Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

83 (பட விமர்சனம்)

படம்: 83

நடிப்பு: ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ஜீவா, பங்கஜ் திரிபாதி, தஹிர் ராஜ் பஹசின், ஜதின் சமா, சிராக் பட்டில், தின்கர் சர்மா, ஹார்டி சந்தனு, நிஷாந்த் தஹியா, சாஹில் கட்டார், அம்மி விர்க், ஆதிநாத் கோதரே, தஹாரியா கர்வா, ஆர் பத்ரி

தயாரிப்பு: தீபிகா படுகோனே, கபிர்கான்

இசை: ஜூலிய்ஸ் பேக்யம்

ஒளிப்பதிவு: அசீம் மிஷ்ரா

இயக்கம்: கபிர் கான்

பி.ஆர். ஓ : சுரேஷ் சந்திரா

 

கிரிக்கெட் வீரர்கள் தோனி, சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கையை மையமாக வைத்து ஏற்கனவே திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்றிருக்கின்றன. அந்த வரிசையில் இந்த வீரர்களின் முன்னோடி எய்ட்டிஸ் கிட்ஸ்களின் கனவு நாயகன் கிரிக்கெட் கேப்டன் கபில்தேவ் வாழ்க்கையை மையமாக வைத்து 83 படம் உருவாகி இருக்கிறது. இப்படம் கபிலின் வாழ்க்கை கதை என்பதைவிட இந்திய அணி உலககோப்பை வென்று உலகையே இந்தியா அணி பக்கம் திரும்பி பார்க்க வைத்த கிரிக்கெட் போட்டியின் பதிவு என்றால் பொருந்தமாக இருக்கும்.

இந்திய அணி உலககோப்பை கிரிக்கெட்டில் விளையாட கேப்டன் கபில்தேவ் தலைமை யில் லண்டன் செல்கிறது. அங்கு நடக்கும் போட்டிகளில் மேற்கு இந்திய தீவு அணி, ஆஸ்திரேலிய அணி என பல்வேறு ஜாம்ப வான் அணிகளுடன் இந்திய அணி மோதி எப்படி உலககோப்பையை வென்றது என்பதை இப்படம் சொல்கிறது.

1983ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த போட்டியில் இந்தியா கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்ற நிகழ்வை இவ்வளவு தத்ருபமாக மீண்டும் படமாக்க முயன்றாலும் நடக்குமா என்று சந்தேகப்படும் அளவுக்கு 83 படம் அச்சு அசலாக படமாகி இருக்கிறது. அதற்காக இயக்குனர் கபிர் கானுக்கு ஒரு கைதட்டலை தரலாம்.
இயக்குனர் கபிர் கான் தன் வேலையை எப்படி பழமை மாறாமல் உணர்ச்சிகள் வெடிக்க படமாக்கி இருக்கிறாரோ அதே அளவுக்கு ரன்வீர் சிங் கேப்டன் கபில்தேவ் வேடத்தை நூற்றுக்கு நூறு சதவிதம் நிறைவாக நடித்து கவர்கிறார்.
கபில் காட்டிய நிதானம், கோபம், நகைச்சுவை, காதல், சோகம், வீரம் என எல்லா அம்சங்களை யும் துல்லியமாக ரன்வீர் சிங் காட்டி இருக்கி றார் என்பதைவிட கபில்தேவாக வாழ்ந்திருக் கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

கிரிக்கெட் மைதானத்தில் மேற்கிந்திய தீவு அணியை எதிர்கொள்ளும் இந்திய அணியினர் எவ்வளவு ரத்த காயத்துடன் தங்களை அர்பணிக்கிறார்கள் என்பது கண்கலங்க வைக்கும் தருணங்களாக காட்சிபடுத்தியி ருப்பது சிலிர்ப்பு.

இந்திய அணி என்றாலே முதல் சுற்றிலேயே தோற்று நாடு திரும்பிவிடுவார்கள் என்று கேலி பேச்சுக்களும், பத்திரிகை செய்திகளும் அந்த காலகட்டத்தில் வீரர்களை எப்படி சோர்வடையச் செய்கிறது. அவற்றை கண்டு கோபம் அடைந்தாலும் அதை வெளிக் காட்டாமல் தனது அணி வீரர்களுக்கு உற்சாக வார்த்தைகள் சொல்லி அவர்களை வெற்றி வீரர்களாக மாற்றும் ரன்வீர் சிங், கபில்தேவ் தான் முதலாவது மிஸ்டர் கூல் கேப்டன் என்பதை நிரூபிக்கிறார்.

ஆட்டக்களத்தில் பந்துக்களை சிக்க்ஸருக்கு விளாசும் கபில் (ரன்வீர் சிங்) தங்கள் அணியை மட்டமாக பேசும் வர்ணனையாளர்களின் அறை கண்ணாடியை கிரிக்கெட் பந்தை விளாசி அடித்து தூள் தூளாக்குவது அரங்கை கரவொலிக்குள் மூழ்கடிக்கிறது.

கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்தாக வேடம் ஏற்றிருக்கும் ஜீவா , கிரிக்கெட் கிரவுண்டில் மட்டுமல்லாமல் பார்ட்டிகளிலும் வெளுத்து வாங்கி கலகலப்பு ஏற்படுத்துகிறார். இவ்வளவு பெரிய இந்தி நட்சத்திரங்களுக்கு இடையே தனது நடிப்பின் மூலம் தனித்து வத்தை காட்டி மனதில் இடம் பிடிக்கிறார் ஜீவா.

இந்திய அணிக்குள் வீரர்களுக்கு இடையே ஏற்படும் மனக்கசப்பு, போதிய பண வசதி இல்லாமல் அணியின் மேனேஜர் புலம்பும் புலம்பல் என ரசிகர்களை 83ம் ஆண்டுக்கே நேரடியாக அழைத்துச் சென்றிருக்கிறது.

மதமோதலை தடுக்க அன்றைய பிரதமர் இந்திரா காந்தி உலக கோப்பை கிரிக்கெட்டை கருவியாக பயன்படுத்தும் காட்சி இன்ப அதிர்ச்சி.

கபில்தேவ் வாழ்க்கை கதையில் நிஜ கபில்தேவ் இல்லாமலா? ஒரு காட்சியில் ரன்வீர் சிங் அடிக்கும் சிக்ஸரை பார்வையாளர்கள் இருக்கையில் அமர்ந்தபடி கேட்ச் பிடித்து சூப்பர் என்று பாராட்டும் அந்த நொடி அரங்கே அதிர்கிறது.

தீபிகா படுகோன் என்ட்ரி பசுமை கூட்டுகிறது.

மேற்கிந்திய தீவு அணியில் அந்த அணியின் கேப்டன் விவின் ரிச்சர்ட்ஸ் கதாபாத்திரம் ஏற்றிருக்கும் நடிகர் அசால்ட்டாக விவின் வேடத்தை செய்துகாட்டி மிரள வைக்கிறார்.
இயக்குனர் கபிர் கானுக்கு நேர்த்தியான இயக்கத்துக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கலாம். இசை, ஒளிப்பதிவு எல்லாமே 83ம் ஆண்டுக்கே ரசிகர்களை இழுத்துச் செல்கிறது.

83- இந்திய திரைப்பட வரலாற்றில் மைல் கல்லாக பதிக்கப்பட வேண்டிய அற்புத படைப்பு.

by
க.ஜெயச்சந்திரன்

Related posts

காட் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு திரும்பும் நடிகர் தேஜ்

Jai Chandran

Lyca Production Gives a Chance to Direct a Film

Jai Chandran

Chiranjeevi’s Heartfelt Gesture Towards Fan Rajeshwari

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend