Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சுஜா ரகுராம் மனோஜ் இயக்கத்தில் ரகுராமின் பேரக்குழந்தைகள் நடிகர்களாக அறிமுகம்

 

பிரபல நடன இயக்குநர் ரகுராமின் பேரக்குழந்தைகள் நடிகர்களாக அறிமுகமாகும் படத்தை சுஜா ரகுராம் மனோஜ் இயக்குகிறார்

பிரபல நடன இயக்குநர்கள் ரகுராம் மற்றும் கிரிஜா ரகுராமின் மகள் சுஜா ரகுராம் மனோஜ், தனது தந்தையிடம் நடனம் மற்றும் இயக்குநர் பயிற்சி பெற்றவராவார். பல்வேறு இந்திய மொழிப்படங்களில் இவர் நடித்துள்ளார். கமல்ஹாசன், பிரபுதேவா, கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர் மற்றும் பல்வேறு பிரபல இயக்குநர்களுடன் பணியாற்றி உள்ளார்.

தொழிலதிபர் மனோஜ் வேணுகோபாலை மணந்த பின்னர் அமெரிக்காவுக்கு சென்ற சுஜா, அங்கு ஹாலிவுட் இயக்குநர்களான பென் & ஜூடி லெவின், பாயு பென்னட் மற்றும் டேனியல் லிர் ஆகியோருடன் பணிபுரிந்துள்ளார்.

தற்போது இவர், ரகுராமின் பேரக்குழந்தைகளான திரிஷுல் ஆர் மனோஜ் மற்றும் சனா மனோஜ் ஆகியோரை தான் தயாரித்து இயக்க உள்ள படத்தில் நடிகர்களாக அறிமுகப்படுத்த உள்ளார். இசையை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ள இத்திரைப்படத்திற்கு டேக் இட் ஈசி என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகிறார் சுஜா.

நட்பைப் பற்றிப் பேசும் இத்திரைப்படத்தில், சாம் சி எஸ் இசையமைத்து பென்னி தயாள் மற்றும் சனா மனோஜ் பாடியுள்ள ஒரு சிறப்பு பாடல் இடம்பெறுகிறது. திரிஷுல் ஆர் மனோஜ், சனா மனோஜ் மற்றும் நிகில் மகேஷ் இப்படத்தில் முக்கிய கதாபாத் திரங்களில் நடிக்கின்றனர்

திரைப்படத்துறையில் நுழைவதன் மூலம், கே சுப்பிரமணியம் அவர்களின் புகழ்மிக்க பாரம்பரியத்தை அவரது கொள்ளு பேரக்குழந்தைகள் தொடர்கிறார்கள்.

Related posts

The Screening Date of “Maayon” is announced.

Jai Chandran

தமன் நடிக்கும் ‘ஜென்ம நட்சத்திரம்’ இசை வெளியீடு

Jai Chandran

JaiBhim Hindi Trailer out now

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend