Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஃபேமிலி ( குறும்பட விமர்சனம்)

படம்: ஃபேமலி

நடிப்பு: பூர்ணிமா பாக்யராஜ், விஜித், லாவண்யா, பாண்டி,  மாஸ்டர் சாய் யோகன், மாஸ்டர் மித்ரன், பேபி த்ரினாராயணி ஷரத்,  பேபி ரோஷினி ஶ்ரீ

ஒளிப்பதிவு: எல். கே. விஜய்

இசை நரேன் பாலகுமார்

இயக்கம்: உதயா

 

நடிகராக இருந்த உதயா தரமான ஒரு இயக்குனராக உயர்ந்திருப் பதை பல்வேறு விருதுகளை பெற்ற செக்யூரிட்டி குறும்படத்துக்கு பிறகு ஃபேமிலி குறும்படம் மூலம் மீண்டும நிரூபித்திருக்கிறார்

கணவன், மனைவி கருதது வேறுபாட்டால் இன்றைக்கு குடும்ப கோர்ட் வாசலில் ஏராளமான இளம் தம்பதிகள் விவாகரத்து கேட்டு காத்துக்கிடக்கின்றனர். அப்படியொரு தம்பதியின் கதையை நச்சென இயக்கி குறும்படத்திலும் கண்களில் கண்ணீர் வரவழைக்க முடியும் என்பதை ஃபேமிலி உணர்த்தி யிருகிறது.

குடும்ப நல கோர்ட் நடுவராக நடித்திருக்கும் பூர்ணிமா பாக்யராஜ் ஒரு குடும்பத்தை இணைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பேசும் வசனங்கள் நெஞ்சில் நிறைகிறது.

இறைவன் இணைத்ததை மனிதர்கள் பிரிக்காதிருப்பார் களாக என்று பூர்ணிமா சொல்வதில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கிறது.

கணவன் மனைவியாக நடித்திருக்கும் ஜோடிகளும் கிடைக்கும் ஒரு சில நிமிடங்களில்  தங்களின் நடிப்பை அழகாக வெளிப்படுத்தி உள்ளனர். குழந்தை களாக நடித்திருக்கும் இருவரும் பேசும் வசனஙகள் நிஜதத்தில் பிரிந்திருப்பவர்கள் கேட்டால் அவர்களை இணைத்துவிடும்.

மீண்டும் இந்த பாராட்டெல்லாம் இயக்குனர் உதயாவைத்தான் சேரும்.

அளவான ஒளிப்பதிவு, குறும்படத்தில் ஒரு பாடல், பாண்டியை வைத்து கொஞ்சம் காமெடி என  முழு படத்துக்கான கருவை உள்ளடக்கி இருக்கி றார்கள்.

விரைவில் பெரிய படத்தை இயக்கும் அளவுக்கு தனது தகுதியை உயர்த்திக்கொண்டி ருக்கிரார்  உதயா.

ஃபேமிலி – இன்றைய இளம் தம்பதிகள் பாரக்க வேண்டிய படம்.

 

 

 

 

Related posts

எஸ்.தாணு, தனுஷ், விஜய்சேதுபதிக்கு தேசிய விருது

Jai Chandran

விஜய்- ஜோதிகா நடித்த குஷி ரீ ரிலீஸ் – எஸ் ஜே சூர்யா பேட்டி..

Jai Chandran

லவ் மேரேஜ் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend