Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஆதார் (பட விமர்சனம்)

படம்: ஆதார்

நடிப்பு: கருணாஸ், அருண் பாண்டியன், ரித்விகா, இனியா, உமா ரியாஸ் கான், திலீபன், பாகுபலி பிரபாகர்,

தயாரிப்பு:சசிகுமார்

இசை: ஸ்ரீகாந்த் தேவா

ஒளிப்பதிவு : மகேஷ் முத்துசாமி

இயக்கம்: ராம்நாத் பழனிகுமார்

பி ஆர் ஒ: யுவராஜ்

கட்டிட வேலை செய்பவர் கருணாஸ் அவரது கர்ப்பிணி மனைவி ரித்விகா. அங்கிருக்கும் கம்பிகளை ஆள் வைத்து திருடு கிறார் இனியா. அதை கருணாஸும், ரித்விகாவும் தடுக்கின்றனர். இதனால் இனியா கோபம் அடைகிறார். மறுநாள் ரித்விகாவுக்கு பிரசவ வலி ஏற்படுகிறது. இனியா தனது ஆட்டோவில் அவரை மருத்துவ மனை அழைத்துச் சென்று சேர்க் கிறார். குழந்தை பெற்ற நிலையில் குழந்தையை தனியாக விட்டு விட்டு ரித்விகா காணாமல் போகிறார். மனைவி காணாமல் போனதால் பதறும் கருணாஸ் கைக் குழந்தையுடன் போலீஸ் நிலையம் வந்து புகார் தருகிறார். இனியாதான் ரித்விகாவை கடத்தியதாக சொல்கிறார் ஆனால் இனியா பாதாள சாக்கடையில் இறந்து கிடப்பது தெரிகிறது. அப்படியானால் ரித்விகாவை கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள்? என்பதற்கு சஸ்பென்ஸாக பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.

பல படங்களில் காமெடி நடிகராக  நடித் தாலும் மற்றொருபுறம்   குணசித்ரமாகவும், ஹீரோவாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார் கருணாஸ். இப்படத்தில் குணசித்ர ஹீரோவாக நடித்திருக்கிறார்.

குழந்தையை கையில் வைத்துக் கொண்டு மனைவி காணாமல் போன சோகத்தை முகத்தில் தேக்கியபடி போலீஸ் நிலைய வாசலில் நின்று  காணாமல் போன தன் மனைவியை கண்டு பிடித்துத் தரும்படி கதறும்போது உருக வைக்கிறார்.

போலீஸார் ஒரு வழியாக கருணாஸ் மனைவியின் வழக்கை ஊற்றி மூடிய பிறகு சரியான விசாரணை நடக்கவில்லை என்று முதல்வர் பிரிவிற்கு  கருணாஸ் புகார்  அனுப்புவதும் இதில் கோபம் அடைந்த இன்ஸ்பெக்டர் கருணாஸை பிரம்பால் சுளீர் சுளீரென அடித்து கதறவிடுவதும் பதறவைகிறது.

முதல்வர் பிரிவுக்கு புகார் அனுப்பி னால் போலீஸார் இப்படி எதிர் வினையாற்றுவார்கள் என்பது அதிர்ச்சி தருகிறது.

மத்திய அமைச்சர் அழுத்தம்,, கார்ப்பரேட் முதலாளின்  பணத்துக்கு விலை போகும் சில போலீஸ் உயர் அதிகாரிகள் ஒன்றாக சேர்ந்தால் கொலையும் செய்வார்கள் அதை மறைக்க யாரையும் தூக்குவார்கள் என்ற கசப்பான உண்மையை இயக்குனர் படமாக்கியிருக்கும் விதம் சில இக்கட்டான சம்பவங் களில் இப்படித்தான் நடக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்துகிறது.

இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பிரபாகர், சிக்ரெட் புகைத்தபடி உயர் அதிகாரியாக வரும் உமா ரியாஸ்கான்  நடிப்பில் ஒன்றி யிருக்கின்றனர்.

ஏட்டாக வரும அருண் பாண்டியன் வயது முதுர்ச்சியை நடையிலும், மனதில் உள்ள குற்ற உணர்வை முகத்திலும் வெளிப்படுத்தி நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.

ஒன்றிரண்டு காட்சியில் வந்தாலும் சஸ்பென்ஸுக்கு துணை நிற்கிறார் இனியா.

படத்தின் முழு திரைக் கதையும் ரித்விகா கதாபாத்திரத்தை மையமாக கொண்டு தான் சுழல் கிறது. கர்ப்பிணியாக அவர் வலியால் துடிக்கும் துடிப்பு கடைசிவரை கண்முன் நிழலாடு கிறது.

படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் சஸ்பென்ஸ் முடிச்சுகள் ஒவ்வொன் றாக அவிழும்போது விறுவிறுப்பு கூடுகிறது.

இறுக்கமான உணர்வை தக்க வைக்க லைட்டிங்கை குறைத்து இருள் சூழ்ந்ததுபோல் காட்சிகளை படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதி வாளர் மகேஷ் முத்துசாமி

ஏழைக்கான நீதி அதிகாரவர் கத்தால் எப்படி சிதைக்கப்படு கிறது என்பதை இயக்குனர் ராம்நாத் பழனிகுமார் துணிச் சலாக அம்பலப்படுத்தி உள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஸ்ரீகாந்த் தேவா இசையில் ஒலிக்கும் தேன்மிட்டாய் மாங்காய் துண்டு பாடல் உதட்டில் ஒட்டிக்கொள் கிறது.
கருணாஸ் குரலில் ஒலிக்கும் ஆராரோ பாடலில் ஒரு சோகம் இழையோடி மூச்சுக் காற்றை வெப்பமாக்குகிறது.

ஆதார் – ஜூனியர் ஜெய்பீம்.

Related posts

‘புஷ்பா2-தி ரூல்’ உலகம் முழுவதும் ஆகஸ்ட்டில் வெளியீடு

Jai Chandran

The massive prep behind the action scenes of Jawan!

Jai Chandran

லஞ்ச ஊழலைக் கட்டுப்படுத்த *”கடிகார மனு” : மநீம

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend