காமன்மேன் (Common Man) என்கிற தலைப்பில் செந்தூர் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் (Chendur Films International) தயாரிக்க நடிகர் சசிகுமார் நடிக்கவிருக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு டீஸர் சமீபத்தில் இணையதளத்தில் வெளியானது. ஆனால் இந்த தலைப்பின் உரிமை எங்களிடம் தான் உள்ளது என்று ஏஜிஆர் ரைட் பிலிம்ஸ் (AGR RIGHT FILMS) என்கிற தயாரிப்பு நிறுவனம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிடம் முறையீடு செய்தது.
டைரக்டர் சுசீந்திரன் இணை இயக்குனரான அறிமுக இயக்குநர் விஜய் ஆனந்த் சார்பில் 2018 ஆண்டே “COMMON MAN” என்கிற தலைப்பு தென்னிந்திய திரைப்பட சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த உரிமை தொடர்பாக அனைத்து ஆதார ஆவணங்களும் தங்களிடம் இருப்பதாக ஏஜிஆர் ரைட் பிலிம்ஸ் தெரிவித்துள்ளது.
தற்போது செந்தூர் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் காமன் மேன் என்கிற தலைப்பில் படம் அறிவிக்கவே, அதில் ஒப்பந்தமாகி இருக்கும் நடிகர் சசிகுமாரிடம்.. ஏஜிஆர் ரைட் பிலிம்ஸ் தலைப்பு தொடர்பான பிரச்சினை குறித்து பேசியது. ஆனால், சசிகுமார் எதுவானாலும் பிலிம்சேம்பர் மூலம் பேசி தீர்த்து கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
அதன் பின்னர் இது தொடர்பாக ஏஜிஆர் ரைட் பிலிம்ஸ் பிலிம் சேம்பரை அணுகவே, சேம்பர், இதுகுறித்து தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திடம் இருந்து விளக்கம் கேட்டுள்ளது. பதில் வர தாமதமான நிலையில்,
செந்தூர் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் காமன் மேன் என்கிற தலைப்பில் பட டீசர் வெளியிட்டுவிட்டது.
இதன் பிறகு ஏஜிஆர் ரைட் பிலிம்ஸ் ,சேம்பரை மீண்டும் அணுகவே, சேம்பருக்கு தயாரிப்பாளர் சங்கத்திடம் இருந்து எந்தவிதமான முறையான பதிலும் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேவையான சட்ட நடவடிக்கைகளை ஏஜிஆர் ரைட் பிலிம்ஸ் எடுத்துக்கொள்ளலாம் என்றும், அதற்கு சேம்பரும் உறுதுணையாக இருக்கும் என பிலிம் சேம்பர் அறிவித்துள்ளது.
ஏஜிஆர் ரைட் பிலிம்ஸ் காமன்மேன் என்கிற தலைப்பு தங்களுக்கே சொந்தம் எனவும், இந்த தலைப்பில் தங்களை தவிர வேற எந்த நிறுவனத்தின் படத்திற்கும் அனுமதிசான்று வழங்கக் கூடாது என்று சென்சார் போரிடம் சட்ட ரீதியான நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது.
அதற்கு சென்சார் போர்ட் இப்பொழுது, ‘காமன்மேன்’ டைட்டிலை ஏஜிஆர் ரைட் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு முறையாக சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். இப்படத்தின் மோஷன் போஸ்டர்r விரைவில் வெளிவரும்..
