Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

லாபம் (பட விமர்சனம்)

படம்: லாபம்

நடிப்பு: விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, கலையரசன், டேனி, ரமேஷ் திலக்,
தயாரிப்பு: விஜய்சேதுபதி
இசை: டி.இமான்
ஒளிப்பதிவு: ராம்ஜி
இயக்கம்:எஸ். எஸ். பி. ஜன நாதன்

வெளியூரில் இருக்கும் விஜய்சேதுபதி 7 ஆண்டு களுக்கு பிறகு தனது பெருவயல் கிராமத்துக்கு வருகிறார். அங்குள்ளவர் களின் பஞ்சமி நிலங்களை ஊர் பணக்காரர் ஜெகபதி பாபு அபகரித்து வைத்திருக் கிறார். அதை மீட்டு விவசாயிகளை இணைத்துக் கொண்டு கூட்டு பண்ணை விவசாயம் செய்கிறார். விளை பொருட்களுக்கு விவசாயிகளே விலையும் நிர்ணயிக்க செய்கிறார் விஜய்சேதுபதி. இதனால் கார்ப்பரேட் ஆளான ஜெகபதி கோபம் அடையும் ஜெகபதிபாபு, விஜய் சேதுபதியை தீர்த்துக்கட்ட முயல்கிறார். அவரால் அதை செய்ய முடிந்ததா என்பதற்கு படம் பதில் சொல்கிறது.

விவசாயம் தான் நம் நாட்டின் முதுகெலும்பு என்பார்கள் அந்த வகையில் பல படங்கள் விவசாயம் சார்ந்த கதைகளாக வந்திருக்கிறது. லாபம் படத்தை பொறுத்த வரையில் விளை பொருட் களுக்கு என்ன விலை நிர்ணயிப்பது என்ற உரிமையை விவாயிகளிடம் தர வேண்டும் என்று இயக்குனர் எஸ். பி. ஜனநாதன் அழுத்மாக கூறி உள்ளார்.
பொது உடமை கருத்துக்கள், விவசாயிகளின் பிரச்னை என அர்த்தமுள்ள படங்களை மையமாக கொண்டு படங்களை இயக்கும் ஜனநாதன் இப்படத்தில் விவசாய பிரச்னைகள், கார்பரேட்களால் பாதிக்கப் படும் விவசாயிகள் குறித்து துணிச்சலான கருத்துக் களை எடுத்துச் சொல்லி இருக்கிறார் .
பஞ்சமி நிலங்களை மீட்க போராடும் விஜய்சேதுபதி சிவப்பு சிந்தனை உணர்ச்சி கரமானது.
விவசாய சங்க தலைவராக தேர்வானபிறகு அவரது வேகம் அதிகரிக்கிறது. சரமாரியாக உழைக்கும் வர்கத்திற்கான வசனங்கள் பேசி அசரவைக்கிரார் விஜய் சேதுபதி.

ஹீரோயின் ஸ்ருதிஹாசன் தனது பங்கை நிறைவாக செய்திருக்கிறார். அவ்வப்போது விஜய்சேதுபதிக்கு துணையாக களத்தில் நிற்கிறார்.
விஜய்சேதுபதியின் நண்பர்கள் கலையரசன் டேனி போன்றவர்களின் நடிப்பும் கைகொடுக்கிறது.

கார்ப்பரேட் எண்ணத்துடன் விவசாயிகளை பழிவாங்க எண்ணுவதும் அவர்களுக் காக போராடும் விஜய்சேது பதியை பழிவாங்க துடிப்பதுமாக தனது வில்லத்தனத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார் ஜெகபதிபாபு.
டி. இமான் இசையில் பாடல்கள் ரசிக்கலாம். ராம்ஜியின் ஒளிப்பதிவு பளிச்.
லாபம்- சிவப்பு சிந்தனை  விவசாய போராளி.

Related posts

Amit Bhargav and Sriranjani are doing a fundraiser to buy oxygen concentrators

Jai Chandran

Thirumalai Nagar, Ramapuram Justice must be upheld:MNM

Jai Chandran

கட்டிலில் தமிழ்பெண்ணாக மாறிய சிருஷ்டி டாங்கே

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend