Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஆகஸ்ட் 4ல் ராம் பொதினேனியின் டபுள் ஐஸ்மார்ட்’ டிரெய்லர்

உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சஞ்சய் தத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸின் ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் மாஸ் டிரெய்லர் ஆகஸ்ட் 4 அன்று வெளியாகிறது!

‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் ஒவ்வொரு புதிய அப்டேட்டும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இருமடங்கு அதிகமாக்கி வருகிறது. பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொதினேனி கதாநாயாகனாக நடித்திருக்க, நடிகர் சஞ்சய் தத் எதிர்கதாநாயகனாக நடித்துள்ளது படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

இப்போது, ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்திற்கான தியேட்டர் டிரெய்லர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வெளியிடப் படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். டிரெய்லர் போஸ்டரில் ராம் பொதினேனி முரட்டுத்தனமான மாஸ் லுக்கில் உள்ளார். கழுத்தில் கட்டியுள்ள கர்சீஃப் அவரது ஸ்டைலிஷ் லுக்கை இன்னும் வசீகரமாக்கி யுள்ளது.

பூரி கனெக்ட்ஸ் பேனரின் கீழ் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இந்த பான் இந்தியா திரைப் படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார்.

சாம் கே நாயுடு மற்றும் கியானி கியானெலி ஆகியோர் படத்திற்கு அற்புதமான ஒளிப்பதிவு செய்துள் ளனர். ‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

நடிகர்கள்: ராம் பொதினேனி, சஞ்சய் தத், காவ்யா தாப்பர், அலி, கெட்அப் ஸ்ரீனு மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம்: பூரி ஜெகன்நாத்,
தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத், சார்மி கவுர்,
பேனர்: பூரி கனெக்ட்ஸ்,
உலகளாவிய வெளியீடு: பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட், நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி,
தலைமை செயல் அதிகாரி: விசு ரெட்டி,
இசை: மணி ஷர்மா,
ஒளிப்பதிவு: சாம் கே நாயுடு மற்றும் கியானி கியானெலி,
ஸ்டண்ட் டைரக்டர்: கெச்சா, ரியல் சதீஷ்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா  ,
மார்க்கெட்டிங்: ஹாஷ்டேக் மீடியா

Related posts

Video of the short film SOLITUDE is releasing on 25th June,

Jai Chandran

NaaneVaruven Shooting Begins from Today!

Jai Chandran

விளையாட்டை மையமாக வைத்து உருவான “சிங்கப் பெண்ணே”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend