Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஏ.எல்.ராஜா இயக்கதில் சூரியனும், சூரியகாந்தியும்

பார்த்திபன், தேவயானி நடிப்பில், ‘நினைக்காத நாளில்லை’, ‘தீக்குச்சி’ மற்றும் தெலுங்கில் ‘அக்கிரவ்வா’ ஆகிய படங்களை தொடர்ந்து, இயக்குனர் ஏ.எல்.ராஜா இயக்கியுள்ள புதிய படம் “சூரியனும் சூரியகாந்தியும்”!

டி.டி.சினிமா ஸ்டுடியோ சார்பில் உருவாகும் இந்தப் படத்தில் தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி, ஶ்ரீ ஹரி, விக்ரம் சுந்தர் மூவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். ரிதி உமையாள் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் சந்தான பாரதி, இயக்குனர் செந்தில் நாதன், குட்டிப்புலி வில்லன் ராஜசிம்மன், இயக்குனர் ஏ.எல்.ராஜா, மங்களநாத குருக்கள், அழகு, சேஷு, மிப்புசாமி, உடுமலை ரவி, சச்சின், ரேவதி, ரிந்து ரவி ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி, ஏ.எல்.ராஜா இயக்குகிறார். ஒளிப்பதிவு திருவாரூர் ராஜா, இசை ஆர்.எஸ்.ரவி பிரியன், எடிட்டிங் வீரசெந்தில்ராஜ், டான்ஸ் மாஸ்டர் மஸ்தான், பாடல்கள் ஏ.எல்.ராஜா, கவிஞர் செங்கதிர் வாணன், சண்டைப் பயிற்சி ஸ்பீடு மோகன், கலை ஜெயசீலன், ஸ்டில்ஸ் சாய் சக்தி, பிஆர்ஓ கோவிந்தராஜ், இணைத் தயாரிப்பு டெய்லி குருஜி, தயாரிப்பு ஏ.எல்.ராஜா.

“சாதிகள் இல்லையடி பாப்பா,
குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லுதல் பாவம்” என்ற பாரதியாரின் பாடல் தான் கதையின் மையக் கருத்து. சூரியன் மேல் காதல் கொண்ட சூரியகாந்தி பூப்போல, கதாநாயகி, நாயகனை காதலிப்பதும், காதலுக்குள் சாதி பேய் நுழைந்து, என்ன செய்கிறது என்பதும் தான் ‘சூரியனும் சூரியகாந்தியும்’ படத்தின் கதை.

வேல் முருகன், முகேஷ், நேகா ஆகியோர் படத்தின் இனிமையான பாடல்களை பாடியுள்ளனர்.

பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்களால் படம் தொடங்கப்பட்டு, நான்கு பாடல்கள், மூன்று சண்டைக் காட்சிகளுடன், மதுரை, தேனீ, திண்டுக்கல், மைலம், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில், முப்பத்தைந்து நாட்களில் படப்பிடிப்பு நிறைவுப் பெற்று, இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

PRO_கோவிந்தராஜ்

Related posts

ஜோதி (பட விமர்சனம்)

Jai Chandran

ஊதியம் வழங்காமல் வஞ்சிக்கப்படும் தூய்மைப் பணியாளர்கள்!: கமல்ஹாசன்

Jai Chandran

Ranina Reddy turns to an Independent Singer

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend