Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

நெடுநீர் (பட விமர்சனம்)

படம்: நெடுநீர்

நடிப்பு: ராஜ்கிருஷ், இந்துஜா, மா சத்யா முருகன், மதுரை மோகன், எஸ்.கே. மின்னல் ராஜா

தயாரிப்பு: விஎஸ்.பாளையம் எஸ்.கிருஷ்ணமூர்த்தி

இசை: ஹித்தேஷ் முருகவேல்

ஒளிப்பதிவு : லெனின் சந்திரசேகரன்

இயக்கம்: கி.பத்மநாபன்

பி ஆர் ஒ: வெங்கட்

தவறான வாழ்க்கை நடத்தும்  தந்தையை கொன்றுவிட்டு ஊரை விட்டு ஓடிவருகிறான் கருப்பு (ராஜ் கிருஷ்) ஒரு கட்டத்தில் தனக்கு அடைக்கலம் தரும் அண்ணாச்சி யின் உயிரை எதிரிகளிடமிருந்து காப்பாற்றுகிறான்.. அவனை தனது பிள்ளைபோல் பார்த்துக் கொண்டாலும்   அண்ணாச்சியும்  சட்ட விரோத  செயல்களில் ஈடுகிறார். அதற்கு உடந்தையாக இருக்கும் கருப்பு நீண்ட நாட்க ளுக்கு பிறகு தனது காதலியை சந்திக்ககிறான். சட்டவிரோத செய லில் ஈடுபட வேண்டாம் இருவரும் திருமணம் செய்துகொண்டு நிம்மதியாக வாழலாம் என்கிறாள் காதலி. அதை அண்ணாச்சியிடம் சொல்லி அவரிடமிருந்து பிரிகி றான் கருப்பு.  அதன் பிறகு நடந்தது என்ன என்பதை படம் விளக்குகிறது.

படத்தில் பெரும்பாலும் புதுமுகங்  களே நடித்திருந்தாலும் அந்தந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்தி ருக்கின்றனர்.

கருப்பு வேடம் ஏற்றிருக்கும் ராஜ் கிருஷ் ஓவர் ஆக்டிங் செய்யாமல் இயல்பான நடிப்பில் மிளிர்கி  றார்.அண்ணாச்சியை எதிரிகள் சுற்றி வளைத்து கத்தி யால் குத்தும்போது. அந்த கத்திக் குத்தை தான் தாங்கிக்கொண்டு அவர் உயிரை காப்பாற்றும்போது நன்றி மறக்காத இளஞனாக இடம்பிடிக்கிறார்  ராஜ்கிருஷ்..

காதலியுடன் வாழ்வதற்காக அண்ணாச்சியின் சொத்துக்கு  வாரிசு என்பதைக்கூட உதறிவிட்டு வருவது கதாபாத்திரத்துக்கும் காதலுக்கும் வலு சேர்க்கிறது.

அண்ணாச்சி வேடம் ஏற்றிருக்கும் ம.சத்யா முருகன் வேடத்துக்கு ஏற்ற கம்பீரம் காட்டுகிறார். ஒற்றை ஆளா ரவுடிகளை அந்தர் செய்யும் போது வலிமைக்கு வயது தடை யிலலை என புரிய வைக்கிறார்.

ராஜ்கிருஷ் காதலியாக வரும் இந்துஜா சினிமாதனமில்லாத பக்கத்து வீட்டு பெண் போல் தோன்றுகிறார். அரிதாரம் அதிகம் பூசாத முகப்பரு அழகும் பின்னர் அரிதாரம் பூசி புன்சிரிப்புடன் கூடிய இளமை முகமும் இந்துஜா வுக்கு பாஸ் மார்க்கை பெற்றுத் தருகிறது. அதே சமயம் நடிப்பில்  இன்னும் பல மைல்கல்கள் தாண்ட வேண்டியிருக்கிறது.

கடல் பகுதிகள் கண்களை ஜில்லிட வைக்கிறது
மற்றபடி படத்தில் ஸ்பெஷல் ஒன்றுமில்லை.

இயக்குனர் கு.கி.பத்மநாபன் காதலுடன் ஆக்‌ஷனை கலந்திருக் கிறார். திரைக்கதையில் இன்னும் அழுத்தமான காட்சிகளை யோசித் திருக்கலாம் .

இதேஷ் முருகவேல் இசையில்
லைஃப் ஒரு லெசனு….கானா தத்துவ பாடலாக ஒலிக்கிறது.
காதலியே காதலியே… ஆகிய பாடல்கள் இனிமை.

நெடுநீர் – எதிரும் புதிருமாக ஒரு துறைமுக வாழ்க்கை.

Related posts

உடன்பிறப்பே (பட விமர்சனம்)

Jai Chandran

Ashwin as a lead titled EnnaSollaPogirai

Jai Chandran

ஒரு தவறு செய்தால் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend