கிறது பியூட்டி.

பண்ணையார் குடும்பத்தை சேர்ந்த ரிஷி தந்தை, தாயின் சொல்லுக்கும் அரவணைப்புக்கும் கட்டுப்பட்டவர். தாய் இறந்தபிறகு தந்தை. அழகான பெண் பார்த்து 2ம் திருமணம் செய்து கொள் கிறார். வந்தவளோ ரிஷியை சிறுவனாக இருக்கும் போது கொடுமைப் படுத்துகிறாள். அரிவாள் மனையால் முகத்தில் கீரல்போடுகிறாள். அதைக்கண்டு வேதனை அடையும் பண்ணையார் தன் மகனுக்கு அட்வைஸ் செய்கி றார். நீ அழகான பெண்ணை மணக்காதே முக அஜகில்லாத அல்லது ஊனமுற்ற பெண்ணை பார்த்து மனந்துகொள் என்கிறார். முகத்தில் தீக்காயம் பட்ட பெண்ணை கண்டு காதலிக்கிறார் ரிஷி. ஒரு கட்டத்தில் அந்த பெண் தீக்காயத்தை சர்ஜரியில் சரி செய்து அழகாகிறாள். அதைக் கண்டு ஷாக் ஆகும் ரிஷி அவள் முக அழகை சிதைக்க துடிக்கி றான். இதன் முடிவு என்ன என்பது கிளைமாக்ஸ்.

ரொம்ப நாட்களுக்கு பிறகு திரை யில் தலைகாட்டியிருக்கிறார் ரிஷி. மதில் மேல் பூனைபோன்ற பாத்திரம் ஹீரோ என்றாலும் கொஞ்சம் தப்பினால் வில்லானா கிவிடும். அதை சரியாக உள்வாங்கி பெயர் கெடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். தந்தை மகன் வேடத்திலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.

வசனங்களை தெளிவாக பேசும் ரிஷி காதலியின் முகத்தை விகாரமாக்க துடிக்கும்போது இப்படி கூடவா ஒரு காதலன் இருப்பான் என்று நோகடிக்கிறார் ஆனால் ஒரு சைக்கோ இப்படித் தான் இருப்பான் என்று எண்ண வைக்கிறார்.

ரிஷியின் காதலி கரீனா ஷா வேடத்துக்கு போதுமான நடிப்பு வழங்குகிறார். சிங்கமுத்துவை காமெடிக்கு நன்கு பயன்படுத்தி யிருக்கலாம். மேலும் காயா கபூர், சிங்கமுத்து, ஆதேஷ் பாலா, மனநல மருத்துவர் ஆனந்தன் நடித்திருக்கின்றனர்.

ஆர்.தீபக் குமார் தயாரித்திருக் கிறார்.

இலக்கியன் இசை, ஆர்.தீபக் குமார் ஒளிப்பதிவு ஒ கே

காதல் அழகில் இல்லை காட்டும் அன்பில்தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார் இயக்குனர் கோ ஆனந்த் சிவா . அதை இன்னுமும் கூட அழுத்தமாக கூறியிருக்கலாம்.

பியூட்டி அழகின் தீர்வு.

 

Related posts

கோட்டா சீனிவாச ராவ் மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல்

Jai Chandran

உலகெங்கும் டான் படம் வெளியிடும் ஐபிக்ஸ்

Jai Chandran

உளவாளிகள் உண்மைக் கதை சர்தார்: கார்த்தி பேச்சு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend