Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

தி லெஜன்ட் (பட விமர்சனம்)

படம்: தி லெஜண்ட்

நடிப்பு: சரவணன் ஊர்வசி ரவுட்லா, விஜயகுமார், பிரபு, நாசர், சுமன், தம்பி ராமையா, விவேக், யோகிபாப, ரோபோ சங்கர், மயில்சாமி, ஹரிஷ் பெரேடி, முனீஷ்காந்த், மன்சூர் அலிகான், ராகுல் தேவ், லிவிங்ஸ்டன், வம்சி கிருஷ்ணா, சிங்கம்புலி, லொள்ளு சபா மனோகர், அமுதவாணன், கே பி ஒய் யோகி, செல் முருகன், லதா, சச்சு, பூர்ணிமா பாக்யராஜ், கீத்திகா தேவதர்ஷினி, அய்ரா, தீபா ஷங்கர், மாஸ்டர் அஸ்வந்த்

தயாரிப்பு:தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ்

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

ஒளிப்பதிவு: ஆர்.வேல்ராஜ்

இயக்கம்: ஜே.டி ஜெர்ரி

ரிலீஸ்:கோபுரம் பிலிம்ஸ்

பி ஆர் ஒ: நிகில் முருகன்

பூஞ்சோலை கிராமத்தில் பிறந்த சரவணன் படித்து பெரிய விஞ்ஞானியாகிறார் அவருக்கு மத்திய அரசு உயர் பதவி அளிக்க முன்வந்த போதும் தன் கிராமத்து மக்களுக்கு சேவை செய்ட விரும்புவதாக கூறி கிராமத்துக்கே திரும்பி வருகிறார். சர்க்கரை வியாதியால் தனது நண்பன் அவனது மனைவி குழந்தைகள் என குடும்பமே அவதிப்படுகிறது. ஒரு கட்டத்தில் நண்பன் மயங்கி விழுந்து சாகிறான் அதைக்கண்டு கலங்கும் சரவணன் சர்க்கரை வியாதியை ஒரே மருந்தில் முற்றிலுமாக குணம் அடையச் செய்யும் மருந்து கண்டு பிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார அந்த மருந்தை கண்டுபிடித்த பிறகு மருத்துவ மாஃபியா கும்பல் அவரிடம் கோடிகளில் விலைபேசுகிறது. அதற்கு சரவணன் வளைந்து கொடுக்காததால் அவரை கடத்தி சென்று மிரட்டுகிறது. இறுதியில் மாஃபியா கூட்டத்தை அடித்து துவம்சம் செய்து அவர்கள் செய்யும் அட்டுழியங்களை எப்படி முறியடிக்கி றார் என்பதே கிளைமாக்ஸ்.

ஜேடி ஜெர்ரி இயக்கியுள்ள படம் என்றாலும் முழுக்க எம் ஜி ஆர் பட பார்முளாவை அப்படியே ஜிராக்ஸ் எடுத்திருக்கிறார்கள். புதிய பூமியில் தொடங்கி உலகம் சுற்றும் வாலிபன் வரையிலான கதைகளை அப்படியே இக்கால சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைத்திருக்கிறார்கள். அறிமுக ஹீரோ சரவணனும் அப்படியே எம் ஜி ஆர் போல் வசனம் பேசியும் ரஜினி ஸ்டைலில் நடிக்கவும் முயற்சித்து படம் முழுக்க அதே பாணியை கையாண்டிருக்கிறார்.
சண்டை காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் சரவணன்.
தன் மனைவியை காரில் குண்டு வைத்து எதிரிகள் கொல்லும் காட்சியில் கனண்ணெதிரேலேயே மனைவி தீயில் எரிந்து சாவதைக்கண்டு அதிர்ச்சியில் சரவணன் உறையும்போது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
முதல் படம் என்பதால் நடிப்பை பற்றி பெரிய அளவில் விமர்சிக்க வேண்டியதில்லை என்றாலும் நடிப்பில் தனக்கென ஒரு ஸ்டைலை சரவணன் உருவாக்கிக்கொண்டால் அதுதான் அவரை தாங்கிப்பிடிக்கும்.

சரவணனுக்கு ஜோடியாக ஊர்வசி ரவுட்லா நடித்துள்ளார். நெடு நெடுவென வளர்ந்திருந் தாலும் அழகிலும் நடிப்பிலும் பஞ்சம் வைக்கவில்லை. இவரது பாத்திரத்தை சஸ்பென்ஸாக வைத்துருப்பது இயக்குனர் களின் புத்திசாலித்தனம்தான்.

சரவணன் புதுமுகம் என்பதால் அவருக்கு பக்கபலமாக சீனியர் நடிகர்களை நடிக்க வைத்திருப்பதும் ஒரு வகையில் கைகொடுக்கிறது. பிரபு, விஜயகுமார், தம்பிரமையா, லதா, விவேக், ரோபோ சங்கர், யோகி பாபு என பெரிய பட்டாளமே நடித்திருக் கிறது. அதேபோல் தொழில் நுட்ப கலைஞர்களாக ஒளிப்பதிவாளர் ஆர்.வேல்ராஜ், இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், பாடலாசிரியர்களாக வைரமுத்து, கபிலன், பா விஜய், சினேகன், கார்க்கி என பெரும் பாடலாசிரியர்கள் பாடல்கள் எழுதியுள்ளனர்.

பாடல் காட்சிகள் பிரமாண்ட அரங்கிலும் , இமாயலயாஸிலும் படமாகியிருக்கிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் கேட்கும்பாடியிருந்தாலும் சில பாடல்கள் ரஜினியின் படையப்பா பாடல் மற்றும் பிரபுதேவா பட பாடல்களின் மெட்டுபோல் எதிரொலிக்கிறது.

ஆபாச கலவை, வன்முறை, கெட்ட லசனங்கள் இல்லாமல் சர்க்கரை வியாதிக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஒரு கருவை பிரதான்ப்படுத் தியிருப்பது சில விஞ்ஞானிகளுக்கு தூண்டுதலாக இருக்கும் அந்த வகையில் இயக்குனர் ஜே டி ஜெர்ரி, ஹீரோ சரவணனை கைகுலுக்கி பாராட்டலாம்.
வசனங்களை பிரபாகர் லாவகமாக கையாண்
டுள்ளார்.

ராஜு சுந்தரம், பிருந்தா, தினேஷ் என பெரிய மாஸ்டர்கள் இருந்தபோதும் சரவணனுக்கு நல்ல நடன அசைவுகளுக்கு பயிற்சி கொடுக்காமல் ரஜினி ஸ்டைலில் ஆட வைத்திருப்பதும், பல பாடல்காட்சிகளில் நடக்கவிட்டும் ஒப்பேற்றி யிருக்கின்றனர். இது சரவணன் தவறு அல்ல. மாஸ்டர்களின் கவன குறைவுதான்.

தி லெஜன்ட்- சரவணனின் தன்னம்பிக்கை.

Related posts

Yuvan-25 in Malaysia: Tickets Soldout within 45 Minutes

Jai Chandran

Mohanlal presented the trailer of “Kerala Crime Files”

Jai Chandran

Actor Thej Coming Back to Tamil Industry

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend