Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

துணைவேந்தரை நியமிப்பது மாநில அரசின் உரிமை: கமல் கட்சி குரல்

கமல்ஹாசனின் மக்கள் நீதி. மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கை:

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை நியமிப்பது மாநில அரசின் உரிமை என்று தமிழக முதல்வர் மீண்டும் வலியுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது.

துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்கவேண்டும் என்று வலியுறுத்தி 30-12-21 அன்று சட்டவிளக்கங்களோடு மநீம விரிவான அறிக்கை வெளியிட்டி ருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக சட்டமன்றம் நிறைவேற்றியுள்ள சட்டத்திருத் தத்திற்கு ஒப்புதலளிக்க மறுத்து தமிழக அரசிடம் விளக்கம் கோரியுள்ளார் ஆளுநர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத் திற்கு மதிப்பளித்து விரைவில் ஆளுநர் அவர்கள் இத்திருத்தத் திற்கு ஒப்புதலளிக்க வேண்டும் என்று மநீம வலியுறுத்துகிறது.

நியமனமுறை ஆளுநர் தேவை யில்லை என்றும், குடியரசுத் தலைவரைப்போல தேர்தல் முறையில் ஆளுநர் தேர்ந்தெடுக் கப்படவேண்டுமென்ற கருத்தாக் கத்தை கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது மநீம முன்வைத் திருந்ததை நினைவுகூர்கிறோம்.

#makkalneedhimaiam #kamalhassan #mnmtweets #mnm4federalism
#TNGovernor

Related posts

பார்த்திபன் மற்றும் கௌதம் நடிக்கும் யுத்த சத்தம்

Jai Chandran

ஒ எம் ஜி ( பட விமர்சனம்)

Jai Chandran

அகரம் பத்தாண்டுகள் ‘தடம் விதைகளின் பயணம்’

CCCinema

Leave a Comment

Share via
Send this to a friend