Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பைக்கர் (பட விமர்சனம் )

படம்: பைக்கர்

நடிப்பு: சர்வானந்த், டாக்டர் ராஜசேகர், அதுல் குல்கர்னி, மாளவிகா நாயர், துளசி

தயாரிப்பு: வி வம்சி கிருஷ்ணா
ரெட்டி, பிரமோத் உப்பிலபடி

இசை: ஜிப்ரான்

ஒளிப்பதிவு : ஜே யுவராஜ்

இயக்கம்: அபிலாஷ் ரெட்டி கன்கரா

பிஆர்ஓ : யுவராஜ்

கதை: பிரபல பைக் ரேசர் பயிற்சியாளர் சுனில் நாராயணன் ( டாக்டர் ராஜசேகர்). பைக் ரேஸ் போட்டியில் பங்கேற்க தனது மகன் விகாஷ் நாராயணனுக்கு (சர்வானந்த் ) பயிற்சி அளிக்கிறார். அவரும் தீவிரமாக பயிற்சி எடுத்து போட்டியில் பங்கேற்க அப்போது நடக்கும் ஒரு விபத்தை கண்டு அதிர்ச்சி அடைந்து, இனி பைக் ரேஸில் பங்கேற்பதில்லை என்ற முடிவுடன் குடும்பம் நடத்த சென்று விடுகிறார். இதனால் அவரை ஒப்பந்தம் செய்த கம்பெனி, தந்தை சுனில் நாராயணனிடம் பணத்தை திருப்பி கேட்கிறது. தந்தைக்கு ஒரு அவமானம் என்ற நிலையில் அவரது கௌரவத்தை காப்பாற்ற விகாஷ் நாராயணன் சர்வதேச அளவில் நடக்கும் பைக் ரேஸ் போட்டியில் பங்கேற்க முடிவு செய்து வருகிறார். அவருக்கு தந்தை சுனில் நாராயணன் பயிற்சி அளித்தாரா? மீண்டும் குடும்பம், குழந்தை என்று விகாஷ் நாராயணன் இல்லற வாழ்க்கைக்கு திரும்பி சென்றாரா என்பதற்கு கிளைமாக்ஸ் புல்லரிக்கும் விதத்தில் பதில் அளிக்கிறது.

சர்வானந்தை மென்மையான ஹீரோவாக பார்த்து வந்த ரசிகர்களுக்கு இப்படத்தில் அவரது தோற்றமும் கதாபாத்திர தன்மையும் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.

பைக் ரேசர் விகாஸ் நாராயணாக நடித்திருக்கும் சர்வானந்த் அந்தக் கதாபாத்திரத்துக்காக உடல் எடையை பல கிலோ குறைத்து ஸ்லிம் பிட்டாகியிருப்பதுடன் பைக் ரேஸ் செய்யும் அளவுக்கு கடுமையான பயிற்சிகளையும் மேற்கொண்டிருப்பது அவரது நடிப்பில் வெளிப்படுகிறது.

தன்னால் தன் தந்தை ராஜசேகர் அவமானப்பட்டு விட்டார் என்பதை உணர்த்து மீண்டும் அவரிடம் சேர்ந்து தனக்கு பைக் ரேசர் பயிற்சி அளிக்க கேட்டு அடம்பிடிப்பதும், பின்னர் அந்த பயிற்சிக்காக கடுமையான உடற்பயிற்சிகள் மேற்கொள்வதும் ஏற்கனவே இதுதாண்டா போலீஸ் படத்தில் ராஜசேகர் செய்த கடுமையான போலீஸ் பயிற்சிகளை ஞாபகப்படுத்துகிறது.

தந்தை சென்டிமெண்ட், மனைவி சென்டிமென்ட் குழந்தை சென்டிமென்ட் என்று ஒரு பைக் ரேஸ்சரின் இல்லற வாழ்க்கை எப்படி எல்லாம் சொந்தங்களை பாதிக்கிறது அதிலிருந்து மீண்டு ரேசில் ஜெயித்து சாம்பியன் ஆவது எவ்வளவு சிரமம் என்பதை படத்தின் சென்டிமென்ட் காட்சிகளும், கிளைமாக்ஸ்சில் நடக்கும் ஆபத்தான சர்வதேச பைக் ரேஸ் காட்சியும் உணர்த்துகிறது.

பைக் ரேசின்போது பைக்குகள் விண்ணை தொடும் அளவுக்கு உயரத்தில் பறந்து அம்மாடியோவ் போட வைக்கிறது.
சர்வானந்த் மனைவியாக மாளவிகா நாயர் நடித்திருக்கிறார். சர்வானந்த்தை ஸ்பான்சர் செய்யும் தொழில் அதிபராக அதுல் குல்கர்ணி மற்றும் துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

வி வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் உப்பிலபடி படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

இசை  அமைப்பாளர் ஜிப்ரான் இசையில் பைக் ரேஸ் காட்சிகள் நெருப்பை கக்கும் அளவுக்கு மின்னல் வேகத்தில் செல்லும் ஒலி பிழம்பை அரங்கிற்குள் கக்குகிறது. பான் இந்தியா படங்களுக்கு இசையமைக்கும் திறமை தனக்குள் இருப்பதை உறுதி செய்திருக்கிறார் ஜிப்ரான்.

ஜே.யுவராஜ் ஒளிப்பதிவில் மின்னல் வேக பைக் ரேஸ் காட்சிகள் கண்ணுக்குள் சுழண்றடிக்கிறது.

இயக்குனர் அபிலாஷ் ரெட்டி கன்கரா படத்தை பைக் ரேசர் படமாக எடுத்தாலும் அதில் குடும்ப செண்டிமெண்ட் கலந்து வெற்றி பார்முலாவுக்கு வித்திட்டிருக்கிறார். இந்தியாவின் முதல் பைக் ரேஸ் படம் என்ற பெருமையும் இந்த படத்திற்கு இயக்குனர் சேர்த்திருக்கிறார்.

பைக்கர் – விளையாட்டு பிரியர்களுக்கு மட்டுமல்ல விளையாட்டு பிரியரல்லாதவர்களையும் ஈர்க்கும்.

Review By
K Jayachandhiran
trending cinemas now.com

 

Related posts

ZEE5 “Anantham” and “Kaarmegam” Widely Spoken Tamil Series

Jai Chandran

நகைச்சுவை நடிகர் ஆர்.எஸ் சிவாஜி திடீர் மரணம்

Jai Chandran

வில்லன் அவதாரம் எடுக்கிறாரா சத்யராஜ் ?

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend