Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

உடல்நலன் குறித்து இயக்குனர் பாரதிராஜா அறிக்கை

உடல்நல குறைவால் பிரபல இயக்குனர் பாரதிராஜா சிகிச்சைக்காக மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

என் இனிய தமிழ் மக்களே,

வணக்கம். நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன். உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்று வருகிறேன்.

மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் காண வர வேண்டாம் என்று என் மேல் அன்பு கொண்ட அனைவரையும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன்.

மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நேரிலும் தொலை பேசி வாயிலாகவும் இணையதளம் மூலமும் அன்புடன் விசாரித்த மற்றும் நலம் பெற பிரார்த்தித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் சந்திப்போம்.

இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.

 

 

Related posts

“சிலம்பம்” உண்மை சம்பவம் படமாகிறது.

Jai Chandran

ஆஸ்கார் விருது நடிகர் குழுவில் ராம் சரண்

Jai Chandran

ஹாட் ஸ்பாட் கதையை 2முறை கேட்ட நடிகை அம்மு அபிராமி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend