Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இன்று காலை அமெரிக்கா பறந்தார் ரஜினிகாந்த்: ஒரு மாதம் சிகிச்சை மற்றும் ஓய்வு

சிறுத்தை சிவா இயக்கும்  அண்ணத்த படத்தில் ரஜினிகாந்த நடித்து வருகிறார்.  இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்தாலும் கொரோனா காலகட்டத்தில் இடையைடையே படப்பிடிப்பு பாதிக்கபட்டது.
கொரோனா தொற்று குறைந்து ஊர்டங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் சென்ற 2020ம் ஆண்டு ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு  மீண்டும் நடந்தது அப்போது ஷுட்டிங்கில் சிலருக்கு கொரோனா தொற்று பரவியதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ர்ஜினிகாந்தும் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இந்நிலையில் வீட்டில் ஓய்வு எடுத்து வந்த ரஜினிகாந்த் சமீபத்தில் மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் இதில் எடுத்து முடிக்கப்பட்டன.
இப்படத்தில் ரஜினியுடன் மீனா, குஷ்பு, நயன்தரா கீர்த்தி சுரேஷ். பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் டப்பின் பணியை ரஜினிகாந்த் விரைந்து முடித்து வரும் தீபாவளி தினத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர்.
இந்நிலையில் ரஜினிகாந்த் உடல்நிலை பரிசோதனை,  உயர் சிகிச்சை எடுக்க எண்ணினார். அமெரிக்கா சென்று அதற்கான சிகிச்சை பெற முடிவு செய்தார். கொரோனா காலகட்டம் என்பதால் அமெரிக்காவுக்கு தனி விமானத்தில் செல்ல மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தார். அந்த அனுமதி கிடைத்தது.
நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ்  அமெரிக்காவில் தங்கி இருக்கின்றனர்.   அவர்கள் ரஜினியை உடனிருந்து  கவனித்து கொள்வார்கள் . ஒரு மாத சிகிச்சை மற்றும் ஓய்வுக்குப் பிறகு  ரஜினிகாந்த், ஜூலை 8-ஆம் தேதி இந்தியா திரும்ப உள்ளார். வந்தவுடன் அண்ணாத்த படத்தின் டப்பிங்கை முடித்துகொடுக்க உள்ளார். திட்டமிட்டபடி திபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர்.

Related posts

லாக் பட விழா: பாக்யராஜிடம் எம் ஜி ஆர் கேட்ட கேள்வி

Jai Chandran

‘ஹவுஸ் மேட்ஸ்’ ஹாரர் படமா? நடிகர் தர்ஷன் பதில்

Jai Chandran

Aatish single-mindedly wants to destroy Tiger

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend