Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“என்னடி முனியம்மா கண்ணுல மைய்யி” பாடல் புகழ் டி.கே.எஸ்.நடராஜன் காலமானார்

பழம்பெரும் நடிகர் டி.கேஎஸ் நடராஜன் காலமானார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து நடிகர் சங்கம் அறிக்கை:
பழம்பெரும் நடிகரும், நாட்டு புற பாடகரும், “என்னடி முனியம்மா கண்ணுல மைய்யி” பாடலின் மூலம் புகழ் பெற்ற பாடகருமான டி.கே.எஸ்..நடராஜன் (வயது 87) இன்று காலை இயற்கை எய்தினார் . இரத்த பாசம், கவலை இல்லாத மனிதன், தேன்கிண்ணம், நேற்று இன்று நாளை, நான் ஏன் பிறந்தேன், குரு, தீ, வருஷம்16, வாத்தியார் உட்பட சுமார் 500 க்கும் மேற்பட்ட ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார்.
அன்னாரது மறைவுக்கு அனைத்து நடிகர் நடிகைகள் சமூகம் சார்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலையும்.. அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்துக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. #RIP !!

இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

Related posts

Prabhas Cheers Anushka Shetty’s Ghaati Trailer

Jai Chandran

சாதனை பெண்களுக்கான விருது நடிகை ஜெயசித்ரா

Jai Chandran

செல்வராஜ் தயாரித்து, இயக்கும் “வாழை’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend