Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

நான் மிருகமாய் மாற (பட விமர்சனம்)

படம்: நான் மிருகமாய் மாற

நடிப்பு:சசிகுமார், விக்ராந்த், ஹரிபிரியா, துளசி, கே எஸ் ஜி வெங்கடேஷ், மதுசூதனராவ்

தயாரிப்பு: செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல்

இசை:ஜிப்ரான்

ஒளிப்பதிவு: ராஜா பட்டாச்சார்யா

இயக்கம்: சத்யசிவா

பி ஆர் ஒ: ரியாஸ் கே அஹமத்

சினிமா சவுண்ட் ரெக்கார்டிஸ்ட் சசிகுமார். இவரது தம்பியை கூலிப்படை வெட்டிக் கொள்கிறது. அதிர்ச்சி அடைந்த சசிகுமார் கூலிப்படையை கண்டு பிடித்து கொல்கிறார். இதையறிந்த கூலிப் படை தலைவன் விக்ராந்த், சசிகுமார் குடும்பத்தை கொல்ல முயல்கிறார். சசிகுமார் குடும்பத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றால் தொழில் அதிபர் ஒருவரை கொல்ல வேண்டும் என்ற கண்டிஷன் விதிக் கிறார் விக்ராந்த். அதற்கு ஒப்புக் கொள்ளாத சசிகுமார் தலைமறை வாக இருக்கும் விக்ராந்தை கண்டு பிடித்து கொல்ல முடிவு செய்கிறார் அவரால் அதை செய்ய முடிந்ததா என்பதே கிளைமாக்ஸ்.

படம் முழுவதும் ரத்தம் பழிக்கு பழி என்று தெறிக்கிறது. இதற்கான எச்சரிக்கை வாசகம் டைட்டிலின் போதே போடப்படுகிறது.
சவுண்ட் எஞ்ஜினியராக சசிகுமார் அமைதியான பாத்திரத்தில் நடித்திருப்பார் என்று பார்த்தால் வில்லன்களையே தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விடும் அளவுக்கு ரத்த குளியல் நடத்தியிருக்கிறார்.

தம்பியை கொன்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்தினால் உடனடியாக தண்டனை கிடைக் காது என்று எண்ணி தானே தண்டனை வழங்க முடிவு செய்து ஒற்றை ஆளாக ரவுடிகளை வெட்டி வீசுகிறார். ஒரே ஷாட்டில் முழு சண்டை காட்சியும் படமாக்கப் பட்டிருக்கிறது.

வில்லனாக விக்ராந்த் மிரட்டல் விடுத்து பேசினாலும் ஆக்‌ஷன் காட்சி என்று அவருக்கு இல்லாதது ஏமாற்றம். சசிக்கும் விக்ராந் துக்கும் ஒரு கிளைமாக்ஸ் மோதல் ஹைலட்டாக. இருக்கும். என்ற எதிர்பார்ப்பும் புஷ்வாணமாகி விடுகிறது.

ஹரிப்பிரியா, துளசி என நட்சத் திரங்கள் இருந்தாலும் நடிக்க வாய்ப்பில்லை. படம் முழுவதும் ரத்தம் ஆறாக ஓடுகிறது. ரிலாக் ஸுக்கு என்று காமெடி டிராக் இருந்திருந்தால் ஆறுதல் கிடைத்திருக்கும்.

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது.

ஜிப்ரான் ரீ ரிக்கார்டிங் படத்தை பரபரப்பாக்கியிருக்கிறது

ராஜா பட்டாச்சார்யா ஒளிப்பதிவில் பெருமாலான சீன்கள் சிவப்பால் நிறைகிறது.

இயக்குனர் சத்யசிவா கூலிப்படை கதையில் ஒரு குடும்ப சென்ட்டி மென்ட் வைத்து பேலன்ஸ் செய்திருக்கிறார்.

நான் மிருகமாய் மாற — ஒரு குடும்பஸ்தனின் கோபம்.

Related posts

விஜயகாந்த் பட இயக்குநர் டைரக்ஷனில் ஆர்கே சுரேஷ்

Jai Chandran

வைபவ்-அனகா நடிக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் ‘பஃபூன்’

Jai Chandran

ARK Saravanan directorial Hiphop Adhi starrer new project

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend