Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சந்தீப்- சிம்ஹா நடிக்கும் பான் இந்திய படம் “ராவண கல்யாணம்”

நடிகர் சிம்ஹா மற்றும் தெலுங்கின் முன்னணி நடிகரான சந்தீப் மாதவ் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு ‘ராவண கல்யாணம்’ என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா ஹைதரா பாத்தில் சிறப்பாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் ஜே. வி. மது கிரண் இயக்கத்தில் தயாராகும் முதல் படைப்பு ‘ராவண கல்யாணம்’. இதில் நடிகர் சிம்ஹா மற்றும் தெலுங்கின் இளம் நடிகரான சந்தீப் மாதவ் ஆகிய இருவரும் கதையின் நாயகர் களாக நடிக்கிறார்கள். இவர்ப களுக்கு ஜோடியாக நடிகை தீப்ஸிகா மற்றும் புதுமுக நடிகை ரீது காயத்ரி ஆகியோர் நடிக்கி றார்கள். மேலும் இவர்களுடன் நடிகர் ராஜேந்திர பிரசாத், சத்ரு, ராஜ்குமார் காசி ரெட்டி, மதுசூதன், குண்டு சுதர்சன், ஆனந்த், மணி பிரபு, சரத் ரவி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சிதம் மனோகர் ஒளிப்பதி செய்யும் இந்த திரைப் படத்திற்கு ரதன் இசையமைக் கிறார். வசனத்தை பவானி பிரசாத் எழுத, ஸ்ரீகாந்த் பட்நாயக் படத்தொகுப்பு பணிகளை கவனிக் கிறார். ரொமாண்டிக் மாஸ் என்டர்டெயின்மென்ட் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை முத்ராஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் ஹால்சியன் மூவிஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பா ளர்கள் ரேஷ்மி சிம்ஹா மற்றும் அருண்குமார் சுராபனேனி ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கி றார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படத்தை சிம்ஹா மற்றும் அல்லூரி சுரேஷ் ஆகிய இருவரும் இணைந்து வழங்குகிறார்கள்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘ராவண கல்யாணம்’ படத்தின் தொடக்க விழாவில், திரையுலகை சேர்ந்த பலர் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Related posts

பிறந்தநாள் வாழ்த்துக்கள் இயக்குனர் ‌விஜய் ஸ்ரீ ஜி

Jai Chandran

தங்கர்பச்சானுடன் ஜி.வி.பிரகாஷ் இணையும் ” கருமேகங்கள் ஏன் கலைகின்றன”

Jai Chandran

Aditya Music acquires audio rights of Ram Pothineni’s “RAPO19”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend