Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தமிழுக்கு வரும் மலையாள பட தயாரிப்பாளர்

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ஏ .ஆர்.ரஹ்மான் இசையில் வெளியாகி  ஹிட்டான ‘ஆரட்டு’ உட்பட பல படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் சக்தி தேவராஜ், தமிழில் களமிறங்குகிறார். சென்னை சாலிகிராமத்தில், தனது ‘ஹிப்போ ப்ரைம் ‘ நிறுவனத்தின் கிளையை துவக்கி வைத்த தயாரிப்பாளர் சக்தி தேவராஜ், தனது நிறுவனம் தமிழில் டிஜிட்டல் மீடியா துறையிலும் ஈடுபடுவதாக தெரிவித்தார். ”ஹிப்போ ப்ரைம் மீடியா’ என்ற பெயரில் தொடங்கி இருக்கும் இந்த நிறுவனத்தின் மூலமாக தரமான மற்றும் சுவாரஸ்யமான சினிமா நிகழ்ச்சிகளை மக்களிடையே கொண்டு செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.
மலையாள தயாரிப்பாளரான சக்தி தேவராஜ், தமிழில் ஈடுபடுவது குறித்த கேள்விக்கு, தனது ஆரட்டு படம் மக்களிடையேயே பெருமளவு வரவேற்பு பெற்றது. கேரளாவில் மட்டுமல்லாமல் பிற மொழி ரசிகர்களும் படத்தை ரசித்தனர். சினிமா என்பது ஒரே மொழி தான். தமிழிலும் படத் தயாரிப்பில் ஈடுபடவுள்ளேன். புதியவர்களாக இருந் தாலும், திறமையானவர்கள் நல்ல கதைகளுடன் அணுகினால், தயாரிப்ப தற்கு நான் தயார் என்கிறார். எங்களது கதை இலாகா குழு தேர்வு செய்கிற கதைகளைத் தமிழில் தயாரிப்பேன். பெரிய ஹிரோக்களின் படங்கள் என்றில்லாமல் புதியவர்களுக்கு வாய்ப்பு தர நினைத்திருக்கிறேன் என்கிறார்.
தற்போது தமிழ் சினிமா துறை சிறப்பாக இயக்கி வருகிறது. திறமையானவர்கள் வெளியே அறியப்பட்டு வருகிறார்கள். நாங்கள் தயாரிக்கும் படங்களிலும் திறமையானவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். தமிழ் திரையுலகில் நல்ல நண்பர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்கிறார்.

Related posts

”சினிமா தியேட்டர் எனக்கு கோயில்” வீரமே வாகை சூடும் விழாவில் விஷால் பேச்சு

Jai Chandran

‘YUDDHA KAANDAM ’ Internationally Recognised and Winning Awards

Jai Chandran

சிலம்பரசன் டி.ஆர்-க்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய ‘வேல்ஸ் பல்கலைக்கழகம்.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend