Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

வரலாறு முக்கியம் ( பட விமர்சனம்)

,படம்: வரலாறு முக்கியம்

நடிப்பு: ஜீவா, வி டி வி கணேஷ், காஷ்மீரா பர்தேஷி, பிரக்யா, கே எஸ்.ரவிகுமார், சரண்யா, மொட்டை ராஜேந்திரன், ஆதிரை சவுந்திரராஜன், ஷிவா ஷா ரா, டி.எஸ்.கே

தயாரிப்பு: ஆர்.பி.சவுத்ரி வழங்கும் சூப்பர் குட் பிலிம்ஸ்

இசை: ஷான் ரஹமான்

ஒளிப்பதிவு: சக்தி சரவணன்

இயக்கம்: சந்தோஷ் ராஜன்

பி ஆர் ஒ: சுரேஷ் சந்திரா ரேகா (D’one), நாசர்

கோயமுத்தூரை சேர்ந்த பள்ளி வாத்திரார் கோபால்  (கே.எஸ்.ரவி  குமார்)  மகன் கார்த்திக் (ஜீவா). வெட்டியாக ஊரை சுற்றும் இவர் இளவட்ட பெண்களை சுற்றிச் சுற்றி வட்டமடிக்கிறார். தனது தெருவில் குடியேறும் மலையாள பெண்கள் யமுனா (காஷ்மீரா ) ஜமுனா (பிரக்யா) இருவரையும் கண்டு குதுகலமடைகிறார் கார்த்திக். ஜமுனா பின்னால் சுற்றி அவரை காதல் வலையில் வீழ்த்தமு முயல்கிறார் ஆனால் அது எளிதில் கைகூடவில்லை அதேசமயம் ஜமுனா கார்த்திக்கை கண்டதும் காதலில் விழுகிறார் ஆனால் யமுனாவைத்தான் கார்க்திக் காதலிக்கிறார். இதையறிந்த அவரது தந்தை தனது மகள்களை துபாய் மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்க முயல்கிறார். இதன் முடிவு என்ன என்பதற்கு படம் பதில் சொல்கிறது.

கொரோனா கால கட்டத்தில் மக்கள் விட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்து டென்ஷனாகயிருந்த நிலையில் ரிலாக்ஸாக ஒரு கதையை கொஞ்சம் கவர்ச்சி மசாலா தடவி சொல்ல வேண்டும் என்று எண்ணி இப்படியொரு கதையை இயக்குனர் உருவாக்கி யிருக்கிறார் என்று தோன்றுகிறது. ஆனால் காலகட்டம் மாறிவிட்ட தால் கதை விமர்சனத்துக்குள்ளா  கியிருக்கிறது.

அப்பா அம்மா பேச்சை கேட்காமல் பெண்களை சைட் அடித்துக் கொண்டு சுற்றும் லவ்வர் பாயாக வலம் வருகிறார் ஜீவா. கதாபாத் திரத்துக்கு என்ன நியாயம் செய்ய வேண்டுமோ அதை செய்திருக் கிறார். ஆனால் எல்லாம் விழலுக்கு இரைத்த நீராகிவிடுகிறது.
காஷ்மீராவை காதல் வலையில் வீழ்த்த ஜீவா படும்பாடு காஷ்மீராவின் தங்கையின் காதலுக்கு ஒர்க அவுட்டாகி விடுவது காமெடி.

காதலுக்கு நூல் விடும் வேலையை தவிர ஜீவாவுக்கு வேறு வேலையில்லாததால் அவரது நடிப்பும் ஒரு வட்டத்துக்குள் சுருங்கி விடுகிறது. வி டி வி கணேஷ் ஏ ஜோக் மன்னனாக வருகிறார். அவரது வசனங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் என்பதைவிட ஒற்றை அர்த்த வசனங்கள் வந்து விழுந்து முகம் சுளிக்க வைக்கிறது.

மலையாள பெண்களாக வரும் காஷ்மீராவும், பிரக்யாவும் இளசுகளை ஜொள்ளுவிட வைக்கின்றனர். மலையாள பெண்களென்றாலே தமிழ்நாட்டு இளைஞர்களிடம் ஒரு மவுசு இருக்கிறது என்று மகள்களிடம் தந்தை சித்திக் கூறுவதில் உண்மையிருக்கிறது.

காஷ்மீரா பின்னால் சுற்றும் ஜீவா தன் தங்கை பின்னால் காதலிக்கச் சொல்லி சுற்றுபவர்களை நய்ய புடைப்பதில் லாஜிக் இல்லை. அதே சமயம் “ஒருத்தனை காதலி அவனை ஏமாற்றாதே ” என்று தன் தங்கைக்கு ஜீவா அட்வைஸ் செய்யும்போது இளவட்டங்களிடம் அப்ளாஸ் பெறுகிறார்.

ஜீவாவின் தந்தையாக வரும் கே.எஸ்.ரவிகுமார், தாயாக வரும் சரண்யா அனுபவ நடிப்பை வெளிப்படுத்துகின்றனர்.

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரித் திருக்கிறார். இப்படி யொரு படம் அந்நிறுவன தயாரிப்பில்… ஆச்சரியம்தான்.

சக்தி சரவணன் கேமிரா இளமை சொட்ட காட்சி களை படமாக்கியி ருக்கிறது.

இயக்குனர் சந்தோஷ் ராஜன் கண்ணுக்கு கடிவாளம் போட்டது போல் முழுக்க இளவட்டங்களை மட்டுமே குறிவைத்திருக்கிறார்.

மலையாள மணம் மணக்க இசை அமைத்திருக்கிறார் ஷான் ரஹமான்.

வரலாறு முக்கியம் – சரித்திர கதையல்ல.

Related posts

கமல்ஹாசன் அழைப்பு..

Jai Chandran

அதர்வாவின் ஆக்‌ஷன் திரைப்படம் “குருதி ஆட்டம்”

Jai Chandran

ஜல்லிக்கட்டை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் ஜீ 5

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend