Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

போத்தனூர் தபால் நிலையம் (பட விமர்சனம்)

படம்: போத்தனூர் தபால் நிலையம

நடிப்பு: பிரவின், அஞ்சலிராவ், வெங்கட் சுந்தர், ஜெகன் கிரிஷ், சீதராமன், தீனா, அங்கமுத்து, சம்பத்குமார்

தயாரிப்பு: சுதன், சுந்தரம் ஜி.ஜெயராமன்

இயக்கம்: பிரவின்

ரிலீஸ்: ஆஹா தமிழ் ஒடிடி

பி ஆர் ஒ: சுரேஷ் சந்திரா

 

போத்தனூர் தபால் நிலையத்தில் தலைமை அதிகாரியும், காசாலரும் லட்டசகணக்கான பணத்தை வங்கியில் சென்றுகட்டாமல் தபால்நிலையத்தி  லேயே வைத்துவிட்டு செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அங்கு பாதுகாப்பு இல்லை என்று எண்ணும் அதிகாரி அந்த பணத்கை சாக்கு மூட்டையில் கட்டி வீட்டுக்கு எடுத்துசென்று வைத்துவிட்டு அடுத்தநாள் கொண்டுவந்து வைத்துவிட எண்ணுகிறார். மூட்டையை எடுத்துவரும் போது யாரோ திருடி செல்கிறார்கள். அதிர்ச்சி அடையும் அதிகாரி ஜெயிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படவே அவரது மகன் பிரவின் காணாமல்போன பணத்தை மீட்டு வர கிளம்புகிறார். அவரால் பணத்தை மீட்க முடிந்ததா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

இப்படத்தின் கதை 1990களில் நடப்பதாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தை எழுதி இயக்கியிருப்பதுடன் ஹீரோவாக நடித்திருக்கிறார் பிரவின்

கதையின் தொடக்கமே ஒரு கொலை- கொள்ளையில் தொடங்குவதால் ஆரம்பமே ஆவலை கிளப்பிவிடுகிறது.

போத்தனூர் தபால் நிலையம் அரங்கில் தந்தி அனுப்பும் கருவி, பழைய கட்டிட தோற்றம் எல்லாமே அந்த காலகட்டத்  துக்கு அழைத்துச் செல்கிறது.
தபால் நிலையத்தில் கொள்ளை நடக்கு மோ என்ற பரபரப்பை ஏற்படுத்தி பின்னர் அந்த கொள்ளையை திசை திருப்பி சென்றிருப்பது  நல்ல திருப்பம்.

சாக்கு மூட்டையில் இருந்த பணத்தை கொள்ளையடித்தது யார் என்ற சஸ்பென்ஸ் கடைசிவரை கதையை விறுவிறுப்பு குறையாமல் கொண்டு செல்கிறது.

கொள்ளையர்களை கண்டுபிடிக்க பிரவின் தேடுதல் வேட்டை தொடங்கிய வுடன் ஜேம்ஸ் பாண்ட் பாணிக்கு காட்சிகள் மாறிவிடுகிறது. இசையும் அதற்கு ஏற்ப சுழல்கிறது.

பிரவினுடன் படத்தில் நடித்திருக்கும் அஞ்சலிராவ், வெங்கட் சுந்தர், ஜெகன் கிரிஷ், சீதராமன், தீனா, அங்கமுத்து, சம்பத்குமார்  என அனைவருமே தங்களது பங்களிப்பை சரியாக செய்திருக்கின் றனர்.

கொள்ளைபோன பணத்தை ஹீரோ பிரவின் கண்டுபிடித்தவுடன் வரும் டிவிஸ்ட் மற்றொரு ஷாக். இப்படத்திற்கு இன்னும் 2 பாகம் எடுக்க இயக்குனர் திட்டமிட்டிருக்கிறாராம்.

இப்படம் ஆஹா ஒடி டி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

போத்தனூர் தபால் நிலையம்: பொழுதுபோகும் சஸ்பென்ஸ்.

Related posts

MUSICIAN S. J. JANANIY WINS SIX CLEF MUSIC AWARDS

Jai Chandran

மைண்ட் ரீடிங் படம் “கூர்மன்” இசை வெளியீட்டில் நட்சத்திர கூட்டம்

Jai Chandran

GV Prakash starrer “Bachelor” Success Meet

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend