Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தனுஷின் “வாத்தி” பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல தயாரிப்பாளரான ‘சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ சூர்ய. தேவர நாக வம்சி, ‘ ஃபார்ச்சூன் 4 சினிமாஸ்’ சாய் சௌஜன்யாவுடன் இணைந்து வாத்தி திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாக உள்ள இந்தப் படத்தில் தேசிய விருது நாயகன் தனுஷ் நடித்துள்ளார். ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் படத்தை வழங்குகின்றனர். வெங்கி அட்லுரி எழுத்தாளர் மற்றும் இயக்குனராக பணியாற்றுகிறார். சம்யுக்தா மேனன்  கதாநாயகி யாக நடிக்கிறார்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தின் வெளியீட்டு நாளை இன்று அறிவித்திருந்தனர். மேலும் டிசம்பர் 2ம் தேதி அன்று தெலுங்கு மற்றும் தமிழில் உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர். அந்த அறிவிப்பு புகைப்படத்தில், தனுஷ் ஒரு மேஜையில் அமர்ந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் தன் விரலை மேல் நோக்கி உயர்த்தி, படத்தின் வெளியீட்டு நாளை காட்டுவது போல் இருந்தது.
தனுஷின் பின்புறம் உள்ள கரும்பலகையில், பல்வேறு கணித சமன்பாடுகள் மற்றும் அவரது அருகில் ஒரு புத்தகமும் வைக்கப்  பட்டிருந்தது. தனுஷ் தன்னுடைய சாதாரண தோற்றத்தில் மிக எளிமையாக காணப்பட்டார். தேதியை குறித்துக் கொள்  ளுங்கள், வாத்தி வருகிறார் பாடம் எடுக்க,  வரும் டிசம்பர் 2ம் தேதி  முதல் என்பதனை படக்குழுவினர் அந்த போஸ்டரில் குறிப்பிட்டிருந்  தனர்.
வாத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு  முற்றிலும் முடிவடைந்து, தற்பொழுது விறுவிறுப்பாக இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்  கிறது. படத்தின் டீசர் சில வாரங்  களுக்கு முன் வெளியான நிலையில், ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது

 

இந்த திரைப்படத்தில். சாய்குமார், தணிகலா ரணி, சமுத்திரகனி, தொட்ட பள்ளி மது, நரா சீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, சாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, ‘ நான் கடவுள் ‘ ராஜேந்திரன், ஹரிஷ் பேரடி மற்றும் பிரவீனா ஆகியோர்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தேசிய விருது பெற்ற இசையமைப் பாளர் ஜி வி பிரகாஷ்  இசை அமைத்துள்ளார்.  படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் கே.யுவராஜ். எடிட்டிங் நவீன் நூலி. ப்ரொடக்ஷன் டிசைனர்  அவினாசி கொள்ளா.. சண்டை பயிற்சி வெங்கட். மக்கள் தொடர்பு : ரியாஸ் கே.அஹமத்

Related posts

மதுரை ஆதினம் அருணகிரி நாதர் 71 வயதில் காலமானார்: முதல்வர் இரங்கல்

Jai Chandran

அமேசான் ஒரிஜினல் சீரிஸ் “பம்பாய் மேரி ஜான்” ட்ரெய்லர் வெளியீடு

Jai Chandran

An Electrifying Trailer of Arunvijayno1’s Borrder

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend