Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“நினைவெல்லாம் நீயடா” பட மோஷன் போஸ்டர் வெளியிட்ட கௌதம் மேனன்

இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக உருவாகி வருகிறது “நினைவெல்லாம் நீயடா”.

லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரமாண்ட மாக தயாரிக்கும் இந்த படத்திற்கு, சிலந்தி, ரணதந்த்ரா, சமீபத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன் கதை திரைக்கதை வசனங்களை எழுதி இயக்கி வருகிறார். பிரஜன் கதாநாயகனாக நடிக்க மனிஷா யாதவ் மற்றும் சினாமிகா கதாநா யகிகளாக நடிக்கின்றனர். இளம் நாயகன் நாயகியாக ரோஹித் – யுவலட்சுமி ஜோடி நடிக்க, முக்கிய கதாப்பாத்திரங்களில் ரெட்டின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா, டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், முத்துராமன், பி எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள் ளனர்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்த படத்தின் மோஷன் போஸ்டரை, இளம் ரசிகர்களின் இதயம் கவர்ந்த இயக்குநரும், தனது மாறுபட்ட நடிப்பால் முன்னணி நடிகராக உயர்ந்து வருபவருமான கௌதம் வாசு தேவன் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

“இந்த படத்திற்காக அசத்தலான ஐந்து பாடல்களை உருவாக்கி தந்திருக்கிறார் இசைஞானி. அதில் “இதயமே …இதயமே…” என்று தொடங்கும் பாடலை இளையராஜா எழுத “யங் மேஸ்ட்ரோ’ யுவன் சங்கர் ராஜா பாடியிருக்கிறார். இந்த பாடல் நிச்சயமாக ரசிகர்களின் இதயங் களை கொள்ளையடிப்பது உறுதி. பழநிபாரதி, சினேகன் எழுதியி ருக்கும் மற்ற பாடல்களும் ரசிகர் களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அமரும். மனசுக்குள் தோன்றிய முதல் காதல் மண்ணுக்குள் போகும் வரை மறக் காது என்ற கருத்தை மையமாக வைத்து இளமை துள்ள இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன். பள்ளி பருவத்து காதலை கொண் டாடிய அழகி ஆட்டோகிராப் பள்ளிக் கூடம் காதல் 96 படங்களின் வரிசை யில் ‘நினைவெல்லாம் நீயடா’ படமும் நீங்கா இடம் பிடிப்பது உறுதி. விரைவில் முதல் பாடல் வெளியிடப்பட இருக்கிறது” என்று தெரிவித்தார் இயக்குனர் ஆதிராஜன்.

இந்த படத்திற்கு ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பை கவனித் திருக்கிறார். முனிகிருஷ்ணன் கலை அமைக்க சண்டை காட்சி களை பிரதீப் தினேஷ் அமைக்க, நடன காட்சிகளை தினேஷ் மற்றும் தீனா மாஸ்டர்கள் வடிவமைத்திருக் கின்றனர். தயாரிப்பு நிர்வாகம் இளங்கோ.

Related posts

‘மாயோன்’ பட ஒளிப்பதிவாளருக்கு பாராட்டு

Jai Chandran

ஆதியின் “சப்தம்” பட டிரெய்லர் வெளியீட்டு விழா !

Jai Chandran

Hollywood movie ‘The Marksman’ in English, Tamil, Hindi and Telugu .. Tel Ganesan’s Kyba Films to release

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend