Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகை சித்ரா மாரடைப்பில் மரணம்

சேரன் பாண்டியன், பெரிய குடும்பம், கோபாலா கோபாலா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் சித்ரா. இவர் நல்லெண்ணை  விளம்பரத்தில் நடித்ததால் நல்லெண்ணை சித்ரா என்றும் அழைப்பார்கள்.

சித்ரா சென்னை சாலிகிராமம் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு அவர் திடீர் மாரடைப்பில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 56.

நடிகை சித்ராவுக்கு ஸ்ருதி என்ற ஒரே பெண் இருக்கிறார். அவர் இந்தாண்டு பிளஸ் டூ முடித்துள்ளார். குழந்தை யை வளப்பதற்காகவே நடிக்காமல் பல ஆண்டுகள் இருந்தார்.

இன்று மாலை 5′ மணிக்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது!

நடிகை சித்ரா கடைசியாக நடித்த படம் “என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா” என்ற படத்தில் பிளாஷ் பேக் காட்சியில் பள்ளி மாணவியாக நடித்தார். கடந்த 2020 ஜனவரி 3’ம் தேதி இப்படம் வெளி யானது.

தினம் ஏராளமான பறவைகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு அளிப்பார் சித்ரா. ஏராளமான காக்கைகள் இவர் வீட்டின் மொட்டை மாடியில் நேரம் தவறாமல் வந்து, உணவுக்காக கரையும். இதற்காகவே வெளியூர் பயணத்தை தவிர்ப்பார்!

சித்ராவின் கணவர் விஜயராகவன் சில மாதங்களுக்கு முன் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். கணவரை பராமரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

 

Related posts

ஆசிரியர் பணி நியமனத் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்: கமல் கட்சி கோரிக்கை

Jai Chandran

2K லவ்ஸ்டோரி” ஹீரோ ஜெகவீரை அறிமுகம் செய்த ராமராஜன்

Jai Chandran

நடிகர்-இயக்குனர் பாபுகணேஷ் மகன் திருமண நிச்சயதார்த்தம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend