Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

அருவா சண்ட (பட விமர்சனம்)

படம் : அருவ சண்ட

நடிப்பு : வி.ராஜா, மாளவிகா மேனன், சரண்யா, நரேன், சவுந்தர்ராஜா, காதல் சுகுமார், கஞ்சா கருப்பு,

தயாரிப்பு: வி.ராஜா

இசை: தரண்குமார்

ஒளிப்பதிவு: சந்தோஷ் பாண்டி

இயக்கம்: ஆதிராஜன்

பி ஆர் ஒ:  மவுனம் புவன்

வள்ளியம்மாள் (சரண்யா மகன்  முத்து (வி.ராஜா) தந்தையை  போலவே கபடி விளையாட்டில் ஆர்வமாக இருக்கிறார். அவனுக்கு அம்மாவும்ச)  சாதகமாக இருக்கி றார்   ஊர் பணக்காரர் மாயாண்டி (நரேன்) மகள்  ரம்யா (மாளவிகா
மேனன்)  கபடி விளையாட்டு பற்றி ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுத தோழிகளுடன் புறப்படுகிறார். இதற்காக  முத்துவை சந்தித்து பேட்டி எடுத்து  தனது கபடி லட்சியத்துக்கு ரம்யா துணை நிற்கிறார். இவர்கள்  நட்பு காதலாகிறது. ஆனால் சாதி வெறி பிடித்த மாயாண்டி எதிர்ப்பு தெரிவிக்கிறார். முத்துவை விட்டு விலகிச் செல்லும்படி ரம்யாவிடம் வள்ளியம்மாள் கேடடுக்  கொள்ள முறைமாமனுக்கு கழுத்தை நீட்ட முடிவு செய்கிறாள் .ரம்யா. ஆனால் முத்துடனான  நட்பு  இருவரையும் வேறு பாதைக்கு கொண்டு செல் கிறது. இதில் முத்து கதி என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் விடை சொல்கிறது.

ஆணவக் கொலை பற்றி சில  படங்கள் வந்திருந்தாலும் அருவ சண்ட அந்த களத்தை வேறு வகையில் கையாண்டிருக்கிறது. இயக்குனர் ஆதிராஜன் கிளைமாக் ஸில் ஜாதி வன்முறைக்கு சவுக்கடி தரும் வகையில் எதிர்பாராத காட்சி அமைத்து சிலிரிப்பை ஏற்படுத்து கிறார்.

ஹீரோவாக அறிமுகமாகியி ருக்கும் வி.ராஜா கிராமத்து நிறத்துடன் மண்ணின் மைந்தனாக வாழ்ந்திருக்கிறார்.
கபடியில் பாட்டுபாடி எதிர் அணி யினரை  அவுட் ஆக்குவதும் நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக பொழுதை கழிப்பதுமாக  பாத்திரத்தில் ஒன்றியிருக்கிறார்.
மளவிகா மேனனுடன் காதல் காட்சிகளில் நடிக்கும்போது திணறுகிறார். பாடல் காட்சிக ளிலும் மாளவிகாவிடம் தள்ளி நின்றே ஆடியிருக்கிறார்.

சவுந்தராஜாவுடன் கபடி ஆடும் ராஜா பின்னர் அவர் விடும் மிரட்டலை கண்டுகொள்ளாமல் விலகி சென்று அடுத்த வேலை பார்ப்பதும் கபடி விளையாட்டிலி ருந்து விலகும்படி தன்னிடம் சவுந்தர்ராஜா கூறியதும் அவரிடம் சவால்விட்டு நகர்வதுமாக  எதார்த மாக நடித்து கவர்கிறார் ராஜா.

காதலை மறந்து விடும்படி சரண்யா கூறும்போது தலையாட்டி விட்டு பிறகு அவருக்கு போன் செய்து பேசி வம்பில் சிக்குவதும் அரிவாளை சவுந்தர ராஜா கழுத்தில் வைத்து மிரட்டும்போது அவரிடம் எங்களை சேர்ந்து வாழ விடும்படி கெஞ்சுவதும்  சமயோசித மிஸ்ஸிங்.

வில்லனாக சவுந்தர்ராஜா நடித்திருக்கிறார்..மாமன்  மகளுடன் பேசியதற்காக வயல்வெளியில் ராஜாவை மடக்கி அரிவாள் வீசி வெட்டும்போது மிரட்டுகிறார். இது சவுந்தரின் 33து படமாகும்.

மாளவிகா மேனன் இயக்குனர் சொன்னதை செய்திருக்கிறார். சுடுகாட்டில் சாம்பலை எடுத்து நரேன் முகத்தில் வீசி இப்ப எங்க போச்சியா உங்க சாதி என்று கேட்டு மனதை நெகிழ வைக்கிறார் சரண்யா.

தரண்குமார் இசையில் சிட்டு சிட்டு  குருவி, வீர தமிழன் பாடல்கள் மயக்குது.

சந்தோஷ் பாண்டி ஒளிப்பதிவு பழுதொல்லை.

இயக்குனர் ஆதிராஜன்  சாதிகள் இல்லையடி பாப்பா என்று சாதி சச்சரவுகளுக்கு வேப்பிலை அடித்திருக்கிறார்.

அருவ சண்டை – ஆணவ அறுவடை.

 

 

Related posts

ஐந்து மொழிகளில் தயாராகியுள்ள ” பொல்லாப்பு ” 

Jai Chandran

Lahari Music Congratulate D.Imman On Receving National Award for Viswasam Movie.

Jai Chandran

பட்டத்து அரசன் ( பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend