Trending Cinemas Now
ஆங்கில செய்திகள் சினிமா செய்திகள்

முரளிதரன் மறைவுக்கு ச ம க தலைவர் சரத்குமார் இரங்கல்

தயாரிப்பாளர் முரளிதரன் மறைவுக்கு  அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின்
நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

லஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவன தயாரிப்பாளரும், என் இனிய நண்பருமான முரளிதரன் அவர்களின் மறைவு மிகுந்த மனவேதனையளிக்கிறது.

1994 – ஆம் ஆண்டு எனது நடிப்பில் உருவான அரண்மனைக் காவலன் என்ற திரைப்படத்தின் வாயிலாக தயாரிப்பாளராக தமிழ் திரையுல கில் அறிமுகமான அன்பு நண்பர் முரளிதரன், தனது தொடர்முயற்சி யால், மாபெரும் வெற்றித் திரைப் படங்களை தயாரித்து, தனது லஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனத் திற்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர்.

அவரது தயாரிப்பில் உருவான அரண்மனைக்காவலன், வேலுச் சாமி, ஒருவன், தோஸ்த் ஆகிய திரைப்படங்களில் அவருடன் பணியாற்றிய நினைவுகள் என் மனதில் என்றென்றும் நீங்காமல் நிலைத்திருக்கும்.

தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி மறைந்திருக்கும், அன்புச் சகோ  தரின் பிரிவால் வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும், தமிழ் திரையுல கினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு ரா.சரத்குமார் கூறியுள்ளார்.

Related posts

அவதார்: தி வே ஆஃப் வாட்டர் (ஆங்கில பட விமர்சனம்)

Jai Chandran

நிகில் முருகன் நடிக்கும் பவுடர் டீஸர் ரிலீஸ்..

Jai Chandran

ஹாரர் த்ரில்லர் “நறுவீ” ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளியீடு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend