Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஜாங்கோ (பட விமர்சனம்)

படம்: ஜாங்கோ
நடிப்பு: சதீஷ்குமார், மிருணாளினி ரவி, கருணாகரன், வேலு பிரபாகரன்
தயாரிப்பு: சி.வி.குமார்
இசை: ஜிப்ரான்
ஒளிப்பதிவு: கார்த்திக் கே தில்லை
இயக்கம்: மனோ கார்த்திகேயன்

தமிழில் எப்போதாவது சில வித்தியாசமான முயற்சியில் படங்கள் வருவதுண்டு அந்த வரிசையில் டைம் லூப் என்ற வித்தியாசமான முயற்சியுடன் கூடிய கதை ஜாங்கோ.

ஹீரோ சதீஷ்குமார் ஒரு பிரபல டாக்டர். அவர் காலையில் எழுந்து மருத்துவ மனைக்கு புறப்படுகிறார். வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன் வேலைக்காரி ஒரு பிளேட்டை உடைக்கிறார். அங்கிருந்து ஹீரோ கீழே வந்ததும் சிறுவன் ஒருவன் எதிர்வீட்டு பெண்ணை சைட் அடித்துக் கொண்டிருக்கிறான். டாக்டருக்கு குடியிருப்பு வாசி ஒருவர் வணக்கம் வைக்கிறார். அங்கிருந்து காரில் புறப்பட்டு செல்லும் டாக்டர் தனது மனைவியை யாரோ சுட்டு கொல்வதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இந்த சம்பவங்கள் எல்லாம் மறுநாளும் டாக்டருக்கு தூங்கி எழும்போது நடக்கிறது. அடுத்த நாள், அடுத்த நாள் என்று இந்த நிகழ்ச்சிகள் தொடர்கிறது. இதுபற்றி பிரபல விஞ்ஞானி வேலு பிரபாகரனிடம் டாக்டர் ஆலோசிக்கும்போதுதான் டைம் லூப் எனப்படும் திரும்ப திரும்ப ஒரே நாளில் தான் சிக்கி இருக்கும் உண்மை தெரிகிறது. இதை பயன்படுத்தி தனது மனைவியை முன்கூட்டியே திட்டமிட்டு காப்பாற்ற பல வழிகளில் முயற்சிக்கிறார் டாக்டர். அதில் அவரால் சாதிக்க முடிந்ததா? இந்த விஞ்ஞான கோளாறின் பாதிப்பு எப்படி சரி செய்யப்படுகிறது என்பதற்கு படம் புதிய கோணத்தில் விடை தருகிறது.

ஹாலிவுட்டில் இதுபோல் சைன்ஸ் பிக்ஸன் கதைகள் அடிக்கடி வருவதுண்டு தமிழிலும் எப்போதாவது டைம் டிராவல் கதைகள் வருவதுண்டு. அந்த வரிசையில் ஜாங்கோ ஒரு டைம் லூப் கதை.

டைம் லூப் என்பது ஒரு நபருக்கு மறுநாள் என்பதே இருக்காது. முதல்நாளில் என்ன நடக்கிறதோ அதே சம்பவங்கள்தான் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நாட்களிலும் நடக்கும். இப்படியொரு சிக்கலில் சிக்கிக் கொள்பவர்தான் ஹீரோ சதீஷ்குமார். திரும்ப திரும்ப ஒரே சம்பவங்களில் தான் சிக்குவதை கண்டு அதிர்ச்சி அடையும் சதீஷ், அதிலிருந்து மீள முடியாமல் டென்ஷனாவதும் படத்தை விறுவிறுப் பான கட்டத்துக்கு கொண்டு செல்கிறது.
திரும்ப திரும்ப ஒரே காட்சிகள் படம் முழுக்க வருவதால் கதையை உன்னிப்பாக கவனிக்காதவர்கள் நிச்சயம் குழப்பம் அடைவார்கள். தொடக்கத்திலிருந்து தெளிவாக க பார்க்கும் ரசிகர்களுக்கும் ஒரு சில இடத்தில் குழப்பத்தில் சிக்காமல் இருக்க முடியாது.
படத்தை இயக்கிய இயக்குனர் மனோ கார்த்திகேயன் இதற்கான திரைக்கதை அமைக்கும்போது அவரே டைம் லூப்பில் சிக்கி இருந்திருப்பரோ என்ற சந்தேகம் எழுகிறது. இந்த கதையைபுரிந்து கொண்டு ஹீரோ சதீஷ்குமார், ஹீரோயின் மிருணாளினி திரும்ப திரும்ப ஒரே காட்சியை எத்தனை முறை நடித்திருப் பார்கள் என்பதை கணக்கெடுக்க முடியாது.

வேலு பிரபாகரன் நிதானமான நடிப்பால் விஞ்ஞானி வேடத்துக்கு சிறப்பான தேர்வு என பேச வைக்கிறார்.

கதையில் நடிகர், நடிகைகள் தவிர இரண்டு மிஷின்களின் வேலைகள்தான் படத்தை ஹாலிவுட் ரேஞ்சுக்கு யோசிக்க வைக் கிறது. நுணுக்கமான கிராபிக்ஸ், வி எப் எக்ஸ் காட்சிகள் கதிர்வீச்சை வெளிப் படுத்தும் வேற்று கிரக எந்திரமும், அந்த கதிர்களை அழிக்க மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட ஜாங்கோ எந்திரத்தின் கதிர் வீச்சு காட்சிகளும் புருவத்தை உயரச் செய்கிறது.

கதிர் வீச்சு மற்றும் எந்திரங்களின் வேலை பாடுகளுக்கு ஏற்ப இசை அமைத்திருக்கும் ஜிப்ரான் உழைப்பும் பாராட்டத்தக்கது. இவர்து இசை முக்கிய பங்கு வகித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் கார்த்திக் தில்லையின் பொறுமைதான் காட்சிகள் அமோகமாக வர காரணம்.
டைம் லூப் என்ற கதையை யோசித்தாலும் அதை ஒரு படமாக இயக்குவது என்பது மிகவும் கடினம். அந்த வேலையை கச்சிதமாக செய்து முடித்திருக்கும் இயக்குனர் மனோ கார்த்திகேயனுக்கு ஒரு அப்ளாஸ் தரலாம்.

ஜாங்கோ – தமிழில் மாறுபட்ட டைம் லூப் கதை.

Related posts

Prabhas On Baahubali’s Global Impact

Jai Chandran

கார் கேட்ட மகளுக்கு பாடம் கற்று தந்த நடிகர் ரகுமான் !

Jai Chandran

முதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு பெப்சி வாழ்த்து..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend