Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

டைரி (பட விமர்சனம்)

படம்: டைரி

நடிப்பு: அருள்நிதி, பவித்ரா, கிஷோர், ஜெயபிரகாஷ், ஷா ரா, தனம், தணிகை

தயாரிப்பு: பைவ் ஸ்டார் எஸ். கதிரேசன்

இசை:ரோன் ஈதன் யோஹான்

ஒளிப்பதிவு: அரவிந்த் சிங்

இயக்கம்: இன்னிசை பாண்டியன்

பி ஆர் ஓ: சுரேஷ் சந்திரா, ரேகா டி ஒன்

போலீஸ் அதிகாரி பயிற்சியின் இறுதிகட்டத்திலிருக்கும் வரதன் (அருள்நிதி) உள்ளிட்டவர்களுக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றை விசாரித்து தீர்வு காணும் பணி ஒப்படைக்கப் படுகிறது. அதன்படி வரதன் 16 ஆண்டுகளாக விடை காண முடியாமலிருக்கும் மர்மம் நிறைந்த கொலை வழக்கை தேர்ந்தெடுக் கிறார். ஊட்டி சென்று அதுபற்றி துப்புதுலக்குகிறார். தம்பதிகள் ஓட்டலில் கொலை செய்யப்பட்டு அவர்களின் நகைகள் கொள்ளை யடித்த விவகாரம்பற்றி விசாரிக் கிறார். கொள்ளையர்கள் நகையுடன் ஊட்டி செல்லும் பஸ்ஸில் ஏறி தப்பிச் செல்கின் றனர். இதற்கிடையில் எம் எல் ஏ மகளை கூட்டிக் கொண்டு ஓடும் காதலன் மலை வாழ் மக்கள், வக்கீல் குடும்பம் என மேலும் பலர் அந்த பஸ்ஸில் செல்கின்றனர். தம்பதி கொலை பற்றி விசாரிக்க வும், தன்னுடைய கார் திருடியவ னை தேடியும் பஸ்சை விரட்டிச் சென்று அதில் ஏறுகிறார் வரதன். பஸ்சில் ஏறிய பிறகுதான் அதில் அமானுஷ்ய சக்தி இருப்பதை உணர்கிறார் . இதற்கிடையில் எம் எல் ஏவின் அடியாட்கள் பஸ்சை சுற்றிவளைத்து ஏறி தாக்குதல் நடத்துகின்றனர். இதில் பயணிகள் கொல்லப்படுகின் றனர். டிரைவரும் அடிபட்டு சாய்வதால் பஸ் கட்டுப்பாட்ட்டை இழந்து மலை உச்சியிலிருந்து உருள்கிறது. இந்த விபத்தில் வரதன் உள்ளிட்ட 4 பேர் தப்பிக் கின்றனர். மலையிலிருந்து உருண்ட பஸ் கண்டு பிடிக்கப் பட்டதா? வரதன் கொலையாளி களை கைது செய்தாரா என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.

டி மான்டி காலனிக்கு பிறகு அருள்நிதி நடிக்கும் படங்களின் பாணி முற்றிலும் வித்தியாமான கதைகளாகவே வருகிறது. அந்த வரிசையில் “டைரி” படமும் வித்தியாசமான திரைக்கதை அமைப்புடன் உருவாகியிருக் கிறது.

ஊட்டியின் 13வது கொண்டை ஊசி வளைவு நெருங்கும்போது விபத்து நேரிட்டு பலர் பலியாவது அவிழாத மர்மமாக இருப்பதுதான் கதையை ஜெட் வேகத்தில் நகர்த்துகிறது.

ஊட்டி செல்லும் கடைசி பஸ் வந்து நின்றதும் அது மர்ம பஸ்ஸாக இருக்கும் என்பதை யூகிக்க முடியவில்லை.
பஸ்சில் இருக்கும் எம் எல் ஏ மகள் தன் பையில் 200 சவரன் நகை இருப்பதாகச் சொன்னதும் அதை கேட்ட கொள்ளையர்கள் கொள்ளையடிக்க திட்டமிடுவது காட்சியை த்ரில்லாக்குகிறது.

கொலையாளிகளையும் தன் காரை திருடியனையும் பிடிக்க பஸ்ஸை வழி மட.க்கி அருள்நிதி ஏறியதும் ஆக்‌ஷன் காட்சிகள் அதகளப்படுகிறது.

அருள்நிதி போலீஸாக இருந் தாலும் பஸ்சில் அமானுஷ்யமான சம்பவம் நடப்பதை கண்டு அதிரும்போது ஆடியன்ஸையும் திகிலுக்குள்ளாக்குகிறார்.

மலை உச்சியில் தொங்கும் பஸ்சிலிருந்து பயணிகளை அருள்நிதி காப்பாற்ற முயலும் காட்சி இருக்கையின் நுனிக்கு ரசிகர்களை வரவழைக்கிறது.

பஸ்சில் நடக்கும் அமானுஷ்யம் பற்றி சக அதிகாரியான  பவித்ராவிடம் அருள்நிதி கூறி அவரை விரைந்து வரச் சொல் வதும் அவரும் பஸ் எந்த பக்கம் சென்றது என்று டைம்கீப்பர் அதிகாரியிடம் விசாரிக்க “அப்படி யொரு பஸ்சே இல்லை” என்று டைம்கீப்பர் கூறும்போது அரங்கு முழுவதும் ஆச்சரியம் பரவுகிறது. அப்படியென்றால் அந்த பஸ் வந்தது என்ற கேள்வி மண்டையை குடைகிறது. அதற்கும் இயக்குனர் விளக்கம் அளித்து ஆதாரமும் தருவது கதையை உண்மை சம்பவ பாணிக்கு மாற்றி விடுகிறது.

படத்தின் கதையை ஒரே சம்பவ மாக இல்லாமல் பல சம்பவங் களாக அமைத்து அதனை ஒருபுள்ளியில் இணைத்திருக்கும் இயக்குனர் இன்னிசை பாண்டியன்ன் அப்ளாஸ் பெறுகிறார்.

வைவ் ஸ்டார் எஸ்.கதிரேசன் படத்தை தயாரித்திருக்கிறார்.

ரோன் ஈதன் யோஹான் இசை ஓவர்லேப் ஆகாமல் கதையின் ஓட்டத்துக்கு இணைந்து இசைப் பதும், அரவிந்த் சிங்கின் இரவு நேர தெளிவான ஒளிப்பதிவும் படத்தை உயர்த்திப் பிடிக்கிறது.

டைரி- திடீர் விசிட்டாக இருந்தாலும் திகட்டாத சஸ்பென்ஸ் விருந்து.

 

Related posts

75 Million+ views! Thanks to all JaiSulthan Fans

Jai Chandran

ஷாம் நடிக்கும் ‘அஸ்திரம்’ பட பர்ஸ்ட் லுக்

Jai Chandran

சீதா ராமம் படத்துக்கு பிறகு கடிதம் எழுதும் பழக்கம் திரும்பியிருக்கிறது- துல்கர்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend