Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பவுடர் ( பட விமர்சனம்)

படம்: பவுடர்

நடிப்பு: நிகில் முருகன்,  விஜய் ஸ்ரீ  ஜி, வித்யா பிரதீப், வையாபுரி, அனிதா நாயர், மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி, ஆதவன், ரயில் ரவி, சிலுமிசம் சிவா, சிசர் மனோகர், ரானவ், ஷர்மிலா, எலையா, சாந்தினி, நமஸ்காரம் சரவணன், ராமராஜன், தாட்சாயினி, மணிமேகலை, அபிஷேக், விக்னேஷ் ராமமூர்த்தி, தர்மா, மோகன்ராஜ், ஒற்றன் துரை, சதீஷ், ராயல் பிரபாகரன்

தயாரிப்பு: ஜெயா ஸ்ரீ விஜய்

இசை: லியாண்டர் லீ மார்ட்டி

ஒளிப்பதிவு: ராஜபாண்டி

இயக்கம்: விஜய் ஸ்ரீ ஜி

பி ஆர் ஒ: நிகில் முருகன்

பவுடர் போட்டு முகத்தை அழகாக காட்டுவது அழகல்ல உள்ளுக்குள் மனது தூய்மையாக இருப்பதுதான் அழகு என்கிறது படம்.

ஒருபக்கம் எம் எல் ஏவை தீர்த்துக் கட்டும் இளைஞர்கள், மறுபக்கம் காலையில் திருமணம் நடக்க உள்ள நிலையில் தன்னை மிரட்டும் பழைய காதலனுடன் மல்லுகட்டும் பெண், மகனுக்கு ஆன்லைன் வகுப்பிற்கு பணம் கட்ட முடியாமல் தவிக்கும் தந்தை, மகள் வாழ்வை சீரழித்து ஏமாற்றிய வனை கொல்லும் தந்தை, அடுக்கு மாடியில் புகுந்து திருடும் திருடர்கள், கமிஷனர் வீட்டு நாயை காணாமல் ஏற்படும் பதற்றம் இந்த அவலங்களை தடுக்க முயலும் போலீஸ் அதிகாரி ராகவன் (நிகில் முருகன்) என 5 சம்பவங்கள் ஒரு இரவில் நடக்க இதன் முடிவு என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் நியாய மான பதிலை கத்தி, துப்பாக்கி முனையில் அளிக்கிறது.

ரஜினி, கமலுக்கு பி ஆர் ஓவாக இருந்ததுடன் தொடர்ந்து திரைப் பட பி ஆர் ஓவாக பணியாற்றும் நிகில் முருகன் பவுடர் படம் மூலம் நடிகராக அறிமுகமாகியிருக்கி றார். போலீஸ் அதிகாரி ராகவன் கதாபாத்திரத்தில் ஒவர் ஆக்டிங் இல்லாமல் கண்டிப்பான அதே சமயம் மக்கள் நலன் காக்கும் போலீஸாக நடித்திருக்கிறார்.

சந்தேக கேஸில் பிடித்து வைக்கப் பட்டிருக்கும் விஜய் ஸ்ரீ ஜி, ஆதவன் ஆகியோரை மிரட்டல் தொணியில் விசாரிக்கும் நிகில் முருகன் அசல் போலீஸாக மாறியிருக்கிறார்.

விஜய் ஸ்ரீ ஜி, ஆதவன் மற்றும் கூட்டாளி தப்பி அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து கொண்டு நடத்தும் செயல்களும் அந்த இடத்தை நிகில் தலையிலான போலீஸ் படை சூழ்ந்து தேடுதல் வேட்டை நடத்துவதும் பரபரப்பு.

தன்னை நிர்வாண படம் எடுத்து மிரட்டும் நபரை பெண் சுட்டுக் கொல்ல அந்த பெண்ணை காப்பாற்ற விஜய் ஸ்ரீ ஜி எண்ணிப் பார்க்க முடியாத காரியத்தை செய்வது திகிலூட்டுகிறது.

மகள் வாழ்வை சீரழித்தவனை கொல்லும் வையாபுரி வழக்கமான காமெடி சேட்டைகளை மூட்டைகட்டி வைத்து விட்டு மகளுக்காக பழி
வாங்கும் கோபக்கார தந்தையாக மாறியிருக்கிறார்.

அனிதா நாயர், மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி, ஆதவன், ரயில் ரவி, சிலுமிசம் சிவா, சிசர் மனோகர், ரானவ், ஷர்மிலா, எலையா, சாந்தினி, நமஸ்காரம் சரவணன், ராமராஜன், தாட்சாயினி, மணிமேகலை, அபிஷேக், விக்னேஷ் ராமமூர்த்தி, தர்மா, மோகன்ராஜ், ஒற்றன் துரை, சதீஷ், ராயல் பிரபாகரன் என பெரிய பட்டாளமே நடித்திருக் கிறது.

மாட்டுகறி, ஆட்டுக்கறி மனிதக்கறி என்று உள்ளுக்குள் ஓடும் க்ரைம் படத்தை வேகப்படுத்துகிறது.

இவ்வளவு கதைகளையும் இரண்டு மணி நேரத்தில் நேர்த்தியாக சொல்லியிருக்கும் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜிக்கு ஒரு அப்ளாஸ் தரும் வேளையில் கதையில் குழப்பமில்லாமல் எடிட்டிங் பணி செய்த குணாவையும் கைகுலுக்கி பாராட்டலாம்.

படத்தை தயாரித்து பின்னணியில் படத்தின் தரத்துக்கு முதுகெலும் பாகவும் இருந்திருக்கிறார் தயாரிப்பாளர் ஜெயா ஸ்ரீ விஜய்.

புது இசை அமைப்பாளர் லியான்டர் லீ மார்ட்டியின் தேவையான ரீ ரிக்கர்டிங் காட்சி களை மெருகூட்டுவதுடன் வசனங் களை சிதைக்காமல் கேட்க வைத்திருக்கிறது. இவர் திரை யுலகில் தனக்கென ஒரு இடம் பிடிப்பார்.

ராஜபாண்டி ஒளிப்பதிவு ஏமாற்ற வில்லை. இரவில் நடக்கும் கதை யென்றாலும் காட்சிகளை தெளிவாக படம் பிடித்திருப்பது அழகு.

பவுடர்- சட்டம் தர வேண்டிய தண்டனையை பாதிக்கப்பட்ட வர்களே நேரடியாக தருகின்றனர்.

Related posts

ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் குழு சந்திப்பு..

Jai Chandran

சமூக சேவகர்களுக்கு கார்த்தி ரூ.25 லட்சம் உதவி

Jai Chandran

அன்லான் ஆர்ட் சலூன் திறப்பு தோனி, சினிமா பிரபலங்கள் பங்கேற்பு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend