Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

டாடா ( பட விமர்சனம்)

படம்: டாடா

நடிப்பு: கவின், அபர்ணா தாஸ், கே.பாக்யராஜ், ஐஸ்வர்யா, விடிவி கணேஷ், ஹாரிஸ், ஹெலன், பவுசி, காமல், பிரதீப்,

இசை: ஜென் மார்ட்டின்

தயாரிப்பு: அமீத்குமார்

ஒளிப்பதிவு: எழிலரசன்

இயக்கம்: கணேஷ் கே பாபு
ரிலீஸ்: ரெட் ஜெயன்ட்

பி ஆர் ஒ : சுரேஷ் சந்திரா, ரேகா D’One

மணிகண்டன் (கவின்), சிந்து (அபர்ணா தாஸ்) காதல் ஜோடிகள் திருமணத்துக்கு முன்பே இணை சேர்கின்றனர். குடும்பத்தை பிரிந்து நண்பனின் உதவியுடன் தனியாக வாழும் இவர்களுக்கு வாழ்க்கை பிரச்னையாகிறது. 10 ஆயிரம் சம்பளத்துக்கு வேலை பார்க்கும் மணிகண்டன் கர்ப்பிணி யாக இருக்கும் சிந்துவை சரியாக கவனிக்க முடியாமல் திணற இருவருக்கும் சண்டை வருகிறது. கோபத்தில் வெளியே செல்லும் மணிகண்டன் பிரசவ வலியால் துடிக்கும் மனைவியின் போன் அழைப்பை கூட எடுக்க மறுக்கி றான். அக்கம் பக்கத்தினர் சிந்துவை மருத்துவமனையில் சேர்க்கின்றனர். பிறந்த குழந்தையை விட்டு விட்டு பெற்றோருடன் சிந்து செல்கிறாள் சிந்து. விஷயம் அறிந்து மருத்துவ மனை செல்லும் மணி தனியாக இருக்கும் குழந்தையை எடுத்து வளர்க்கிறான். 4 வருடங்களுக்கு பிறகு சிந்துவை தன் மேல் அதிகாரியாக மணிகண்டன் சந்திக்கிறான். அதன் பிறகு நடப்பது என்ன என்பதை உருக்கமுடன் விளக்குகிறது கிளைமாக்ஸ்.

பான் இந்தியா காலத்திலும் அத்திபூத்தார்போல் இப்படிப்பட்ட குடும்ப படங்கள் வருவது ஆறுதல் தருகிறது.

கவின் அபர்ணாதாஸ் சேட்டை காதலர்களாக வலம் வருவார்கள் என்று நினைத்தால் அபார நடிப்பை தந்து திணறடித்து விடுகிறார்கள்.
ஐ டியில் வேலை பார்ப்பவர்கள் என்றாலே கலாச்சாரம் மறந்து இஷ்டத்துக்கு சுற்றுவார்கள் என்ற வழக்கமான சினிமாத்தனத்தை யும் இந்த ஒரே படம் ஒட்டுமொத்த மாக திருப்பி போட்டு புதிய நம்பிக்கையை தந்திருக்கிறது.

அபர்ணா பிரிந்து சென்றதும் கைக்குழந்தையை வளர்க்கசிரமப் படும் கவின் ஒரு கட்டத்தில் குழந்தையை அனாதை விடுதியில்விடத் துணிவதும் பின்னர் குழந்தையை மீட்டு வளர்ப்பதும் தந்தை சென்டிமென்ட்.

அம்மா என்று சொல்லச் சொன்னால் டாடா என்று குழந்தை சொல்வதைக் கேட்டு கவின் பூரிப்பது நெகிழ்ச்சி.

பின்னர் பெரிய ஐ டி அலுவல கத்தில் வேலைக்கு சேரும் கவின் அங்கு தன் மேல் அதிகாரியாக அபர்ணா வருவதை கண்டு பம்முவதும் பிறகு மனதை தேற்றிக் கொண்டு வேலை பார்க்கத் தொடங்கியதும் காட்சிகள்
இறக்கை கட்டிக்கொள்கின்றன.

பல சுவாரசிய சம்பவங்கள் அரங்கேறும் நிலையில் இப்படத்தின் கிளைமாக்ஸ் ஈரமுள்ள நெஞ்சுள்ளவர்களை கண்ணீரில் மிதக்கவிடுவதும் அதற்கேற்ற உருக்கமான நடிப்பை கவின் அபர்ணா தந்திருப்பதும் படத்தின் வெற்றிக்கு கட்டியம் கூறுகிறது.

கவின் நெருங்கிய நண்பராக வரும் அமித்தை இனி நிறைய படங்களில் பார்க்கலாம். மற்ற பாத்திரங்களும் சொத்தாப்பாமல் கைகொடுத்திருக்கின்றன.

ஜென் மார்ட்டின் இசை காட்சிகளை உயர்த்தி பிடிக்கிறது .

கதை மீதும் இயக்குனர் மீதும் தயாரிப் பாளர் அமீத்குமார் வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை.

ஒளிப்பதிவு எழிலரசன்
கைவண்ணம் சிறப்பு.

முதல்படமாக இப்படியொரு கதையை கணேஷ் கே பாபு இயக்கியிருப்பது அவரது பக்குவப்பட்ட நேர்த்தியை காட்டு கிறது. அந்தக்கால கட்டத்தில் கே பாக்யராஜ் சரிதா நடித்த மவுன கீதங்கள் கதையை மீண்டும் உல்ட்டாவாக பார்த்துபோல் உணர்வு மேலிடுகிறது.

டாடா – மீண்டும் ஒரு மவுனகீதம்.

Related posts

‘KAUN PRAVIN TAMBE?’ Trailer

Jai Chandran

ராம் சரண் ‘பெத்தி’ (Peddi) அறிமுக பாடல் 41.6 மில்லியன் பார்வை சாதனை

Jai Chandran

“கேப்டன்” படத்துக்காக மிருகத்துடன் சண்டை போட்ட அனுபவம்: ஆர்யா பேச்சு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend